புகைப்பட ஹைக்கூ 55

புகைப்பட ஹைக்கூ 55


மஞ்சள் பூசிவிட்டு
மறைந்துகொண்டது
மாலைச்சூரியன்!

குளத்தில் குளித்து
குன்றில் ஏறிமறைந்தது
சூரியன்!

மச்சான் வரவிற்கு
காத்திருக்கிறது
மஞ்சள் பூசிகுளித்த ஆறு!

இறங்கி வந்தது
பொன் நகை!
அந்திசூரியன்!

மஞ்சள் பூசியதும்
வெட்கப்பட்டு மறைந்தது
சூரியன்!

மனங்களை திருடிக்கொண்டு
மலையில் மறைந்தது
சூரியன்!

தங்கக் கூரை
வேய்ந்தது
சூரியன்!

மேகத்திரை விலக்கி
மேதினி மேனி
படர்ந்தது சூரியன்!

ஆற்றுக்கு
அணிகலன் பூட்டியது
சூரியன்!

அந்தியை சந்திக்க
அலங்கரித்துக் கொண்டது
பூமி!

இருள் திருடிச்
சென்றது
பொன்வேய்ந்த கூறை

விடைபெறுகையில்
உடைமாற்றியது
மஞ்சள் சூரியன்!

சுற்றிவந்த களைப்பில்
பற்று போட்டுக்கொண்டது
சூரியன்!

பொன்னாபரணம் சூட்டியது
பொதிகை சூழ் மேகத்திற்கு
 மாலைச்சூரியன்!

 
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

 


Comments

 1. அனைத்தும் ரசிக்கத்தக்கவை... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. ஆழமான சிந்தனையுடன் கூடிய
  அற்புதமான கவிதைகள்
  பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. வண்ணமயமான வரிகள் அண்ணா... பகிர்விற்கு நன்றி...

  ReplyDelete
 4. அனைத்தும் நன்று அண்ணா. தங்களின் கலைக்கண்ணோட்டம் கவித்துவமாய் காட்சியளிக்கிறது. நல்லதொரு கவிதையை வடித்தமைக்கு பாராட்டுக்களும் நன்றிகளும் சகோததரே..

  ReplyDelete
 5. அழகான சொல் வரிகள் ரசனை மிக்கவை....!

  ReplyDelete
 6. அருமை......

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2