உங்க கம்ப்யூட்டரை தாக்குமா டி.என்.எஸ் சேஞ்சர் வைரஸ்?


வாஷிங்டன்: ஏய் வைரஸ் வரப்போகுதாமே என்ன செய்யப்போகிறாய் என்ற பேச்சுத்தான் தற்போது எங்குப்பார்த்தாலும் தகவல் பரிமாறக்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வைரஸ் இணையத்தை முடக்கி உங்களின் கணினியை செயல் இழக்கச்செய்து விடும். இது புதிதாக தாக்குதலை தரப்போவதில்லை என்ற நிம்மதியான தகவல் வல்லுநர்கள் தெரிவித்தாலும் ஏற்கனவே உங்கள் கம்ப்யூட்டரில் இந்த வைரஸ் இருந்தால் வரும் 9 ம்தேதி அம்பேல்தான் என்கின்றனர். கம்ப்யூட்டர் இன்ஜினியர்கள்.

டி.என்.எஸ்.,( டொமைன் நேம் சிஸ்டம் ) என்பது நாம் வைத்துள்ள தளத்தின் முகவரியை கணினிக்கு புரியும் வகையில் ஐ.பி.எண்ணாக மாற்றி அந்த தளங்கள் திறக்க உதவுகிறது. தற்போது டி.என்.எஸ்.,சேஞ்சர் ( அலூரியன் மால்வேர் ) என்ற வைரஸ் உருவாக்கி இதன் மூலம் உங்கள் சிஸ்டத்தை செயல் இழக்கச்செய்யும் நாச வேலையில் அயல்நாட்டவர்கள் 7 பேர் இறங்கினர் . இது கடந்த நவம்பரில் பரப்பி விடப்பட்டது. இதன் மூலம் பல கம்ப்யூட்டர்கள் பாதிக்கப்பட்டன. மேலும் பாதிப்பில் இருந்து தப்பிக்க இதனை அமெரிக்க உளவு பிரிவு எப்.பி.ஐ., மாற்று சர்வரை நிறுவி உதவியது. இந்த சர்வரை நிறுத்திட முடிவு செய்திருப்பதால் இந்த வைரஸ் மீண்டும் வரும் 9 ம் தேதி செயல்பட துவங்கி விடுமாம். இதனால் உலகம் முழுவதும் பல லட்ச கம்யூட்டர்கள் செயல் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

வைரஸ் பாதிப்பு உள்ளதா என கண்டறியுங்கள் : எனவே டி.என்.எஸ்., சேஞ்சர் என்ற வைரஸ் பாதிக்கப்பட்டிருக்கிறதா என்று அறிந்து முன்சோதனை செய்து கொள்ளவும். பெரும் கார்ப்ரேட் நிறுவனங்கள் ஆண்டி வைரஸ் வைத்திருப்பதால் பாதிப்பில் இருந்து தப்பிக்க முடியும். நடுத்தரமானவர்கள் இது போன்று ஆண்டிவைரஸ் வைக்காத பட்சத்தில் பாதிப்பு வர வாய்ப்புகள் அதிகம். எனவே தங்களின் கம்ப்யூட்டர்களில் இது போன்று வைரஸ் பாதிப்பு உள்ளதா என கண்டறிய நீங்கள் www.dns-ok.us கிளிக் செய்தால் பாதிக்கப்டாமல் இருந்தால் பச்சைக்கலரில் வரும். பாதிக்கப்பட்டிருக்குமானால் சிவப்பு நிற இமேஜ் வரும். வரும் 9 ம்தேதி என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் உள்ளனர் இன்டர்நெட் உபயோகிப்பாளர்கள்.

வைரசை முற்றிலுமாக அழிக்க : ஒருவேளை உங்கள் கணினி பாதிக்க பட்டிருந்தால் முதலில் இந்த படிவத்தை forms.fbi.gov/dnsmalware பூர்த்தி செய்யவும். உங்கள் கணினியில் இருந்து அந்த
வைரசை நீக்குவது எப்படி என இங்‌கே விளக்கம் தரப்பட்டுள்ளது. விண்டோஸ் XP, Vista, 7 கணினிகளுக்கு: DNS Changer வைரசை கணினியில் இருந்து நீக்குவதற்காக பிரபல ஆன்ட்டிவைரஸ் நிறுவனமான அவிரா ஒரு புதிய மென்பொருளை உருவாக்கி உள்ளனர். இந்த லிங்கில் Avira DNS Repair சென்று மென்பொருளை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

டவுன்லோட் ஆகியதும் exe பைலை இரண்டு கிளிக் செய்து இன்ஸ்டால் செய்ய தொடங்கியவுடன் கீழே இருப்பதை போல வந்தால் உங்கள் கணினி பாதுக்காப்பாக உள்ளது. ஆகவே இந்த மென்பொருள் உங்கள் கணினியில் இன்ஸ்டால் ஆகாது.ஒருவேளை பாதிக்கப்பட்டிருந்தால் இந்த மென்பொருள் அந்த வைரசை கண்டறிந்து உங்கள் கணினியில் இருந்து அழித்து விடும்.

மேக்(Mac) கணினிகளுக்கு: மேக் கணினிகளில் இருந்து இந்த வைரசை நீக்க இந்த மென்பொருளை DNS Changer Removal Tool டவுன்லோட் செய்து நீக்கி கொள்ளலாம்.

தகவல் உதவி} தினமலர்.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே!

Comments

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!