கோணலானின் கழுதை! பாப்பா மலர்!
கோணலானின் கழுதை!
கோணங்கிபுரம் என்ற நாட்டை ‘கோணலான்’ என்ற
மன்னன் ஆண்டுவந்தான்.அவனுக்கு அசட்டு நம்பிக்கைகள் அதிகம்! காலையில் கோவேறு
கழுதையைப்பார்த்தால் நல்லது என்பதற்காக படுக்கையறையில் ஒரு கோவேறுகழுதையை கட்டி
வைத்திருந்தான் என்றால் பாருங்கள். இவனது அசட்டு நம்பிக்கைகளுக்கு அளவே இல்லாமல்
போனது. நிறைய போலிச்சாமியார்கள் அறிமுகம் ஆகி நாட்டை கெடுத்து வந்தனர். அவர்களின்
பேச்சை தட்ட மாட்டான் கோணலான்.
அந்த நாட்டின் மந்திரி மன்னனின் கோணல் புத்திக்கேற்ப ஜால்ரா தட்டி
பிழைத்துவந்தான். இல்லாவிட்டால் அவனுக்கு பிழைப்பு இல்லாமல் போய்விடுமே!
சாமியார்கள் கூறினார்கள் என்று பெரிய யாகம் ஒண்றுக்கு ஏற்பாடு செய்த மன்னன்
யாகத்திற்கான பொருட்களை மக்களிடம் பிடுங்கி இருந்தான். இந்த சமயத்தில்தான் அவனுக்கு
பல்வலி வந்தது.
வாயெல்லாம் வீங்கி பேசமுடியாமல் இருந்த மன்னனை கண்ட மந்திரி! மன்னா! என்ன
ஆயிற்று ஏன் இப்படி முகத்தை உம்மென்று வைத்திருக்கிறீர்கள் என்றான். பல்வலியின்
உச்சத்தில் கோபத்தில் மன்னன் கத்தினான். அடேய் முட்டாள் கழுதையே! நானே பல்வலியில்
துடிக்கிறேன்! நீ என்னை உம்மனாம் மூஞ்சி என்கிறாயா? அருகில் நில்லாதே ஓடிப்போ!
என்றான்.
தன்னை கழுதை என்று அசிங்கப்படுத்திவிட்டானே மன்னன்! இவனுக்கு தக்க தண்டணை
புகட்ட வேண்டும் என்று மனதில் கறுவிக் கொண்ட மந்திரி! மன்னா! மன்னிக்க வேண்டும்
தங்களுக்கு பல்வலி என்று தெரியாமல் உளறி விட்டேன் பல்வலிக்கு அருமருந்து என்னிடம்
உள்ளது. தாங்கள் விரும்பினால்.. என்று இழுத்தான் மந்திரி!
அடேய்! அடேய்! முட்டாளே! முதலில்
உன் வைத்தியத்தை சொல்! அப்புறம் மன்னிப்பு எல்லாம்! என்று எரிந்துவிழுந்தான்
கோணலான்! சரி சரி உனக்கு இந்த வைத்தியம் எப்படி தெரியும் அதை முதலில் சொல்!
மன்னா இந்த சிறுவனுக்கு ஏது அவ்வளவு அறிவு! எல்லாம் தங்கள் குருநாதர்
சித்தானந்தா சுவாமிகள் கூறியதுதான் என்றான் மந்திரி! குருநாதர் கூறியதா! அப்படி
என்ன மருந்து அது? குருநாதரே நீங்கள்
இதுவரை கூறவில்லையே அருகில் இருந்த சாமியாரை கேட்டான் மன்னன்.
அ.. அது இழுத்தான் சாமியார். மன்னரே அவருக்கு
இருக்கும் வேலைக்கு இதை என்னிடம் கூறீயதை மறந்திருப்பார் என்ன குருநாதரே என்றான்
மந்திரி. எப்படியோ மன்னரிடம் நல்ல பேர் வாங்கினால் போதும் என்ற சாமியார்
தலையாட்டினான். அப்போது கூறுங்கள் என்றான் மன்னன். மாமன்னா! நான் கூறுகிறேன்!
அவருக்கு எதற்கு வீண் சிரமம்! சரி கூறு
மன்னா! பல்வலிக்கு கழுதையின் பால் சிறந்த மருந்து! அதை நேரடியாக அதன்
மடியிலே சென்று அருந்தினால் ஒரு நொடியில் வலி குணமாகிவிடும். என்றான்
ஆ! அற்புதம்! குருநாதா! என்று அவரின் காலில் விழுந்து வணங்கிய மன்னன்
நம்மிடம் தான் இரு கோவேறு கழுதைகள் உள்ளதே அவை குட்டி போட்டுள்ளதா? இல்லையெனில்
வேறு கழுதைக்கு ஏற்பாடு செய்யும் என்றான் மன்னன்.
மந்திரி ஒரு முரட்டு கழுதையை இழுத்து வந்தான். மன்னா ஜாக்கிரதை! கழுதை
முரடு! என்ற அவனின் பேச்சை காதில் வாங்காமல் கழுதையின் மடி நோக்கி குனிந்தான்
கோணலான்.
கோபத்தில் இருந்த கழுதை தன் பின்னங்காலால் முகத்தில் உதைக்க முன் பல்
இரண்டு தனியாக விழ தூர விழுந்தான் மன்னன்.
ஆ! அம்மா என்று துடித்த கோணலானை நமுட்டு சிரிப்புடன் பார்த்த மந்திரி
மன்னா! கழுதை முரடு என்று சொன்னேன் அல்லவா? வேறு கழுதை ஏற்பாடு பண்ணுகிறேன்
என்றான்!
ஐயோ வேண்டாம் வேண்டாம் முதலில் அந்த சாமியாரை இழுத்து சிறையில் தள்ளு!
என்று கத்தினான் மன்னன்!
பாடம் புகட்டிய திருப்தியில் சிரித்துக் கொண்டான் மந்திரி!
உங்களுக்குத் தெரியுமா?
கடலில் கலக்காத நதி யமுனை.
உலகிலேயே மிகக்குறைந்த நேரம்
மலர்ந்திருக்கும் பூ பார்லி பூ.
உலகிலேயே அதிகமான நூல்களை எழுதிய
நூலாசிரியர். அலேக்சாண்டர் டூமாஸ்.
டிஸ்கி} இதை முன்கூட்டியே பதிவு செய்துவிட்டு வெளியூர் செல்கிறேன். படிக்கும் அன்பர்கள் திரட்டிகளில் இணைத்து உதவினால் நன்றியுள்ளவனாவேன்! ஹிஹீ! நன்றி!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்யலாமே!
Comments
Post a Comment