அவரும் .. இவரும் சில வித்தியாசங்கள்!
அவரும் .. இவரும் சில வித்தியாசங்கள்!
எப்படியோ இந்தியாவின் 13வது ஜனாதிபதியை
தேர்ந்தெடுத்து முடித்துவிட்டார்கள். பிரதமர் பதவியை கேட்டு ராகுலுக்கு போட்டியாக
வந்து விடுவாரோ என்று சோனியா பயந்த பிரணாப் இன்று நாட்டின் அதிகாரப்பூர்வ ரப்பர்
ஸ்டாம்ப் ஆகிவிட்டார். ஒரு காலத்தில் இந்த ஜனாதிபதி பதவிகள் கவுரவமானதோடு
முக்கியத்துவம் வாய்ந்தவையாகவும் இருந்தன. பாபு ராஜேந்திரபிரசாத் முதல்
ராதாகிருஷ்ணன் என்று தொடங்கிய இந்த வரிசையில் சஞ்ஜீவ ரெட்டியார் வந்தபின் தான்
இந்த பதவி ரப்பர் ஸ்டாம்ப் ஆகிப்போனதாக படித்துள்ளேன்.
நேற்றைய
தினமலர் இது உங்கள் இடத்தில் ஒரு வாசகர் எழுதியிருந்த கடிதம் என்னை மிகவும்
கவர்ந்தது. இந்த தகவல் நான் எப்போதோபடித்ததுதான்! ஆனால் இதை அந்த வாசகர் எழுதி
பிரதீபா பாட்டீலோடு ஓப்பிட்ட விதம் ரசிக்க வைத்தது. அவரது வரிகளை அப்படியே
தருகிறேன்.
இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக பதவி வகித்தவர் ராஜாஜி, கவர்னர் ஜெனரல்
என்னும் பதவிதான் ஜனாதிபதி அல்லது ராஷ்டிரபதி என பிறகு அழைக்கப்பட்டது. இந்த
பதவியை லார்ட் மவுண்ட் பேட்டனுக்குப்பிறகு ராஜாஜி அலங்கரித்தார். பிறகு ராஜாஜி
ஓய்வு பெறும் காலம் வந்தது.
பெரிய
பிரமுகர்கள் கனவான்கள்,பலசெல்வந்தர்கள்,வெளிநாட்டினர் என ஏராளமானோர் ராஜாஜிக்கு
பரிசு அளித்தனர்.அவை ஜனாதிபதி மாளிகையில் இரண்டு பெரிய அறைகளில் பத்திரமாக
வைக்கப்பட்டிருந்தன. ராஜாஜி ஓய்வுபெற்று சென்னைக்குப்புறப்படவேண்டிய நேரம்.
துணிமணிகளையும், ஆச்சாரமாக சமைக்கவேண்டி, தான் எடுத்துச்சென்ற பாத்திரங்களையும்
மூட்டைகட்டி வைத்திருந்தார். சென்னைக்கு புறப்படும் முதல்நாளில், அதிகாரிகள்
அவரோடு பேசிக்கொண்டிருந்துவிட்டு, கடைசியில் ஒருவர், “சார் .. உங்களுக்கு வந்த
ஏராளமானவிலை உயர்ந்த பரிசுப்பொருட்கள், அந்த இரண்டு அறைமுழுவதும் இருக்கின்றன.
அவற்றை பெட்டிகளில் அடுக்கி வைக்கலாமா எனக் கேட்டார்.
சிரித்துக்
கொண்ட ராஜாஜி, ‘அந்த பரிசு பொருட்கள்அனைத்தையும் அரசு அருங்காட்சியகத்தில்வைத்து
விடுங்கள். அது தனிப்பட்ட எனக்கு வந்தவை அல்ல;கவர்னர் ஜெனரலுக்கு வந்தவை” என்றார்.
அதிகாரிகள் திகைத்து நின்றனர்.
ஓர் அதிகாரி கெஞ்சும் குரலில்,“சார் நீங்கள்
சொன்னபடி, ‘மியுசியத்தில் அனைத்தையும் வைத்துவிடுகிறோம்; எங்கள் திருப்திக்காக
இந்த கைத்தடியை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்’ என அவரிடம் கொடுத்தார்.
‘இந்த
கைத்தடி நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் அதன் வளைந்த பகுதியை
பாருங்கள்.யானைத்தந்தத்தால் செய்யப்பட்டது. விலை உயர்ந்த இதுவும் வேண்டாம்.
என்னுடைய இந்த பழைய கைத்தடியே போதும்’ என்றார். அதிகாரிகளின் திகைப்பு
பன்மடங்காகியது.
மீண்டும்
ராஜாஜி, ‘உங்கள் விருப்பப்படி நான் அந்த விலை உயர்ந்த கைத்தடியை எடுத்து
உபயோகிக்கலாம். ஆனால் அதை பார்க்கும் மக்கள் ராஜாஜிக்கு இன்னும் எத்தனை விலை
உயர்ந்த பொருட்கள் பரிசாக வந்தனவோ... மனிதர் ஒன்றையும் கண்ணில் காட்டவில்லையே
என்பர். அது என்னுடைய நேர்மைக்கும் ஒழுக்கத்திற்கும் களங்கம் விளைவிக்கும்’
என்றார்.
ஆனால்,
தற்போதைய ஜனாதிபதி பிரதீபா பாட்டில், அவருக்கு வந்த 2500க்கும் மேற்பட்ட பரிசுப்
பொருட்களில் 155 பரிசுப் பொருட்களை, அமராவதியில் அமையவிருக்கும்
அருங்காட்சியகத்திற்கு கொடுத்துவிட்டார் என்ற செய்தியை படித்தேன். மீதி 2,345
பரிசுப் பொருட்களை என்ன செய்தார் என்ற விவரம் தெரியவில்லை. அவரே எடுத்துக்
கொண்டிருக்கலாம்; தவறில்லை! ஏனெனில் அவருக்கு பரிசாக கொடுக்கப்பட்டதுதானே!
ராஜாஜியும்
காங்கிரஸ்காரர்தான்;பிரதீபா பாட்டீலும் காங்கிரஸ்காரர்தான். என்ன செய்வது
அவர்,காந்திஜியுடன் வாழ்ந்தவர்; இவர் சோனியாவிடம் வளர்ந்தவர், அதுதான்
வித்தியாசம்.
பி. எஸ்.
ராமச்சந்திரன், சென்னை.
இப்படி எழுதியுள்ளார் அந்த வாசகர். இவரது வாதத்தில்நியாயம்
இருக்கத்தானே செய்கிறது. ஆனாலும் இன்றைய அரசியலில் ஒரு சிறிய ஊராட்சி தலைவர்
முதற்கொண்டு அமைச்சர் பிரதமர் வரையில் கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கும் போது ப்பூ!
பரிசுப் பொருட்கள் தானே போனா போகட்டும்! என்றும் தோன்றுகிறது.
ஆண்டவன் எவ்வழி மக்கள் அவ்வழி என்று ஒரு பழமொழி
உண்டு. அதாவது ஆள்கிறவனை பார்த்துதான் மக்கள் நடப்பார்களாம்!
இப்போது
நம்மை ஆள்பவர்கள் அப்படி இருக்க நாமும் இப்படித்தான் இருக்கப்போகிறோம்!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கமெண்ட்களை
செய்து உற்சாகப்படுத்துங்கள் அன்பர்களே!.
நண்பா இதற்கு முன் பலதடவி உங்கள் வலைப்பூவை வந்தேன் - this page can't display அப்படின்னு வரும் நொந்து போய் சரி இன்னொரு நாள் வரலாம் என்று இருந்தேன் - எதேச்சையாக உங்களின் அழைப்பு... வந்தேன் அதிஷ்டம் தங்களின் வலைபூ பக்கம் திறந்தது.
ReplyDeleteஎனக்கும் சில வலைப்பூக்கள் திறக்காமல் இருந்திருக்கிறது! உதாரணமாக கோவை நேரம் வலைப்பூ இரண்டு நாட்களாக திறக்கவில்லை! தொடர்ந்துமுயற்சித்து வலைப்பூ வந்து கருத்திட்டமைக்கு நன்றி!
Deleteநண்பர்களே, யாரை யாருடன் ஒப்பிடுவது....அவர்கள் தேச பக்தர்கள், உண்மையான அரசியல்வாதிகள்...நாட்டு மக்களை, நாட்டையும் மதித்தவர்கள். தே ஆர் கிரேட்.
ReplyDeleteஉண்மைதான்! உண்மைதான்! ஒத்துக்கொள்கிறேன்!
Delete/// ராஜாஜியும் காங்கிரஸ்காரர்தான்;பிரதீபா பாட்டீலும் காங்கிரஸ்காரர்தான். என்ன செய்வது அவர்,காந்திஜியுடன் வாழ்ந்தவர்; இவர் சோனியாவிடம் வளர்ந்தவர், அதுதான் வித்தியாசம்.///
ReplyDeleteஅந்த வாசகர் சரியாக சொல்லி உள்ளார். சேரும் இடத்தைப் பொறுத்து எண்ணம் மாறும்.
ஒரு சின்ன திருத்தம் : 14வது ஜனாதிபதி என்பதை 13 வது ஜனாதிபதி என்று மாற்றி விடவும்.. நன்றி.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே திருத்தி விடுகிறேன்!
Deleteஇன்னைக்கு தான் உங்க வலையை கண்டு பிடிச்சேன்...எத்தனையோ முறை உங்கள் பின்னூட்டத்திற்கு பதில் எழுதறப்ப கேட்டேன்..உங்க வலையை காணோம்னு...
ReplyDeleteWhen I click your name it does not show your profile or any link page to your blog....Pl fix it...
உங்கள் பதில் பின்னூட்டங்களை நான் படிக்கவில்லை! மன்னிக்கவும்! கூகுள்பிளஸ் புரொபைல் உள்ளதால் பிரச்சனை என்று நினைக்கிறேன்! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரெ!
Delete