தெருக்குடிமக்கள்! கவிதை!
சாலை ஓரங்களே எங்கள் வீடு!
சேலைத் துணிகளே எங்கள் கூடு!
வானமே எங்களுக்கு கூரையானதால்
வரும் விருந்தாளிகளுக்கு அளவில்லை!
தெருவோரக்குழாயில் குளித்து
உருவாகும் பசியை மறைத்து
உழைக்கத் தேடுவோம் பிழைப்பு!
அழைப்பவன் தரும் அரைக்கூலியில்
பிழைப்புக்கு கால் போக மீதிகால்
கட்டாயம் அரசுக்கு ஏகுவோம்!
உருவாகும் நோய்கள் எங்கள் முதல் விருந்தாளி!
தெருவோர நாய்கள் எங்கள் தோழன்!
மழை வந்தால் வருத்தப்படும் மரபுப்
பிழைகள் நாங்கள்!
வாகனங்களின் தாலாட்டில்
வசதியாய் குழந்தைகள் தூங்க
அசதி அடித்துப் போடுகையில்ஆனந்தமாய்
வருகிறது கொசுவைமீறிய தூக்கம்!!
மேம்பாலங்கள் எங்கள் வாழ்க்கையை
மேம்படுத்தி வருகின்றன!
புழுதிபடிந்த எங்களை கழுவிப்பார்க்க
போட்டத் திட்டங்கள் அழுக்காகிப் போனது!
வறுமைக் கோடு எங்களை
பிரித்துள்ளதால்
வளர்ச்சிகள் எங்களை
எட்டவில்லை!
உயரத்தில் ஏறும் விலைவாசி மட்டும்-
எங்கள்
துயரத்திலும் வந்து நிற்கும்!
தனியொரு மனிதனுக்கு உணவில்லை
எனில்
ஜகத்தினை எரிக்க சொன்னவன் பூமியில்
ஜடங்களாய் திரியும் எங்களை காக்க- ஒரு ஜனம்
இன்னும் உதிக்கவில்லை!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த பின்னூட்டங்களை கமெண்ட் செய்து உற்சாகப்படுத்துங்கள் பிடித்திருந்தால் திரட்டிகளில் வாக்களித்து பிரபலப் படுத்துங்கள்! நன்றி!
ஒவ்வொரு வரியும் வேதனைமிகு வரிகள்...
ReplyDeleteவருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே!
Deleteஇந்தக் கவிதை அவர்களின் வாழ்வை படம் பிடித்துக்காட்டுகிறது. நம்மால் வருந்தத்தான் முடிகிறது .
ReplyDeleteதங்களின் முதல் வருகைக்கு நன்றி!
Deleteநெஞ்சை தொட்ட கவிதை நண்பா, வாழ்த்துக்கள்!
ReplyDeleteதொடர்ந்து வந்து பின்னூட்டம் இட்டமைக்கு நன்றி நண்பா!
Deleteயதார்த்தமான கவிதை...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
//////
ReplyDeleteதங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த பின்னூட்டங்களை கமெண்ட் செய்து உற்சாகப்படுத்துங்கள் பிடித்திருந்தால் திரட்டிகளில் வாக்களித்து பிரபலப் படுத்துங்கள்! நன்றி!
///////
கவிதையில் இருந்து வேறு படுத்தி காட்டுங்கள்
அல்லது சிறு எழுத்தில் பேர்டுங்கள்
அப்போதுதான் கவிதை தனியாக தெரியும்..
நன்றி
வருகைக்கும் ஆலோசனைக்கும் நன்றி நண்பரே!
Delete.நல்லதொரு கவிதை
ReplyDelete