என் தங்கம் என் உரிமை! ஜோக்ஸ்!
நான் ரசித்த சிரிப்புக்கள்! 15
1.நகை கடையில திருடினவன் மாமூல்
கொடுத்திட்டானா?
என் தங்கம் என் உரிமைன்னு தெனாவட்டா பேசிட்டு திரியறான்!
-அம்பை தேவா.
2.போர்க்களத்தில் எதிரி மன்னன் வெற்றியை
மட்டும் ருசிக்கிறான்.. நம் மன்னர்?
அவர் ஒரு மண்ணையும் விட்டுவைப்பதில்லை!
-சிக்ஸ்முகம்
3.தலைவரைப் போலவே அவரோட
பேரக்குழந்தையும் அடம் பண்றான்!
என்ன பண்றான்?
தாலாட்டினா தூங்கறதில்லை! பாராட்டினாத்தான்
தூங்கறான்!
வீ. விஷ்ணுகுமார்.
4.பிரஸ் மீட்ல தலைவர் மானத்தை
வாங்கிட்டாரா? எப்படி?
குற்றப்பத்திரிக்கையில இருந்து நிருபர் வந்திருக்காரா?னு கேட்டுட்டார்!
-பர்வீன் யூனுஸ்.
5. தலைவரே ரொம்ப நேரமா என்ன யோசனை?
ஜெயில்ல இருக்கறதை தமிழ்ல சிறை
‘வாசம்’ங்கிறாங்க. ஆனா இங்கிலிஷ்ல அதை ஏன் லாக் ‘கப்பு’னு சொல்றாங்க .. குழப்பமா
இருக்குய்யா!
வீ.விஷ்ணுகுமார்.
6.நம்ம டாக்டர் அட்ராசிட்டி பண்ணிட்டு
இருக்கார்.
ஏன்?
கிளினிக்
வாசல்ல ‘இங்கு டெங்குவுக்கு சங்கு ஊதப்படும்’னு எழுதிவெச்சிருக்கார்!
வீ.விஷ்ணுகுமார்
7. மன்மோகன்
சிங் சுயசரிதை எழுதினா என்ன பேர் வைப்பார்னு தெரியுமா?
எனக்குத் தெரியாது!
சபாஷ் கரெக்டா சொல்லிட்டே!
தஞ்சை தாமு.
8.நடக்கப்போகும்
ஜனாதிபதி தேர்தல்ல தலைவர் நக்மாவை ஆதரிச்சு பிரச்சாரம் பண்ணுவார்னு
பத்திரிக்கைகளுக்கு செய்தி அனுப்பிடுப்பா!
தலைவரே! அது சங்மா!
சி,என். முத்துஸ்வாமி.
9.சாமியார்
எதுக்கு கோபமா இருக்கார்?
ஆசிரமத்துக்கு
வர்ற வழி பூரா யாரோ ‘பெண்கள் ஜாக்கிரதை! ன்னு எழுதி வைச்சிருக்காங்களாம்!
-அம்பை தேவா.
10. இந்த
சீன்ல நீங்க நீச்சல் டிரெஸ்ஸில வர்றீங்க!
எனக்கு நீச்சலே தெரியாதே?
நீச்சல்
டிரெஸ்ல வர்றதுக்கு நீச்சல் தெரியனும்னு அவசியமே இல்லையே!
வி.சாரதி டேச்சு.
11.சாமியாருக்கு
ஆங்கில பேச்சாற்றல் அவசியமா குருஜி?
பின்னே பாரின் பிகர்ஸை எப்படி உஷார் பண்றதாம்!
வீ.விஷ்ணு குமார்.
12.உன்னை
கட்டிகிட்டதுக்கு ஒரு கழுதையை கட்டியிருக்கலாம்!
நீங்க சொல்லிகிட்டு இருக்கீங்க நான் எப்பவோ
செஞ்சிட்டேன்!
-கிணத்துக்கடவு ரவி
13. புகழ்ச்சி
பிடிக்காத தன்மானத் தமிழனே! உன் புகழ் திக்கெட்டும் பரவட்டும்!
அ.ரியாஸ்.
14. இந்த
கம்மல் எப்ப வாங்கின?
பொதுத்தேர்தலப்போ!
இந்த மூக்குத்தி?
இடைத்தேர்தலப்போ!
பெ. பாண்டியன்.
15. டாக்டர் சர்டிபிகேட் வேணும்!
அது எனக்கே இல்லீயேப்பா!
அ.ரியாஸ்.
16.தலைவர் அரசியல்ல இருந்து விலகிட்டாரே
ஏன்?
கண்டிப்பா வாக்கிங் போகனும்னு குடும்ப டாக்டர் சொல்லிட்டாரே!
அம்பை தேவா.
17.எட்டாம் தேதி ரிலீசுன்னு சொல்லிட்டு
படத்தை ரகசியமா அஞ்சாம் தேதியே ரிலீஸ் பண்ணீட்டீங்களே!
திருட்டு வி.சி.டி. ஆறாம் தேதி ரிலீஸாம்!
வீ. விஷ்ணுகுமார்.
18.எனக்கு அரசியல்ல இருந்து ரிடையர்
ஆகிற வயசாயிடுச்சுனு எப்படியா சொல்றே?
ஊழல் பண்ணி மாட்டிக்கிறீங்களே!
கொளக்குடி சரவணன்.
19. தலைவர் சொன்ன பதிலை கேட்டு ஜட்ஜ்
டென்சன் ஆயிட்டாரா? ஏன்?
ஆத்துல ஏன் மணல் அள்ளுனீங்கன்னு கேட்டா போலீஸ் கண்ணுல மண்ண தூவறதுக்குன்னு
சொன்னாராம்!
-பர்வீன் யூனுஸ்.
மின் பற்றாக்குறைக்கா நாம மேலிடத்துக்கு கடிதம்
எழுதினோமே அதானே!
சீனா. பி.நந்த குமார்.
நன்றி ஆனந்த விகடன்.
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்து
உங்கள் கமெண்ட்களை அள்ளித் தெளியுங்கள்!
Comments
Post a Comment