பணம் இல்லா மனிதன்!

பணம் இல்லா மனிதன்!

 உங்களால் ஒரு பைசா கூட இல்லாமல் ஒரு மணி நேரமாவது வாழ முடியுமா? பணத்திற்காக பிச்சை எடுக்கிறோம்! பணம் பணம் என்று அலைகிறோம்!இன்று ஒரு நாள் ஏதும் வருமானம் இல்லையே என்று கலங்குகிறோம். இப்படி பணத்தினை துரத்தி பழமொழிகளையும்விட்டுவைக்கவில்லை நாம்.

பணம் பத்தும் செய்யும் பணம் என்றால் பிணமும் வாயைத் திறக்கும், பணமில்லாதவனை யாரும் மதிக்க மாட்டார்கள் என்று நாம் தான் பணத்தை துரத்திக் கொண்டிருக்கிறோம். எப்படியெல்லாம் பணம் சம்பாதிக்கலாம் என்று மூளையை குழப்பிக் கொண்டு பணமோ பணம் என்று ஓடிக் கொண்டிருக்கிறோம். பணத்திற்காகவே படுகொலைகளும் நடந்து வருகிறது. இப்படி பணத்தை எப்படியெல்லாம் சம்பாதிக்கலாமோ அப்படி சம்பாதிக்கும் மனித இனத்தில் பணமே வேண்டாம் என்று சொல்கிறார் ஒரு மனிதர். நம்ம நாட்டில் அல்ல வெளி நாட்டில்! அமெரிக்காவை சேர்ந்த டேனியல் சோலா! அவர்தான் அந்த அற்புத மனிதர்!இவர் 12 வருடங்களாக பணத்தை தொடவே இல்லையாம்! ஆச்சர்யமாக அல்லவா இருக்கிறது. இதெல்லாம் ஆகிற விசயமா? காதில் பூ சுத்தாதீங்க என்று சொல்வீர்கள்! ஆனால் இது உண்மை இவர் பெயரில் வலைப்பூவும் இணைய தளமும் கூட உள்ளது.

     51 வயதான டேனியல் சோலா, அமெரிக்காவில் டென்வார் நகரை சேர்ந்தவர். கடந்த 2000ம் ஆண்டில் தன் கையில் இருந்த 30 டாலர் பணத்தை ஒரு போன் பாக்ஸில் போட்டுவிட்டு மோப் உதக் என்கிற இடத்தில் இருக்கும் ஒரு குகையில் குடியேறிவிட்டார். ஒரு சைக்கிள் நான்கைந்து உடைகள் இரண்டு தகர அடுப்புகள், கத்தி, கிடார், பாட்டில் இவ்வளவுதான் அவரது சொத்து. மீன் பிடித்து, பறவைகள் பிடித்து, பழங்கள் பறித்து, இறந்து கிடக்கும் விலங்குகளை உண்டு வாழ்கிறார். தனது வாழ்க்கையைப் பற்றி வலைப்பூவில் தற்செயலாக எழுத பணம் இல்லா மனிதன் இப்போது பாப்புலர் ஆகிவிட்டார்.

  இளம் வயதில் இந்தியாவின் புத்தர், ராமகிருஷ்ணர், காந்தி போன்றவர்கள் மீது ஈடுபாடு கொண்ட சோலாவிற்குஒரு கட்டத்தில் தனிமையில் இருப்பது பிடித்து போனது. எந்த வேலையிலும் நிரந்தரமாக இல்லாத சோலா புத்தகங்களுக்காக தனது சம்பாதியத்தை செலவிட ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் அதுவும் போரடித்து போதையில் காரை எடுத்துக் கொண்டு மலைஉச்சிக்கு வேகமாக சென்று பள்ளத்தில் பாய்ந்தார். அதிர்ஷ்ட தேவதை அவர் பக்கம் உயிர்பிழைத்தார். அவர் ஓரளவு தெளிந்தார்.நாடு நாடாக சுற்ற ஆரம்பித்தார். பொறுப்புகள் பண டென்ஷன் இல்லாத வாழ்க்கையை தேடினார். காடுகளில் வாழும் சாதுக்களை பற்றி கேள்விப் பட்டு இந்தியா வந்த அவருக்கு சாதுக்களின் வாழ்க்கை பிடித்துப் போனது.
 பணம் இல்லா வாழ்க்கை அவருக்கு மிகவும் பிடித்து போய் அந்த வாழ்க்கை முறைக்கு தாவிவிட்டார் டேனியல் சோலா! நாள் முழுக்க உணவிற்காக பயணிப்பார். இரவில் கைவலிக்க கிடார் வாசிப்புடன் குகையில் தங்கல். புத்தகங்களை மேய்தல் என்றிருந்த இவரது வாழ்க்கையைப் பற்றி கேள்விப் பட்ட மார்க் சண்டீ புத்தகம் எழுதி பணம் சம்பாதித்துவிட்டார். இதனால் டேனியலை பார்க்க பெரும் கூட்டம் கூடிவிட்டது. எப்படி பணம் இல்லாமல் வாழ்கிறீர்கள் என்று கேட்பவர்களுக்கு அவர்கூரும் பதில் காட்டில் கழுகு, குதிரை, பாம்பு, பாக்டீரியா எல்லாம் பணம் வைத்துக் கொண்டா வாழ்கிறது! அது போலவேத்தான் நானும் வாழ பழகிக் கொண்டேன் என்கிறார்.

   தன்னை சுற்றி நாலு பேர் இருப்பதை அறிந்துகொண்ட சோலா தான் சொல்வதையும் நாலுபேர் கேட்கிறார்கள் என்பதை அறிந்ததாலோ என்னமோ ஒரு வலைப்பூவும் இணைய தளமும் ஆரம்பித்துவிட்டார். பிரவுசிங் செண்டரில் நான் பணம் இல்லா மனிதன் பணத்திற்கு பதில் ஏதாவது வேலை கொடுங்கள்  செய்து விடுகிறேன் என்று கேட்டு தான் செலுத்த வேண்டிய பணத்திற்கு ஈடு செய்கிறார். இவர் பணம் இல்லா  மனிதர் என்று பெரும்பாலோர் அறிந்திருப்பதால் பணம் கேட்பதில்லை இவரிடம். சிலர்தான் காரை துடைக்க சொல்கிறார்களாம்!
டேனியல் சோலாவின் வலைப்பூ முகப்பு வரிகள் இது தான்!

நான் பணத்தில் இருந்து வெளியே வந்து விட்டேன்! என்னை பின்பற்றுங்கள் அல்லது பணத்தோடு போராடுங்கள்!

டேனியல்  உண்மையிலேயே ஒரு வித்தியாசமான மனிதர்தான் இல்லையா?

தகவல் உதவி} ஆனந்தவிகடன்.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிருங்கள்!

Comments

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!