ஐ மிஸ் யூ டா! செல்லம்! ஜோக்ஸ்

ஐ மிஸ் யூ டா! செல்லம்! ஜோக்ஸ்


நம்ம ஜோ,தன் பெண்டாட்டி வெளியூர் போயிருந்தப்ப அவளோட ஃபோட்டோவை சுவத்துல ஒட்டவெச்சு, அதுக்கு மேல கூரான கத்திகளைக் குறிபார்த்து எறிஞ்சுகிட்டிருந்தான். ஆனால் எந்த கத்தியும் அந்த போட்டோமேல படவேயில்லை! எல்லாமே மிஸ் ஆகி கீழே விழுந்துகிட்டே இருந்துச்சு.
   அப்போ பார்த்து ஜோவோட பொண்டாட்டி ஃபோன் செஞ்சு, “என்னங்க... என்ன பண்றீங்க?” ன்னு காதலா கேட்டா!
  ஜோ சொன்னான் : ஐ ‘மிஸ்’ யூ டா செல்லம்!

ஒளிமயமான் எதிர்காலம்!
  “ஏண்டா ஹோம் ஒர்க் பண்ணலை?”
“கரண்ட் இல்ல மிஸ்!”
‘கேண்டில் ஏத்தி எழுதலாம்ல?’                    
“தீப்பெட்டி சாமி ரூம்ல இருந்துச்சு!”
“ஏன் அதை எடுத்து பத்தவைக்கலை?”
“நான்குளிக்கலை.. அதான் சாமி ரூமுக்குள்ள போகல!”
“ஏன் குளிக்கல?”
“குளிக்கத்தண்ணியில்ல..”
“ஏன் தண்ணியில்ல..?”
“மோட்டார் ஓடல..”
“ஏன் மோட்டர் ஓடல..?”
“ முதல்லயே சொன்னேன் இல்ல கரண்ட் இல்லேன்னு..!”
(ஒளிமயமான எதிர்காலம் நம் வீட்டில் தெரிகிறது!)

ரிப்பீட்டு!
“ஃபெயில் ஆகப்போறோம்னு தெரிஞ்சும் ஏண்டா பிட் அடிக்கிறீங்க?”
“ படிக்க மாட்டோம்னு தெரிஞ்சும் ஏன் சார் எக்ஸாம் வைக்கிறீங்க...?”

“வீட்டுல நேத்து பாம்பு வந்திச்சுடா!”
“ அப்புறம் என்னாச்சு?”
“பாம்பாட்டியை கூப்பிட்டு அடிச்சோம்!”
“அடப்பாவி! அதுக்கு ஏண்டா பாம்பாட்டியை அடிச்சீங்க?”

“என்னங்க பின்னாடி இருந்து ஒருத்தன் என் கால்ல சுரண்டறான்!”
“அப்படியா! திரும்பி உன் முகத்தைக் காட்டு சாவட்டும் தறுதலை!”

“இரண்டு எறும்புகள் ஒரே வகுப்பில் படிச்சுச்சாம். ஒண்ணு ரெகுலரா பிரசண்ட் ஆயிடும். இன்னொன்னு ரெகுலரா ஆப்செண்ட் ஆயிடும்!”
   “ஏன்?”
“ஏன்னா அது ‘கட்’டெறும்ப்பு!”

“எங்க வீட்டுல டீவியில கோடு கோடா தெரியுதுடா!”
“இப்ப சொல்லி என்ன பிரயோசனம் வாங்கும் போதே அன்ரூல்ட் டீவியா வாங்கியிருக்கணும்!”

பழைய மங்கையர்மலர் இதழ்களில் இருந்து தொகுப்பு!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கமெண்ட்களை தாராளமா அள்ளி வீசுங்க!

Comments

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!