கலா சிஸ்டர்ஸை பார்த்து காளையன் ஜொள் விட்ட கதை!

கலா சிஸ்டர்ஸை பார்த்து காளையன் ஜொள் விட்ட கதை!

காளையன் ஒரு அப்பாவிங்கோ! அவனுக்கு எதுவுமே புதுசுதான்! விவரம் பத்தாதவன்! ஒரு நாள் ஒரு கல்யாண விருந்துக்கு போனான். பணக்கார வீட்டுக் கல்யாணம் தடபுடலா நடந்துச்சு! எடுபிடிக்கு போன பயலுக்கு எட்டாக் கனியா ஒரு ஆசை பத்திகிச்சு! எல்லாம் நேரம்தான்!. என்ன பண்றது நம்ம பய அங்க தான் முத முதலா நம்ம கலா சிஸ்டர்ஸை?! பார்த்து தொலைச்சி புட்டான். பயலுக்கு ஆர்வம் தாங்கலை! அவங்களையே வச்ச கண்ணு வாங்காம பார்த்துகிட்டு நின்னான். அவங்கதான் பாவம் இவனை கண்டுக்கவே இல்லை!
    சும்மா பளபளன்னு சேப்பா?! அவங்க மின்னுன ஸ்டைல் அவனுக்கு ரொம்பவே பிடிச்சி போச்சு என்ன கொஞ்சம் உருண்டையா அதாங்க குண்டா இருந்தாலும் அத அவன் பெரிசா நினைக்கலை!கூடவே அவங்க தங்கையும் இவங்க அவங்க அளவுக்கு இல்லேன்னாலும் மாநிறம்தான்! ரொம்ப ஒல்லியும் கிடையாதும் அவங்க மேல அப்படி ஒரு வாசம் வீச ஜிகினாவோட மிளிர எல்லோர் கண்னும் அவங்க மேலதான்! காளையன் மட்டும் விதிவிலக்கா? ஜொள் விட்டுகிட்டே நின்னான். ஸ் அப்பா! இப்பவே களை கட்டுதே தூர இருந்து பார்க்கும் போதே இப்படின்னா! கிட்ட வந்து தொட்டுப் பார்த்தா! காளையனுக்கு ஃபீலிங்கை கட்டுப்படுத்த முடியவில்லை!
   டேய்! இன்னாடா அங்கேயே நின்னுகிட்டு மசமசன்னு போயி வேலையப் பாருடா! என்றூ யாரோ விரட்ட இடத்தை விட்டு அகன்றான். அப்போதும் கலா சிஸ்டர்ஸின் நினைப்புதான்! இத்தனைக்கும் அவங்க பேருகூட அவனுக்கு தெரியாது. அதே நினைப்போட வேலைய முடிச்சிட்டு வந்து பார்த்தா பந்தி முடிஞ்சி ஜனங்க கலைஞ்சிகிட்டி இருந்தது. அடடா! மிஸ் பண்ணிட்டமன்னு காளையன் வருத்தப்பட்டான். டேய் காளையா! சாப்பிட்டுதான் போகனும் என்று கல்யாண வீட்டார் சொல்வார்கள் எப்படியாவது அவங்களை ஒரு கை பிடிச்சுடலான்னு நினைச்சா யாரும் அவனை கண்டுக்கவே இல்லை!
    துக்கம் பொங்கிட அங்க இருந்த ஒருத்தரிடம் அண்ணே இங்க சிவப்பா ஒரு  அவர் அதை காதில் அறைகுறையாய் வாங்கியவாறே போய் சமைய கட்டுல பாருடா என்றார். ஆவலாக அங்கே சென்றால்  அங்கே யாரையும் காணோம் நம்ம கலாசிஸ்டர்ஸும் தான்!
   மனச தேத்திகிட்டு மறுபடியும் வீட்டுக்கு வந்துட்டான் காளையன் ஆனா அவன் மனசு பூரா அந்த கலா சிஸ்டர்ஸ பத்திதான் நினைப்பே அவனுக்கு வேலைய ஓடலை அப்பத்தான் அவன் நண்பன் என்னடா! என்ன விசயம் ஒரு மாதிரியா திரிஞ்சிகிட்டு இருக்கே என கேட்க இல்லடா எனக்கு ஒரு ஆசைடா என்று தான் கல்யாணத்தில் பார்த்த கலா சிஸ்டர்ஸை பத்தி கூறினான் காளையன்!
  இம்புட்டு ஆசைய மனசுல வச்சிகிட்டு சும்மா இருக்கலாமாடா? இந்த நண்பேன் எதுக்குடா இருக்கேன்! ஒரு நூறு ருபா எடுத்துகிட்டு கிளம்பு இன்னிக்கு ஆசை தீர அனுபவிச்சிடுவோம் என்று அவன் சொல்ல முறைத்தான் காளையன்! சரி வேணாம் நீயே அனுபவி எனக்குன்னு ஒண்ணு கிடைக்காமய போவுது என்றான் நண்பன்.

   ஒரு வழியாக டவுனுக்கு கிளம்பினார்கள். அங்குதான் சிஸ்டர்ஸை பார்க்க் முடியும் என்று சொல்லியிருந்தான் நண்பன். காளையன் கொஞ்சம் மிரண்டுதான் போனான். பொண்ணுங்க எல்லாம் ட்ரவுசர் போட்டு பனியன் போட்டுகிட்டு உலா வர அப்படியே மயக்கம் போடாத குறைதான்.
    ஒரு இனிப்பகத்துள் நுழைந்தார்கள் இருவரும் அங்குதான் காளையனை கவர்ந்த கலா இருக்கிறாள். இருக்கிறாள் என்ன? இருக்கிறார்கள்!  ஏகப்பட்ட கூட்டம் ஈ மொய்க்கறாப்பல இருக்க தள்ளிகிட்டு உள்ள போனா சும்மா சொல்லக்கூடாது. அக்காவும் தங்கையும்  ஷொக்காத்தான் உள்ள இருந்தாங்க! காளையன் அப்படியே மெய்மறந்து ஜொள்ளுவிட்டுகிட்டு நிக்க அவங்க இவன கண்டுக்கவே இல்லை! அப்பதான் முதலாளி அங்க வந்தாரு!
   என்னடா! தம்பிகளா? ஊருக்கு புதுசா? பார்வையே சரியில்லையே? என்ன வேணும்? என்றார்.
   காளையின் மென்று விழுங்கி, கண்ணாடி ஷோகேசில் இருந்த சூர்யகலாவை காட்ட அவன் நண்பன் சந்திரகலாவை காட்டினான். எவ்வளுப்பா வேணும்? தலா கால்கிலோ கொடுங்க என்று கேட்டு அவர் கட்டிக் கொடுக்க ஜென்ம சாபல்யம் அடைந்தவன் போல வெளியே வந்து உற்சாகமா தின்னுபுட்டு ஊருக்கு வந்து சேர்ந்தாங்க நம்ம பயலுக!
 என்னாது?
 அட கேக்கலையே!  நீங்க வேற ஏதையாவது நினைச்சு படிச்சா நான் என்ன செய்யறதுங்க? எப்பவுமே அந்த நினைப்புதானா உங்களுக்கு?
   ஓவரா மொக்கை போட்டுட்டனா ஐயோ அடிக்க வராதீங்க! எஸ்கேப்!

படிச்சவங்க  மறக்காம கமெண்ட் போட்டு அப்படியே ஓட்டும் போட்டுட்டு போனிங்கன்னா நன்றி கடன் பட்டுருவேன்! நன்றி!


Comments

  1. கலா சிஸ்டர்ஸ் கதை சூப்பருதான், வஸ்த்ரகலா இல்லீங்களா.

    ReplyDelete
    Replies
    1. அடுத்து எழுதிட்டா போச்சு! எல்லாம் வாசகர் விருப்பம்தானே!

      Delete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2