இப்படி செய்யலாமா ஷோபனா? ஓர் ஆதங்கம்!


 நடிகை ஷோபனா தமிழில் சிறந்த நடிகையாக வலம் வந்தவர்! இவரது படங்கள் ஒருகாலத்தில் ஹிட் அடித்தன. இப்போது இவர் அடிக்கும் ஹிட்டுக்கு குறைவில்லை! அப்பாவி டீக்கடைக் காரரை பொய் புகார் தந்து துரத்தியிருக்கிறாராம் ஷோபனா. அவரது புகாரும் அதை மறுக்கும் பஞ்சர் கடைக்காரரின் பேட்டியும்  வெட்டி எடுத்துள்ளேன் தட்ஸ் தமிழிலிருந்து உங்களின் பார்வைக்காக!  இப்படி செய்யலாமா ஷோபனா?


 தன்னிடம் நடனம் கற்க வரும் மாணவிகளிடம், ரோமியோக்கள் ஈவ்டீசிங் தொல்லை கொடுப்பதாக பிரபல நடிகை ஷோபனா பரபரப்பு புகார் கொடுத்துள்ளார்.
'தளபதி, 'எனக்குள் ஒருவன்', 'இது நம்ம ஆளு' போன்ற பிரபல தமிழ்ப்படங்களிலும், ஏராளமான தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்துள்ளவர் நடிகை ஷோபனா (வயது 42). மறைந்த பழம்பெரும் நடிகை பத்மினி இவரது அத்தை. இவர் சென்னை ஆழ்வார்பேட்டை ஸ்ரீமன் சீனிவாசா ரோட்டில் வசிக்கிறார்.
நேற்று நடிகை ஷோபனா தனது நடனப்பள்ளி மாணவி ஒருவருடன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்திருந்தார். புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி தேனாம்பேட்டை உதவி போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிடப்பட்டது.
ஷோபனாவிடம், என்ன புகார் மனு கொடுத்தீர்கள் என்று, நிருபர்கள் கேட்டனர். அதற்கு உடனடியாக பதில் சொல்லாமல், ஷோபனா கண்கலங்கினார்.
பின்னர் அவர் கூறுகையில், "நான் எனது வீட்டில் நடனப் பள்ளி நடத்தி வருகிறேன். 200 மாணவிகள் என்னிடம் நடனம் கற்று வருகிறார்கள்.
ஆனால் எனது நடனப் பள்ளிக்கு வரும் மாணவிகளுக்கு பெரும் தொல்லை கொடுக்கும் வகையில், எனது வீடு அருகில் இருக்கும் நடமாடும் டீக்கடைக்கு, டீ சாப்பிட வரும் இளைஞர்கள் செயல்படுகிறார்கள்.
இதைக்கேட்டால் கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். எனது வீட்டுக்குள் அடியாட்களை அனுப்பி மிரட்டுகிறார்கள். பொருட்களை திருடிச் செல்கிறார்கள். எனது மாணவி ஒருவர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளார். வீட்டின் குடிநீர் குழாயை உடைத்து விடுகிறார்கள்.
பிரச்சினைக்குரிய அந்த டீக்கடையை அங்கிருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தொல்லை கொடுக்கும் இளைஞர்கள் மீதும், டீக்கடை உரிமையாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்றார்.

நடிகை ஷோபனா வீட்டு அருகே டீ, டிபன் கடை நடத்தி வந்த பெண் ஒரு அப்பாவி. கடந்த 35 வருடமாக இங்கு அவர் கடை நடத்தி வந்தார். அந்தக் கடையால் யாருக்கும் எந்தப் பிரச்சினையும் ஏற்பட்டதில்லை. ஷோபனாவின் வீட்டில் அவர் தண்ணீர் பிடித்ததால் கோபமடைந்து பொய்யான புகாரைக் கூறி கடையைக் காலி செய்து விட்டார் என்று கூறியுள்ளார் ஷோபனா வீட்டு அருகே பஞ்சர் கடை வைத்திருக்கும் ஜோதி என்பவர்.
நடிகை ஷோபனாவால் பெரும் பரபரப்பாகியுள்ளது. ஏற்கனவே திருமணமான ஒருவரை அபகரித்துக் கொண்டதாக அந்த நபரின் மனைவி ஷோபனா மீது பரபரப்புப் புகார் கொடுத்தார். இந்த நிலையில் ஒரு டீக்கடைக்காரரை அகற்ற கமிஷனர் ஆபீஸ் வரைக்கும் போய் பரபரப்பைக் கிளப்பியுள்ளார் ஷோபனா. அவரது புகாரை ஏற்ற போலீஸாரும் உடனே நடவடிக்கை எடுத்து டீக்கடையை ராவோடு ராவாக தூக்கி விட்டனர்.
ஆனால் ஷோபனா பொய் பேசுவதாக அவரது வீட்டுக்கு அருகே பஞ்சர் கடை நடத்தி வரும் ஒருவர் கூறியுள்ளார். அவருக்கு ரோட்டில் யார் நடந்து போனாலும் கூட பிடிக்காது என்றும் அவர் கூறுகிறார்.
இதுகுறித்து பஞ்சர் கடை நடத்தி வரும் ஜோதி கூறுகையில்,
ஷோபனா வீடு அருகே நடமாடும் டீக்கடை நடத்தியது நெல்லையைச் சேர்ந்த பெண். இவர் சுமார் 35 வருடங்களாக அந்த பகுதியில் கடை நடத்தி வந்துள்ளார். காலையில் டிபன், மதியம் சாப்பாடு ஆகியவையும் விற்பார். பங்களாக்கள் நிறைந்த அந்த பகுதியில் வேலை பார்க்கும் ஏழை தொழிலாளர்கள் இந்த கடையில்தான் சாப்பிடுவது வழக்கம்.
ஷோபனா வீட்டிற்கு வரும் பெண்களை கேலி செய்ததாக எந்த சம்பவமும் நடக்கவில்லை. தினமும் ஷோபனா வீட்டு காவலாளி ஷோபனாவுக்கு தெரியாமல் டிபன் கடை நடத்திய பெண்ணுக்கு தண்ணீர் கொடுத்து வந்தார். நேற்று தண்ணீர் பிடித்தபோது ஷோபனா பார்த்து விட்டார். உடனே அந்த பெண்ணையும், காவலாளியையும் திட்டியுள்ளார்.
உடனே டிபன் கடை நடத்தி வந்த பெண்மணி ஷோபனாவிடம் சென்று மன்னிப்பு கேட்டார். இந்த பிரச்சினைக்காகவே தவறான தகவல் கொடுத்து கடையை காலி செய்ய வைத்துள்ளனர்.
நானும் இந்த பகுதியில் 30 வருடங்களுக்கும் மேலாக பஞ்சர் கடை நடத்துகிறேன். இந்த பகுதியில் ஒரு நாளும் எந்த பிரச்சினையும் வராது. சுமார் 2 வருடங்களுக்கு முன்புதான் ஷோபனா இந்த வீட்டில் வந்து குடியேறினார். அவர் வந்தது முதலே பிரச்சினைதான். அவர் தினமும் வீட்டை விட்டு வெளியே வரும்போது ரோட்டில் யாரையும் கண்டால் அவருக்கு பிடிக்காது.
சைக்கிளுக்கு யாராவது காற்று அடைத்தால் அவருக்கு பிடிக்காது. உடனே தனது செல்வாக்கை பயன்படுத்தி இல்லாததையும், பொல்லாததையும் சொல்லி போலீசை வரவழைத்து விடுவார்.
என்னைப் பற்றியும் 3 முறை போலீசில் புகார் தெரிவித்துள்ளார். போலீசாரும் நேரில் வந்து என்னை சத்தம் போட்டார்கள். பின்னர் உண்மையையும், எனது நிலையையும் அறிந்து சென்று விட்டார்கள். எங்களுக்கு இது வாடிக்கையாகி விட்டது என்றார் பரிதாபமாக.
இவர் கூறுவது உண்மையாக இருந்தால் நடிகை ஷோபனா மீது போலீஸார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள்.

நன்றி } தட்ஸ் தமிழ்.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கமெண்ட்களை பதிவிட்டு ஊக்கப்படுத்துங்கள் அன்பர்களே!

Comments

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2