ஆபிரகாம் லிங்கனும் ஆறு பசு மாடுகளும்!

ஆபிரகாம் லிங்கனும் ஆறு பசு மாடுகளும்!

அமெரிக்காவில் உள்நாட்டுப் போர் நடந்து கொண்டிருந்த சமயம், அதிபர் ஆபிரகாம் லிங்கன், தன்னுடைய ராணுவத்தளபதி ஒருவருக்கு போர்முனை செய்திகளை அனுப்புவதில்லை என்று கோபப்பட்டு கடிதம் எழுதினார்.  ஆத்திரமடைந்த ராணுவத்தளபதி, ‘ஆறு பசு மாடுகளை கைப்பற்றியிருக்கிறோம். அவற்றை என்ன செய்வது என்ற உத்திரவிற்காக காத்திருக்கிறோம் என்று தன்னுடைய எரிச்சலை வெளிப்படுத்தி தந்தி கொடுத்தார்.
   லிங்கனோ கோபப்படாமல், ‘ஆறு பசு மாடுகளை பிடித்த உங்கள் தீரச் செயலை பாராட்டுகிறேன். அவற்றை என்ன செய்வது என்று கேட்டிருக்கிறீர்கள். காலை மாலை இருவேளையும் தவறாது பாலைக் கறக்க ஏற்பாடு செய்யுங்கள்!
                  லிங்கனின் வாழ்க்கை வரலாறு என்ற நூலில் இருந்து.

புனா நகரில் மதுரை மணி ஐயரின் கச்சேரி; பின் நடந்த விருந்தில் பாயாசம் பிரதான இடம் பிடித்திருந்தது. ஒரு அளவுக்கு மேல் பாயாசம் சாப்பிட யாராலும் முடியவில்லை! இன்னும் சாப்பிடுங்கோ பாயசம் மீந்து விட்டால் என்ன செய்வது என்றார் பரிமாறியவர்.
     கடவாத்திய வித்துவான் ஆலங்குடி ராமச்சந்திரன், நான் சாப்பிடுகிறேன் நான் போதும் என்று சொல்கிற வரையில் உங்களால் சப்ளை செய்ய முடியுமா என்று கேட்டார். தாராளமாக என்ற படியே பாயாச பாத்திரங்கள் ஏழெட்டை கொண்டு வந்து வைத்துவிட்டார் பரிமாறுபவர்.
   முதல் கரண்டி பாயாசம் ஆலங்குடி இலையில் விழுந்தது உடனே அவர் போதும்! என்று கூறினார். பரிமாறுபவர் திகைக்க நான் போதும் என்று சொல்கிறவரையில் தானே உம்மை பாயாசம் போடச் சொன்னேன்... என்றார் ஆலங்குடி.

பெரிய தலைப்பாகையும் ஹோஜாவும்!

துருக்கி நாட்டில் படித்தவர்கள் மட்டுமே அந்த நாளில் பெரிய தலைப்பாகை அணிந்திருப்பர். ஒரு நாள் ஹோஜாவிடம் ‘இந்த கடிதத்தில் என்ன எழுதி இருக்கிறது என்று தயவு செய்து படித்துச் சொல்லுங்கள் என்றான் ஒருவன்.
   இதில் எழுதியிருப்பது விளங்கவே இல்லை என்று சொல்லி கடிதத்தை திருப்பிக் கொடுத்தார் ஹோஜா!
  தலையில் பெரிய தலைப்பாகை மட்டும் கட்டிக் கொண்டிருக்கிறீர்கள் இந்த கடிதத்தை படிக்க முடியவில்லையே என்றான் ஏளனமாக! உடனே தம் தலைப்பாகையை அந்த மனிதன் தலையில் வைத்துவிட்டு, ‘அப்பனே இப்போது தலைப்பாகை வைத்துக் கொண்டிருக்கிறாய்! உன்னால் படிக்க முடிகிறதா என்று பார்!’ என்று சொல்லிவிட்டு போய்க்கொண்டே இருந்தார் ஹோஜா.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிருங்கள்!

Comments

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2