அலட்சியத்தால் பலியான இளம் பிஞ்சுகள்! அதிர்ச்சி ரிப்போர்ட்!

பள்ளிகளின் அலட்சியமும் பரிதாப மரணங்களும்!

வருடா வருடம் பள்ளிகளின் அலட்சியத்தால் பிஞ்சுகள் இறப்பது தொடர்கதையாகிவிட்டது. ஆயிரக்கணக்கில் வேன் ஃபீச் வாங்கும் பள்ளிகள் முடிந்த வரை பெற்றோரின் பர்ஸை காலியாக்குவதில் செலுத்தும் கவனத்தில் சிறிதுகூட அந்த வேன்களின் பராமரிப்பில் அக்கறை காட்டுவதில்லை என்பதுதான் பரிதாபமான உண்மை!
   வேன்களில் அளவுக்குமீறி பிள்ளைகளை திணித்துக்கொண்டு புளிமூட்டைகளாய் செல்லும் வேன்களின் டிரைவர்களுக்கு பெரும்பாலும் ஓட்டுனர் உரிமம் கூட இருப்பதில்லை!ஆனால் இதெல்லாம் பள்ளிகளின் தாளாளர்களுக்கோ முதல்வர்களுக்கோ ஆசிரியர்களுக்கோ அவசியம் இல்லை! அவர்களுக்கு வேண்டியது பணம்! பணம்!
    இவர்களின் அலட்சியத்தால் நேற்று மேலும் ஒரு பிஞ்சு தன் இன்னுயிரை ஈந்து இருக்கிறது! பஸ்ஸில் இருந்த ஓட்டை வழியாக தவறி விழுந்து பின் சக்கரத்தில் அடிபட்டு பலியான அச்சிறுமியின் வயது நான்கு.சென்னை தாம்பரம் அடுத்துள்ள  சேலையூர் பகுதியில் இயங்கி வரும் சீயோன் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவி. மாணவியின் தந்தை ஒரு ஆட்டோ டிரைவர். ஏழையாக இருந்தாலும் தன் மகளை நன்கு படிக்க வைத்துபெரிய ஆளாக்க வேண்டும் என்று நினைத்த அந்த தந்தையின் கனவை அந்த ஓட்டைபஸ் பொய்த்துப்போக செய்து விட்டது.
    பஸ்சிலிருந்து சிறுமி கீழே விழுந்ததும் உடன் பயணித்த மாணவர்கள் சத்தம் போட்டும் அரை கிலோ மீட்டர் தள்ளிதான் பஸ்ஸை நிறுத்தியுள்ளார் டிரைவர் சீமான். இவருக்கு அப்படி என்ன கல் நெஞ்சமோ? ஆத்திரமடைந்த மக்கள் பஸ்ஸை தீயிட்டு டிரைவரை கடுமையாக தாக்கியுள்ளனர். என்ன செய்து என்ன பயன்? இழந்த சிறுமி மீண்டும் கிடைப்பாளா? இழந்தவனுக்குத்தான் தெரியும் இழப்பின் கொடுமை!  இதில் இன்னொரு வேதனையான விசயம்.விபத்துகுறித்து பள்ளியின் தாளாளரிடம் விசாரித்தபோது அந்த பஸ் எங்கள் பள்ளியுடையது அல்ல! தனியாரிடமிருந்து வாடகைக்கு பெறப்பட்டது. அதன் பராமரிப்பை அவர்கள்தான் செய்ய வேண்டும் என்று கூலாக கூறியுள்ளார்.
  டேய் மாங்கா மடையா! உன்னை நம்பித்தானே பிள்ளைகளை அனுப்புகிறார்கள் பெற்றோர்கள்! நீதானே அந்த பஸ்ஸை பள்ளிக்கு ஓட்டுமாறு ஒப்பந்தம் செய்கிறாய்? அப்புறம் எப்படி இப்படி கூறுகிறாய்? உனக்கெல்லாம் பள்ளி நடத்த உரிமம் எவன் கொடுத்தது?
   இந்த மாதிரி ஆசாமிகளை சிறையில் தள்ளி பள்ளியின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். தனியார் பள்ளிகளின் தரம் குறித்து மறு ஆய்வு செய்து தரமற்றவைகளின் உரிமங்களை ரத்து செய்ய வேண்டும். குறிப்பாக இந்த பள்ளிகள் வேன்களை வாடகைக்கு எடுப்பது போன்றவைகள் குறித்து அரசு ஒரு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும்.
  ஒரு கும்பகோணம் தீ விபத்து நடந்தபின் தான் அரசு கொஞ்சம் விழித்துக் கொண்டு சில கிடுக்கிப்பிடிகளை போட்டு இன்று பெரும்பாலான பள்ளிகள் ஓரளவு தரம் மிக்க கட்டிடங்களில் இயங்கி வருகின்றன. அதே போன்று இந்த விசயத்திலும் அரசு துணிந்து விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  இல்லையெனில் இந்த பள்ளிகள் வழக்கம்போல சப்பைக்கட்டுகளை கூறி இந்த மாதிரி விபத்துக்களை மூடி மறைத்துவிடும். இவர்களால் இந்தியாவின் எதிர்காலத்தூண்களை உருவாக்க முடியாவிட்டாலும் இழக்காமல் இருக்க ஆவண செய்ய வேண்டியது அரசின் கடமை!
பெற்றோர்களும் தன் பிள்ளைகளை நல்ல பள்ளியில் சேர்த்து விட்டோம் என்று கடமையை முடித்துக் கொள்ளாமல் பள்ளி எப்படிநடக்கிறது. பள்ளி வேன்களின் தரம் ஆகியவை குறித்து அடிக்கடி விசாரித்து குறையிருப்பின் நிர்வாகத்திற்கு சுட்டிக்காட்ட வேண்டும்.
ஓட்டை ஒடிசல் பேருந்துகள், உரிமம் அற்ற டிரைவர்கள், அதிக மாணவர்களை ஏற்றிச் செல்வது போன்ற விசயங்களை காசுக்கு ஆசைப்பட்டு இனியாவது செய்யாமல் இருங்கள். உங்களுக்கு பணம் முக்கியம்தான்! அதே சமயம் அதற்கு எங்கள் பிள்ளைகளை எதற்கு பலி வாங்குகிறீர்கள் பள்ளிகளே!

இதை எழுதி முடித்து பார்த்தால் இன்னோரு செய்தி மீண்டும் அதிர்ச்சி ஊட்டியது! இவர்கள் எல்லாம் திருந்தவே மாட்டார்களா? என்று கேட்க வைத்தது. செய்தி கீழே!

பச்சிளங்குழந்தையின் உயிரை காவு வாங்கிய 200 ரூபாய்
ஜலந்தர் : மக்களிடையே மனிதநேய உணர்வு மறைந்து வருவதை மெய்‌ப்பிக்கும் வகையில், மருத்துவமனை இன்குபேட்டரில் வைப்பதற்கான தொகையான ரூ. 200யை, பெற்றோர்கள் தர முடியாததால் பச்சிளங்குழந்தை பலியான சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் சஞ்சீவ் குமார். தினக்கூலி தொழிலாளரான இவர், பிரசவத்திற்காக தனது மனைவி சுனி‌தாவை, ஜலந்தர் அரசு பொது மருத்துவமனையில் சேர்த்திருந்தார். இந்நிலையில், இம்மாதம் 20ம் தேதி இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. குறைந்த எடையுடனும் மற்றும் உடலநலக்குறைவுடன் குழந்தை பிறந்ததால், மருத்துவமனை டாக்டர்கள், குழந்தையை இன்குபேட்டரில் வைத்திருக்க அறிவுறுத்தினர். இன்குபேட்டர் இயங்க நாள் ஒன்றிற்கு மின்கட்டணமாக ரூ. 25 செலவாவதால், இன்குபேட்டரில் குழந்தையை வைக்க ரூ. 200 செலுத்த வேண்டும் என்று பெற்றோர்களிடம் டாக்டர்கள் தெரிவித்திருந்தனர்.
யாரும் உதவவில்லை : பெயிண்டர் பணி செய்து வரும் சஞ்சீவ் குமாரால், உடனடியாக அந்த பணத்தை புரட்ட இயலவில்லை. தான் பலரிடம் கேட்டுப் பார்த்தும் தனக்கு யாரும் உதவவில்லை என்றும், தயவுசெய்து மருத்துவமனை டாக்டர்கள் உதவிசெய்ய வேண்டும் என்று அவர்களிடம் சஞ்சீவ் வேண்டுகோள் விடுத்தார். இதற்கு மருத்துவமனை செவிசாய்க்கவில்லை.
குழந்‌தை அகற்றம் : இன்குபேட்டருக்கான பணம் தராததையடுத்து, மருத்துவமனை குழந்தையை புதன்கிழமை இரவு இன்குபேட்டரிலிருந்து அகற்றியது இந்த விளைவே குழந்தை பலியாக காரணமானது.
பெற்‌றோர்கள் குமுறல் : பணம் தராத காரணத்தினால், இன்குபேட்டரிலிருந்து குழந்தைய‌ை அகற்றிய மருத்துவமனை நிர்வாகம், குழந்தைக்கு ஏற்றப்பட்டுக் கொண்டிருந்த குளுகோஸ் பாட்டிலையும் அகற்றிவிட்டதாக சஞ்சீவ் குமாரும், தங்கள் குழந்தையை பணத்திற்காக அவர்கள் கொன்றுவிட்டதாக தாய் சுனிதாவும் கூறினர்.

இதுகுறி்த்து, மருத்துவமனை தலைமை டாக்டர் கூறியதாவது, இச்சம்பவம் குறித்து, சஞ்சீவ் குமார் புகாராக அளித்தால், உரிய விசாரண‌ை நடத்தப்பபடும் என்று அவர் கூறினார்.

டிஸ்கி} இது போன்ற அலட்சிய போக்கும் மனிதாபிமானமற்ற செயல்களும் தினம் தினம் நடந்து கொண்டிருக்கின்றன. இவைகள் என்று குறையும்! இதற்கு அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது? கருணைத்தொகை வழங்கி கண்ணீரை துடைத்து விட்டு போவதால் என்ன பயன்? மக்களே சிந்தியுங்கள்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவுகுறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து உற்சாகப்படுத்துங்கள்!

Comments

  1. வணக்கம் ,
    தமிழ் தளங்கள், வலைப்பூக்களிற்கான புதியதோர் திரட்டி. உங்கள் ஆக்கங்கள் பதிவுகளையும் திரட்டு.கொம் இலும் இணையுங்கள்.
    நன்றி.
    www.thiraddu.com

    ReplyDelete
  2. காசில் மட்டுமே குறியாயிருக்கும் மூடர்கள்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

      Delete
  3. மிகவும் வேதனையான ஒரு நிகழ்வு!!!........
    இந்த நிலை மாற வேண்டும் என்பதில் தங்கள் ஆதங்கம்
    ஆக்கத்தில் மொத்தமாக வெளிப்பட்டுள்ளது .உங்கள்
    கடமை உணர்வைப் பாராட்டுகின்றேன் .அந்தச் சிறுமியின்
    ஆன்ம சாந்தி பெறவும் அவரது தாய் தந்தை உறவினர்களுக்கு
    மன அமைதி நிலவவும் இறையருள் கிட்டட்டும் .மிக்க நன்றி
    பகிர்வுக்கு .

    ReplyDelete
    Replies
    1. நீண்ட நாட்களுக்குப் பிறகு எம் தளம் வந்து கருத்திட்டமைக்கு நன்றி!தொடர்ந்து வந்து உற்சாகப்படுத்துங்கள்!

      Delete
  4. திருந்தாத மனங்கள் இனியேனும் திருந்தவேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயா!

      Delete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!