Posts

Showing posts from April, 2012

நான் ரசித்த சிரிப்புக்கள் 10

Image
நான் ரசித்த சிரிப்புக்கள் 10 தலைவருக்கு என்ன திடீர்னு தமிழ்மேல பற்று ? செல்போனை கைபேசின்னு தூய தமிழ்ல சொல்லுறாரு?   செல்லுன்னா அவருக்கு ஜெயில் ஞாபகம் வருதாம்!                           வி.சகிதா முருகன். திருட்டுப் பணத்தை செலவழிச்சு கபாலி வீடு கட்டறானாமே?   ஆமா அது அவனோட களவு வீடு!                            கவின் அந்த நர்ஸ் என்மேல உயிரையே வச்சிருக்காங்க டாக்டர்! எப்படி சொல்றீங்க? ஆபரேஷணுக்கு சம்மதிக்க வேணாம்னு அட்வைஸ் பண்ணினாங்களே!                             பி,ஜி.பி இசக்கி. அவர் மனைவியாலே அதிகம் பாதிக்கப்பட்டவர் போலிருக்கு! எப்படி சொல்றே? வாய்ப்பூட்டு க...

நம்ம மதுரை ஆதீனமா?...ஆச்சரியத்தில் மதுரை மக்கள்!

Image
மதுரை: மதுரை மக்கள் பெரும் வியப்பிலும், குழப்பத்திலும், ஆச்சரியத்திலும் மூழ்கியுள்ளனர். மதுரை ஆதீனத்தின் சமீபத்திய முடிவுதான் இந்த ஆச்சரியத்திற்குக் காரணம். மதம் சார்ந்த மடங்கள் எத்தனையோ தமிழகத்தில் இருந்தாலும் அதையும் தாண்டி மக்கள் மனதில் பெரிய இடம் பிடித்தவர் குன்றக்குடி அடிகளாரும், அவரது மடமும் மட்டுமே. மதம் சார்ந்த ஒரு அதிபதியாக இருந்தாலும் கூட தமிழார்வலராக, தமிழ் ஊழியராக, தமிழுக்காகவும், சமுதாயத்திற்காகவும் தொண்டாற்றிய பெருமை படைத்தவர் குன்றக்குடி அடிகளார். தனக்காக, தான் சார்ந்த மதத்திற்காக என்றில்லாமல், தமிழுக்காகவும், தமிழ்ச் சமுதாயத்திற்காகவும் தனது இறுதி மூச்சு வரை பாடுபட்டவர் குன்றக்குடி அடிகளார். குன்றக்குடி மக்கள் இன்றளவும் அடிகளாரை தெய்வமாக வழிபட்டு வருகின்றனர். மத மாச்சரியமின்றி, அரசியல் பாகுபாடின்றி அத்தனை பேராலும் பாராட்டப்பட்டவர், மதிக்கப்பட்டவர் குன்றக்குடி அடிகளார். அவருக்குப் பக்கத்தில் கூட யாரும் வர முடியாது என்பதுதான் உண்மை. குன்றக்குடி அடிகளாரைப் போல இல்லாவிட்டாலும் கூட சமுதாயம் சார்ந்த ஒரு மனிதராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர் மதுரை ஆதீனம்....

மதுரை ஆதீனத்தின் அதிரடி முடிவு... இந்து அமைப்புகள் அவசரமாக கூடுகின்றன!

Image
மதுரை: நித்தியானந்தாவை, 1500 ஆண்டு பழமை வாய்ந்த இந்தியாவின் மூத்த ஆதீனமான மதுரை ஆதீனத்தின் 293வது குரு மகா சன்னிதானமாக தற்போதைய ஆதீனம் நியமித்துள்ளது குறித்து பல்வேறு இந்துக் கட்சிகளும், அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த விவகாரம் குறித்துப் பேச அவசரக் கூட்டம் ஒன்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் மத்தியிலும் மதுரை ஆதீனத்தின் இந்த திடீர் முடிவு பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.மதுரை ஆதீனத்தை மக்கள் தற்போது கேலிப் பொருளாக பார்க்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் கூறுகையில், இன்னும் ஓரிரு நாளில் அவசரக் கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யவுள்ளோம். தற்போது நடந்து வருவது மிகவும் அபாயகரமான சூழல் ஏற்பட்டிருப்பதையே உணர்த்துகிறது. மதுரை ஆதீனம் மிகவும் மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விட்டார். இந்துக்கள் அனைவரையும் அவர் அவமானப்படுத்தியுள்ளார், களங்கப்படுத்தியுள்ளார். மதுரை ஆதீனமாக நியமிக்கப்பட்டவருக்கு பெங்களூரில் வைத்து முடி சூட்டியுள்ளார். அங்கு போய் மதுரை ஆதீனத்தின் அடுத்த வாரிசு யார் என்பதை அவர் கூ...

பசுமை நிறைந்த நினைவுகள் பகுதி 9

Image
பசுமை நிறைந்த நினைவுகள் பகுதி 9 வாசகர்களுக்கு இந்த தொடர் சற்று இடைவெளி விட்டுவிட்டது வருத்தமாக இருந்திருக்கும். இன்னும் சிலருக்கு அறுவை தொலைந்தது என்று இருந்திருக்கும்! சுமார் ஒரு இருபது இருபத்தைந்து நபர்கள்தான் இதை படிக்கிறீர்கள் என்று கூகுள் கூறினாலும் என்னால் சும்மா இருக்க முடியவில்லை! உங்களுடன் ரம்பம் போட மீண்டும் வந்து விட்டேன்! என்ன செய்வது இனி காப்பி பேஸ்ட் செய்யமாட்டேன் என்று சூளுரைத்தும் விட்டேன். இனி என் எழுத்துக்களை நீங்கள் சகித்துதான் ஆக வேண்டும்.    நாடெங்கும் ஐ.பி.எல் மோகத்தில் இருக்க அதற்கு டிவியில் டி.ஆர்.பி கிடைக்கவில்லை என்றுசெய்தித்தாள்கள் நாளொறு மேனியும் பொழுதொறு வண்ணமாக சுவையான செய்திகளை போட்டு வாசகர்களை கவர்ந்து வருகிறது. இந்த சமயத்தில் எங்கள் ஊரிலும் உள்ளூர் டோர்ணமெண்ட் ஒன்று இன்று ஆரம்பித்து இருக்கிறார்கள் சுமார் இருபது டீம்கள் கலந்து கொள்கின்றனவாம் 300ரூபாய் நுழைவுக் கட்டணமாம்.எங்கள் கொள்ளைப்பக்கத்தில் தான் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் காலையில் இருந்து ஒரே கும்மாளம்தான்!    இதை பார்த்ததும் எனக்கு பழைய ஞாபகங்கள் கிளர்ந்து வ...

தளிர் ஒரு முக்கிய அறிவிப்பு!

Image
அன்பார்ந்த வலைப்பூ வாசக பெருமக்களே! வலைப்பூவில் புதிய மாற்றங்களை கண்டு இருப்பீர்கள்! இதுவரை அலேக்ஸா ரேங்க் மற்றும் அதிக வாசகர்களை இழுப்பதற்காக மற்ற இணையதளங்களில் குறிப்பாக தட்ஸ் தமிழ்! தினமலர் போன்றவற்றில் இருந்து காப்பி பேஸ்ட் செய்து வந்தேன்!       இனி இவற்றை தவிர்க்கலாம் என்று எண்ணியுள்ளேன்! படைப்புகள் அதிக புகழை அடையவேண்டுமே தவிர அதிக எண்ணிக்கை படித்திருக்க வேண்டாம் என்று எண்ணுகிறேன்! இனிமேல் எண்ணிக்கையை நம்பாமல் என்மேல் நம்பிக்கைவைத்து எழுதலாம் என்று எண்ணுகிறேன்!     அதே சமயம் சுவாரஸ்யமான சினிமா பொழுது போக்கு தகவல்களையும் என்பாணியில் தரலாம் என்று இருக்கிறேன். இனி முக்கிய செய்திகள் தகவல்கள் மட்டுமே இந்த வலைப்பூவில் வெட்டி ஒட்டப்படும். படங்களை பொறுத்தவரை கூகிள் இமேஜ்தான் எனக்கு வழி!      இதனால் நாள்தோறும் பதிவிட முடியாமல் போகலாம்! வாசகர்கள் பொறுத்தருள வேண்டும்! செய்திகள், சினிமா, சிறுவர்பகுதி, ஆன்மீகம், பொதுஅறிவு என்று பிரித்து அந்தவகையில்  எழுதலாம் என்று எண்ணுகிறேன்!   உங்களின் மேலான கருத்துக்களை பின்னூ...

உரிமையடையும் நாள் என்னாளோ?

Image
உரிமையடையும் நாள் என்னாளோ? வீடிழந்தோம்! குடியிருந்த ஊரிழந்தோம்! நாடிழந்தோம் நல்ல நண்பர்களை இழந்தோம்! உறவிழந்தோம் உற்றதுணைஇழந்தோம்! பெற்ற மண்ணிழந்தோம்! அகதிகளாம் நாங்கள்! மாற்றாந்தாய் அரவணைப்பில் மறந்திடுமா எங்கள் சோகங்கள்! சொல்லிழந்தோம் மொழியிழந்தோம் சோற்றுக்கும் நிற்க நிழலுக்கும் போராடி போராடி சுமையாகிப்போனோம்! மொழியாலே ஒன்றிணைந்தாலும் விழியாலே வேறுபட்டு பாழும் அரசியலில் பகடையாய் அடிபட்டு வேறிழந்து தவிக்கிறோம் நாங்கள்! எத்தனைதான் வசதிகள் கொடுத்திடினும் எங்கள் சோகம் தீர்ந்திடுமா? என் நாடு கிடைக்குமா? என்ற ஏக்கம்தான் தீர்ந்திடுமா? இழந்தவனுக்குத்தான் தெரியும் இழப்பின் வலி! எங்கள் வலி கொஞ்சமல்ல! வீதீயிலே விளையாடும் எங்கள் பிள்ளைகளுக்கு எங்கள் நாடு மறந்து போகும் முன்னே எங்கள் விதி மாறுமா? எத்தனைதான் இழந்தாலும் இன்னும் உணர்விழக்கவில்லை நாங்கள்! இதை உணராமல் தமிழர்கள் எங்களை தள்ளி வைப்பது ஏனோ? உணர்வாலே ஒன்றுபட்டு உரிமையடையும் நாள் என்னாளோ அன்னாளே எங்கள் பொன்னாள்! தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகரலாமே...

கர்வம் பிடித்த கிளி! பாப்பாமலர்!

Image
கர்வம் பிடித்த கிளி! செல்வபுரி என்ற சிற்றூரின் எல்லையில் ஒரு பெரிய மாமரம் வளர்ந்து இருந்தது. அந்த அழகிய மாமரத்தின் கிளைகள் விரிந்து இலைகள்பச்சை பசுமையாக இருந்தது. பூக்களும் கனிகளும் நிறைந்த அந்த மாமரத்தில் பறவைகள் சில கூடு கட்டி வாழ்ந்து வந்தன. அந்த மாமரத்தில் ஒரு கர்வம் கொண்ட கிளியும் வசித்துவந்தது.    அது எப்போதும் தன் அழகையும் தன்னுடைய பேச்சு திறமையையும் எண்ணி பெருமைப் பட்டுக் கொள்ளும். இங்கு வசிக்கும் மற்ற பறவை இனங்களை அது சுத்தமாக மதிப்பதே இல்லை! அவை தன்னுடன் வசிக்க லாயக்கற்றவை என்று அது எண்ணியது.மற்ற பறவைகளை கிளி சற்றும் லட்சியம் செய்வது இல்லை! தன்னுடைய அழகின்மீது கர்வம் கொண்ட அது அழகே ஆபத்தாக முடியும் என்பதை அறியாமல் மற்ற பறவைகளை ஏளனம் செய்து கொண்டு இருந்தது.     அங்கு வசிக்கும் மற்ற பறவைகள் எல்லாம் தனக்கு கீழ்படிந்து நடக்க வேண்டும் என்று கிளி விரும்பியது. எனவே அது மற்ற பறவைகளை அடிக்கடி வம்புக்கு இழுத்து கடுஞ்சொற்களை கூறி அவமான படுத்திவந்தது. கிளியின் குணம் அறிந்த மற்ற பறவைகள் அதனிடம் பேசுவதை தவிர்த்துக் கொண்டன. கிளியை கண்டாலே கூண்டில் போய...

நான் கை கால் ஊன்றி நடக்கிறதே பெரிய விஷயம் சார்! - அஜீத் 'ஓபன் டாக்'!

Image
என் நடிப்பு, முயற்சியைப் பாராட்ட மனமில்லாதவர்கள், என் தோற்றத்தையும் உடல் அமைப்பையும் கிண்டல் செய்கிறார்கள். 15 ஆபரேஷன்களுக்குப் பிறகு நான் நடப்பதே பெரிய விஷயம், என்கிறார் அஜித் குமார். சமீபத்தில் அவர் ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியின் சில பகுதிகள்... செல்ப் புரமோஷன் கிடையாது... "நான் 'மங்காத்தா’வில் இருந்து என் படங்களை புரொமோட் பண்ணிப் பேசறது இல்லைனு முடிவு பண்ணிட்டேன். அது 'பில்லா-2’-வுக்கும் பொருந்தும். ஜூன் மாசம் படம் ரிலீஸ். இதுக்கு மேல் இப்போதைக்கு எதுவும் இல்லை!'' மனதை பாதித்த விமர்சனம்... ''படம் நல்லா இருக்கா, இல்லையானு சொல்லாம, சிலர் நான் குண்டா இருக்கேன்னு பெர்சனலா கமென்ட் அடிக்கிறாங்க. 15 ஆபரேஷன்களுக்குப் பிறகு என் மெட்டபாலிஸமே மாறிடுச்சு. நான் ரெண்டு காலையும் ஊன்றி நடக்கிறதே பெரிய விஷயம் சார். அதை நினைச்சு நான் சந்தோஷப்படுறேன். நான் நல்ல டான்ஸரா இல்லாம இருக்கலாம். ஆனா, அதுக்காக முயற்சி பண்றேன். இவ்வளவு சிகிச்சைகளுக்குப் பிறகும் ஹெலிகாப்டர்ல இருந்து குதிக்கிறேன்... சண்டை போடுறேன். ஆனா, தொடர்ந்து என் பெர்சனல் தோற்றத்தை சிலர் கிண்ட...

தளிர் ஹைக்கூ கவிதைகள்! 7

Image
சங்கீதத்தில் சங்கேதம் பேசுகின்றன இரவு பறவைகள்! ஓசை சத்தத்தில் உறங்கவில்லை இரவு புல்லினங்கள்! சலனப்பட்டு வாழ்க்கை இழக்கிறது நீர்! மரங்களின் பின்னால் மறைந்திருக்கின்றன ஊர்கள்! ஓசை எழுப்பினாலும் சுகம்தான்! காற்று! காற்றில் காதல்தூது! பூத்தன மரங்கள்! இச்சை கொண்டன கண்கள் பச்சையான பூமி! மின்னியது கூசவில்லை! மின்மினி! வெட்டியதும் பாராட்டினார்கள்! குளம்! துரத்திக்கொண்டே இருக்கிறது தெரியவில்லை! காலம்!   வெள்ளை தேவதை விஜயம் பெருமூச்சுவிட்டது பூமி நிலா கட்டிவைத்தார்கள் மணத்தது! கூந்தலில் பூ! தங்கள் வருகைக்கு நன்றி கருத்துக்களை பகிர்ந்து செல்லலாமே!

நான் ரசித்தசிரிப்புகள் 9

Image
நான் ரசித்தசிரிப்புகள் 9 சோப்பு விளம்பரத்துல நடிக்க ஒரு பொண்ணு தேவை! பொண்ணு அழகா இருக்கணுமா? இல்ல அழுக்கா இருக்கணும்!                உஷா சாரதி தலைவர்கள் மேலே ஊழல் புகார் வந்ததும் நிருபர்கள் எல்லோருக்கும் வெள்ளைப்பேப்பரை வரிசையா கொடுத்தாரே என்ன விஷயம்? வெள்ளை அறிக்கை தர்றாராம்!.                        தேனி முருகேசன் டாக்டர் பட்டம் கொடுக்க வந்தவங்க கிட்ட நம்ம தலைவர் எதுக்கு பல் டாக்டர் பட்டம் கேக்கறாரு?   அப்பத்தானே எல்லோரட சொத்தையெல்லாம் பிடுங்கலாம்!                         வி.சாரதிடேச்சு ஆனாலும் அவரைப்போல ஒரு முன் யோசனைக்காரரை பார்க்க முடியாது!   ஏன்? கல்யாணபத்திரிக்கையோட கூடவே ஒரு மொய்கவரையும் குடுக்கிறாரே! ...

பூமி எனும் சாமி: இன்று சர்வதேச பூமி தினம்

Image
சூரியக் குடும்பத்தில், பல் உயிரினங்களும் வாழத் தகுதியான ஒரே கிரகம் நாம் வாழும் பூமி மட்டுமே. அப்படிப்பட்ட பூமியை, பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, சர்வதேச பூமி தினம் ஏப். 22ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. அமெரிக்காவின் சுற்றுச்சூழல் ஆர்வலர் "கைலார்ட் நெல்சன்' என்பவரின் தீவிர முயற்சியால் 1970ல், இத்தினம் தொடங்கப்பட்டது. தற்போது "எர்த் டே' 175க்கும் மேற்பட்ட நாடுகளில் கடைப்பிடிக்கப்படுகிறது. பூகம்பம், சுனாமி,வெள்ளம், வறட்சி, பனிப்பாறை உருகுதல், எரிமலை வெடித்தல் போன்றவை அடிக்கடி நிகழ்கின்றன. இதற்கு காரணம், பூமியின் சூற்றுச்சூழல் பாதிக்கப்படுவது தான். அதிகரிக்கும் வெப்பநிலை: தொழிற்சாலைகள், வாகனங்களில் இருந்து வெளியாகும் கரியமில வாயுவால் ஓசோன் பாதிக்கப்படுகிறது. வெப்பநிலை மற்றும் பருவநிலையிலும் மாற்றம் ஏற்படுகிறது. இதன் மூலம் காற்று, நீர் மாசுபடுகிறது. அதிக மழை அல்லது வறட்சி என இயற்கை சீரழிவுகள் ஏற்படுகின்றன. இதைத் தடுக்க கரியமில வாயுவின் அளவை கட்டுப்படுத்த முயற்சிக்க வேண்டும். தடுக்கும் வழிகள்: ஒவ்வொருவரும் குறைந்தது ஒரு மரம் வள...

சென்ரியுவாய் திருக்குறள் 11-15

Image
குறள் 11: வான்நின்று உலகம் வழங்கி வருதலால் தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று . கலைஞர் உரை : உலகத்தை வாழ வைப்பது மழையாக அமைந்திருப்பதால் அதுவே அமிழ்தம் எனப்படுகிறது . மு . வ உரை : மழை பெய்ய உலகம் வாழ்ந்து வருவதால் , மழையானது உலகத்து வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத்தக்கதாகும் . சாலமன் பாப்பையா உரை : உரிய காலத்தில் இடைவிடாது மழை பெய்வதால்தான் உலகம் நிலைபெற்று வருகிறது ; அதனால் மழையே அமிழ்தம் எனலாம் . தளிரின் சென்ரியு அமிழ்தம் உண்டும் இறக்கின்றன மரங்கள் . அமிழ்தாகிய மழையை உண்டும் வெட்டப்பட்டு இறக்கின்றன மரங்கள் . உயிர்கள் உய்ய வானம் பெய்யும் அமிழ்தம் !   குறள் 12: துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை . கலைஞர் உரை : யாருக்கு உணவுப் பொருள்களை விளைவித்துத்தர மழை பயன்படுகிறதோ , அவர்களுக்கே அந்த மழை அவர்கள் அருந்தும் உணவாகவும் ஆகி , அரிய தியாகத்தைச் செய்கிறது . மு . வ உரை : உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு , பருகுவோர்க்க...