மரங்களுக்கும் வந்திருச்சு பீதி! பசுமை வழி சாலைக்கு வந்த சோதனை
தமிழகத்தில் அ.தி.மு.க., ஆட்சி அமைந்து, புது அமைச்சரவை பதவியேற்ற மூன்று மாதத்திற்குள், மூன்று முறை அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால், மக்கள் மத்தியில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தி, இப்போது யாரை பார்த்தாலும், மீண்டும் அமைச்சரவை மாற்றம் இருக்காமே என்ற பேச்சு அடிபடுகிறது. பொதுமக்களே ஆர்வமாக இருக்கும் போது, பதவியில் உள்ளவர்கள், பதவிக்கு வரத் துடிப்போர் மத்தியில் எப்படி மனஓட்டம் இருக்கும். தமிழக சட்டசபைத் தேர்தலில், அ.தி.மு.க., அமோக வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பை ஏற்றதும், முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளித்தார். சீனியர்களை விட்டு விட்டு நமக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதே என்று ஆச்சர்யப்பட்டவர்கள் இதை தக்க வைக்க வேண்டுமே என பயந்தும் போயினர். பரிகார பூஜைகள்: இதன் காரணமாக, அமைச்சர்களாக பதவியேற்றதும், கோட்டையில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறையில் போய் அமர்வதற்கு கூட, பரிகார பூஜைகள் செய்தும், நாள், நட்சத்திரம் பார்த்தும் இருக்கின்றனர். இதற்கு காரணம் இருக்கிறது, கடந்த ஆட்சியில் அமைச்சர்களாக இருந்தவர்கள், இப்போது வழக்குகளில் சிக்கி சிறையில் உள...