வணங்கிடுவோம்.!


வணங்கிடுவோம்.!

பட்டொளி வீசும் பாரதக் கொடியை வணங்கிடுவோம்!
பட்ட துயரங்கள் தொலைந்ததென பாடி துதித்திடுவோம்!
எத்தனை இன்னல்கள் வந்திடினும் இணையில்லா
இந்திய மண்ணை உயிரினும் மேலாய் காத்திடுவோம்!
பாரத பூமியைப் பாரினில் உயர்த்திடவே
பாங்குடன் நாமும் பணிபுரிவோம் - நம் இந்திய
தேசம் உலகினுக்கோர் உதாரணமாகிட உழைத்திடுவோம்!
சுதந்திர திருநாள் தனிலே சுயராஜ்யம் கிடைத்திட
சுடராய் இருந்திட்ட தலைவர்களைப் போற்றிடுவோம்!
இந்திய நாட்டை சுரண்டிடும் எல்லையில்லா
ஊழலை ஒழித்திட ஓர் உறுதி ஏற்போம்!
என்றும் இந்தியா ஒளிவிட
உவகை கொள்வோம்!

அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பதிந்து செல்லலாமே! கீழுள்ள நிரலிகளில் வாக்களித்துச் செல்லலாமே!

Comments

Post a Comment

Popular posts from this blog

என்னைக் கவர்ந்த நேரு! குழந்தைகள் தின ஸ்பெஷல்!

வெற்றி உன் பக்கம்! கவிதை!

உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்!