மீண்டும் சித்திரையில் தமிழ்ப் புத்தாண்டு! சட்டசபையில் ஜெ.அறிவிப்பு!

சென்னை: கடந்த தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட தமிழ் புத்தாண்டு ரத்து செய்யப்பட்டு சித்திரை மாதம் முதல் நாளிலேயே தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இன்று நடந்த சட்டசபையில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழகத்தில் அ.தி.மு.க., ஆட்சி மாறியதும் தி.மு.க., கொண்டு வந்த பல்வேறு திட்டங்களான கலைஞர் காப்பீட்டு திட்டம், இலவச கலர் டி.வி., திட்டம் , இலவச வீடு வழங்கும் திட்டம் சமச்சீர் கல்வி (கோர்ட்டு போய் தப்பியது ) , புதிய தலைமை செயலகம் மாற்றம் ரத்து என உள்ளிட்ட திட்டங்கள் ரத்து செய்யப்பட்டன.

தை மாதம் முதல் நாளில் தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படும் என தி.மு.க., சட்டம் இந்நிலையில் இயற்றியது.இன்றைய சட்டசபையில் இன்று தமிழக அரசு ரத்து செய்தது. மீண்டும் சித்திரை முதல் நாளில் தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படும் என்று புதிய சட்ட மசோதாவை அவையில் அரசு தாக்கல் செய்தது. இதற்கு கம்யூ., கட்சியை சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பா.ம.க., எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை.

பல்லாண்டு காலம் நடைமுறையில் இருந்த வழக்கத்தை மாற்ற வேண்டாம் என தொல்லியல், வானிலை நிபுணர்கள் தெரிவித்த கருத்தின்படி இந்த மாற்றம் கொண்டு வருவதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தை மாதம் ( பொங்கல் நாளில் ) கொண்டாடப்படுவது மக்களுக்கு பல்வேறு தொந்தரவுகள் இருந்ததாகவும் அரசு தனது மசோதாவில் கூறியுள்ளது. இந்த மசோதாவை அறநிலையத்துறை அமைச்சர் சண்முகநாதன் தாக்கல் செய்தார். இதன் படி சித்திரை ஒன்று ஏப்ரல் 14 ம் தேதி தமிழ்புத்தாண்டாக கொண்டாடப்படும்.

‌‌ஜெ., விளக்கம் சொல்கிறார்: இது தொடர்பாக அவர் சட்டப்பேரவையில் முதலவ்ர் ஜெ., ‌பேசுகையில், தமிழ் புத்தாண்டு சட்டம் சுய விளம்பரத்துக்காக இயற்றப்பட்டதே தவிர மக்களுக்கு எந்தவித நன்மையும் இல்லை. ஆண்டாண்டு காலமாக சித்திரை மாதத்தை தமிழ் புத்தாண்டாக கொண்டாடும் தமிழக மக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக அமைந்துள்ளது. இந்த சட்டம் இயற்றப்பட்ட உடன் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. விளம்பரத்திற்காக இது உருவாக்கப்பட்டது. இதை தவிர இந்த சட்டத்தினால் யாருக்கும் நன்மை இல்லை என்றார்.


கருணாநிதி கருத்து என்ன ? : தி.மு.க., தலைவர் கருணாநிதி இது குறித்து வெளியிட்டுள்ள அறிகையில்: தமிழ் புத்தாண்டு தை த்திங்கள் முதல் நாளில் கொண்டு வரவேண்டும் என தமிழ் புலவர்கள் கோரிக்கை வைத்ததன் காரணமாகத்தான் மாற்றி அமைக்கப்பட்டது. 1921 ம் ஆண்டு முதல் மறை மலை அடிகள் தலைமையில் 500 புலவர்கள் அந்நாள் முதல் இதனை வலியுறுத்தி வந்தனர். தமிழ் புத்தாண்டை மாற்றுவது என்பது தி.மு.க.,வின் முடிவு அல்ல. இடதுசாரி கட்சிகளின் தமிழ் உணர்வு பாராட்டத்தக்கது . இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
நன்றி தினமலர்.
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவுகுறித்த கருத்துக்களை வரவேற்கப் படுகின்றன. கீழுள்ள நிரலிகளில் வாக்கலித்து செல்லலாமே!

Comments

  1. அட போங்கப்பா இவுங்க(அரசியல்வாதிங்க) பன்ற கூத்துல எனக்குதமிழ் புத்தாண்டே மறந்து போச்சு

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

என்னைக் கவர்ந்த நேரு! குழந்தைகள் தின ஸ்பெஷல்!

வெற்றி உன் பக்கம்! கவிதை!

உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்!