பட்டுச் சட்டை! பாப்பா மலர்!
பட்டுச் சட்டை!
முன்னொரு காலத்தில் விவேகபுரி என்ற சிற்றூரில் தையல் காரன் ஒருவன் வசித்துவந்தான்.அவனுக்கு ஒரே மகள் பெயர் கோமதி அந்த தையல்காரணுக்கு அவன் பெண்ணைத்தவிர வேறு சொந்தம் எதுவும் இல்லை. அவன் மனைவியும் சில வருடங்களுக்கு முன் இறந்து போனாள். அவனுக்கு மிகவும் வயது முதிர்ந்து விட்டது. தள்ளாமையால் அவதிப் பட்ட அவன் ஒரு நாள் தன் மகளை அழைத்துக் கூறலானான்.
மகளே! எனக்கு மிகவும் வயதாகிவிட்டது. இன்னும் சிறிது நாள்தான் உயிர் வாழ்வேன்.உனக்கும் பருவ வயது கடந்து போகிறது. எனவே என் வாழ்நாள் முடிவுக்குள் உனக்கு ஒரு திருமணம் செய்து முடித்துவிட்டால் நான் நிம்மதியாகப் போய் சேர்வேன்.நீ என்ன சொல்கிறாய்? என்று கேட்டான்.

சரி அப்பா உங்கள் விருப்பப்படியே ஆகட்டும் என்றாள் மகள். தையல் காரனும் தன் மகளுக்கு ஏற்ற வரன் தேட ஆரம்பித்தான். கோமதி அழகானவள். தையல்கலையில் சிறந்தவள் உயிர்களிடத்து அன்பு கொண்டவள். வீட்டு வேலைகள் அனைத்தும் அவளுக்கு அத்துப்படி,சமையலும் பிரமாதமாக சமைப்பாள்.ஆனால் அவளிடம் பணம் தான் இல்லை.
அவள் அழகுக்கு மயங்கி வந்த மாப்பிள்ளைகள் எல்லோரும் பணம் இல்லாததால் மணக்க மறுத்தனர்.அவர்கள் கேட்ட தொகையை தருமளவுக்கு தையல் காரனிடம் வசதி இல்லை. அந்த ஊரிலும் பஞ்சம் தலைவிரித்து ஆட ஆரம்பித்தது. வயல்கள் காய்ந்தன. உணவுக்கே திண்டாடும் நிலை ஏற்பட்டுவிட்டது. தையல் காரன் அவ்வூரைவிட்டு மகளுடன் இடம் பெயர்ந்தான்.அந்த ஊரிலும் மகளுக்கு மாப்பிள்ளைத் தேட ஆரம்பித்தான்.
இப்படி நாட்கள் ஓட மணமகன் கிடைத்த பாடில்லை. அப்போது முகமெல்லாம் அம்மைத் தழும்புகளுடன் அழுக்கேறிய பரட்டை தலையுடன்,நோய் வாய்ப்பட்ட ஒருவன் கோமதியை எந்தவித வரதட்சனையும் இல்லாமல் மணக்க வந்தான். தையல் காரன் அவனை விரட்டி அடித்தான். என்மகளை இப்படி பாழும் கிணற்றில் தள்ளமாட்டேன் என்று விரட்டினான்.
ஆனால் கோமதியோ அப்பா நீங்களோ ரொம்ப நாளாய் வரன் தேடுகிறீர்கள்.வந்தவர்கள் எல்லாம் பணத்தை எதிர்பார்க்கிறார்கள்.அதுவோ நம்மிடம் இல்லை. இவரோ எந்த வரதட்சனையுமின்றி என்னை மணப்பதாக கூறுகிறார். இப்படிப் பட்ட ஒருவர் கிடைப்பது அரிது. அழகில்லாவிட்டால் என்ன?நோய் தகுந்த சிகிச்சை அளித்தால் குணமாகிவிடப் போகிறது. உங்களை இன்னும் கஷ்டப்படுத்த நான் விரும்பவில்லை. நான் இவரையே மணந்துகொள்கிறேன் என்றாள் .
தையல்காரனும் மகளுக்கு அந்த கோரமுகத்தானுடன் திருமணம் செய்து வைத்தான்.எளிமையாக கோயிலில் நடந்த திருமணத்திற்கு பிறகு மணமக்கள் புறப்பட்டனர்.அப்போது தையல்காரன்,மகளே உன் திருமணத்திற்கு சீதனமாக என்னால் எதையும் அளிக்க முடியவில்லை. என்னிடம் இருப்பது,இந்த சிறிய பட்டுச் சட்டை ஒன்றுதான். முன்பு ஒருமுறை இதை தைத்து வைத்தேன். இதை உனக்கு பிறக்கும் குழந்தைக்கு அணிவிப்பாயாக என்று அந்த சட்டையை கொடுத்து வழி அனுப்பி வைத்தான்.
மணமக்கள் அவனிடம் ஆசி பெற்றுக் கொண்டு கிளம்பினர். காடு மலை மேடு பள்ளங்களை எல்லாம் இருவரும் கடந்தனர். கணவனால் நடக்க முடியாத போது கணவனையும் தூக்கிக் கொண்டு நடந்தாள் கோமதி இவ்வாறு இரு வாரங்கள் கடந்து போயின. இறுதியில் ஒரு பெரிய மலை அடி வாரத்தை வந்து அடைந்தனர். இரவுப் பொழுது பனி வாட்டி எடுத்தது. அப்பொழுதும் தன்னுடைய கிழிந்த புடவைகளை எல்லாம் கணவனுக்குப் போர்த்தி பாதுகாப்பாக அழைத்து வந்தாள் கோமதி.
இந்த மலையை கடந்தால் தான் கணவனின் ஊர் வரும். ஆனால் இராப் பொழுதாகி விட்டதால் அங்கேயே எங்காவது தங்கி பொழுது விடிந்தபின் ஊருக்குச் செல்ல முடிவெடுத்தனர். அப்பொழுது ஒரு முனகல் சத்தம் கேட்டது.
என்ன இது முனகல் சத்தம் எங்கிருந்து வருகிறது என்று உன்னிப்பாக கவனித்தாள் கோமதி. அருகிலுள்ள புதர் ஒன்றிலிருந்து அந்த சத்தம் வெளிப்பட்டது.ஓடிச் சென்று புதரை விளக்கிப் பார்த்தாள். புதரினுள் குரங்குக் குட்டி ஒன்று குளிரால் தவித்தபடி முனகிக் கொண்டு இருந்தது.
கோமதி சற்றும் யோசிக்காமல் தந்தை தந்த பட்டுச் சட்டையை எடுத்து அந்த குரங்கு குட்டிக்கு அனிவித்தாள். அத்துடன் நில்லாமல் தான் வைத்திருந்த சில துணிகளையும் அதன் மீது போர்த்தி விட்டு தான் குளிரில் நடுங்கியபடி நின்றிருந்தாள்.சிறிது நேரத்தில் குரங்கின் முனகல் நின்றது. கோமதி மகிழ்ச்சி அடைந்து குரங்கை தடவிக் கொடுத்தாள். அப்பொழுது அந்த அதிசயம் நிகழ்ந்தது.

கோமதி தேவதையை பணிவுடன் வணங்கி, என் அன்பான தேவதையே என் ஊர் செழித்து மக்கள் நலமுடன் பல்லாண்டு வாழ வேண்டும் என்று வேண்டினாள்.தேவதை கோமதி மீண்டும் நீ தன்னலமற்றவள் என்று உணர்த்தி விட்டாய்.நீ உன் கணவனின் நோய் தீர்க்க சொல்லி இருக்கலாம். ஆனால் ஊர் செழிக்க கேட்டு ஊர்ப் பாசத்தை காட்டினாய். உன் பரந்த மனசிற்கு பரிசாக உன் கணவனின் நோய் நீக்கி அழகிய வாலிபனாக மாற்றுகிறேன் நீங்கள் இருவரும் பல்லாண்டுகாலம் மகிழ்ச்சியாக வாழ்வீர்களாக என்று வரமளித்துவிட்டு மறைந்தது.
மறுகணம் கோமதியின் கணவன் நோய் நீங்கி அழகான வாலிபனாக மாறினான். கோமதி தேவதையின் கருணையை நினைத்து வணங்கினாள். அவர்கள் இருவரும் பல்லாண்டு காலம் சுகமாக வாழ்ந்தனர்
அறவுரை
திரிகடுகம்.
நன்றி பயந்தூக்கா நாணிலியும் சான்றோர்முன்
மன்றில் கொடும்பாடு உரைப்பாதும் –நன்றின்றி
வைத்த அடைக்கலங் கொள்வானும் இம்மூவர்
எச்சம் இழந்துவாழ் வார்.
- நல்லாதனார்.
விளக்கம். பிறர் தமக்கு செய்த உதவியை மறந்தவனும் பெரியோர் கூடிய அறநிலையத்தில் பொய் பேசியவனும் அடுத்தவன் பொருளை அபகரிப்பவனும் ஆகிய இம்மூவரும் தம் மக்களை இழந்து வருந்துவர்.
உங்களுக்குத் தெரியுமா?
கி.பி1981 ம் ஆண்டு உலகின் முதல் சோதனைக் குழாய் குழந்தை பிறந்தது.
தங்கள் வருகைக்கு நன்றி ! பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை பதிந்து செல்லலாமே! கீழுள்ள நிரலிகளில் வாக்களித்து செல்லலாமே!
Comments
Post a Comment