இளவரசர் ஹாரி காதலுக்கு குட்பை!


ராணுவ பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து காதலுக்கு 'பை' சொன்ன இளவரசர்


  
லண்டன்: மாடல்அழகி பிளோரன்ஸ் புரூடுநெல் புரூசை விட்டு இங்கிலாந்து இளவசர் ஹாரி பிரிந்து விட்டாராம். இங்கிலாந்து பத்திரிகைகள் இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ளன.

இங்கிலாந்து இளவரசி டயானாவின் முதல் மகனான வில்லியமிற்கு திருமணம் முடிந்த நிலையில், 2வது மகனான ஹாரியை பற்றிய பல வதந்திகள் பரவி வருகின்றன. அவரை, வில்லியமின் மனைவி கேட்மிடில்டனின் தங்கை பிப்பாவுடன் இணைத்து சமீபத்தில் வதந்திகள் வந்தன. இருவரும் நெருங்கிப் பழகுவதாக அந்த செய்திகள் கூறின.

இருப்பினும், இங்கிலாந்து ராணுவத்தில் பணியாற்றி வரும் ஹாரி, மாடல் அழகியான பிளோரன்ஸுடன் நெருங்கிப் பழகுவதாக நீண்டகாலமாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. பிளோரன்சை, தனது அண்ணன் வில்லியம் உட்பட குடும்பத்தினருக்கு ஹாரி அறிமுகப்படுத்தியதாகவும் சில தகவல்கள் கூறின. ஆனால் தற்போது இந்தக் காதலில் பிளவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராணுவப் பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுக்க ஹாரி முடிவு செய்துள்ளதால் காதலைக் கைவிட தீர்மானித்திருப்பதாக செய்திகள் கூறுகின்றன. ஒரு வேளை பிப்பா மீதான மோகத்தில் பிளோரன்ஸை கைவிடுகிறாரா ஹாரி?
நன்றி தட்ஸ் தமிழ்!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த தங்கள் கருத்தினை பதிந்து செல்லலாமே! கீழுள்ள நிரலிகளில் வாக்களித்துச் செல்லலாமே!

Comments

Popular posts from this blog

என்னைக் கவர்ந்த நேரு! குழந்தைகள் தின ஸ்பெஷல்!

வெற்றி உன் பக்கம்! கவிதை!

உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்!