ஐயையோ! கடிக்காதீங்க! கடிஜோக்ஸ்!

ஐயையோ! கடிக்காதீங்க! கடிஜோக்ஸ்!

 யானைக்கு எது பிடிக்கும் தெரியுமா?
  கரும்பா?
 இல்ல ‘மதம்’தான் பிடிக்கும்!

 ரெண்டு பாம்புங்க போய்கிட்டு இருந்துச்சு அதுல ஒருபாம்பு மட்டும் தள்ளாடிகிட்டே போச்சு ஏன்?
   ஏன்னா அது தண்ணிப் பாம்பு!

 ஒரு கொக்கு குளத்தில ரொம்ப நேரமா ஒத்தை கால்ல நின்னுகிட்டு இருந்தும் ஒரு மீனையும் பிடிக்கலை ஏன்?
   ஏன்னா அது சைவக் கொக்கு!

ஒரு பிச்சைக்காரணுக்கு பயங்கரப்பசி அப்ப ஒருத்தர் காசு தரவும் ஒரு ஓட்டலுக்கு போயி இட்லி கொண்டுவரச் சொன்னான் . ஆனா இட்லி வந்ததும் சாப்பிடாம ஓடிவந்துட்டான் ஏன்?
   இட்லியில ஆவியை பார்த்து தான்!

ஒரு எறும்பு சர்க்கரை டப்பாவில புகுந்து எதையும் சாப்பிடாம வெளியே வந்துடுச்சு ஏன்?
  அதுக்கு சக்கரை வியாதி!

எறும்புங்க வரிசையா போயிட்டிருந்தது அதுல் ஒரு எறும்பு நிக்குது பாக்குது போவுது ஏன் ?
 அதும் இஷ்டம் அது எப்படி வேணும்னாலும் போவும் அதைக் கேட்க முடியுமா?

சிகரெட் புகைச்சா என்ன வரும்?
புற்று நோய்!
இல்ல புகைதான் வரும்!

அந்த ஃபார்ம்மை தொட்டா ஷாக் அடிக்கும் ஏன் தெரியுமா?
 ஏன்?
 அது ட்ரான்ஸ்ஃபார்ம் ஆச்சே!

அத்வானிக்குபிடிச்ச தமிழகத் தலைவர்கள் யாரு தெரியுமா?
ராமதாஸ், ராமராஜன், கிருஷ்ண சாமி!

அமைச்சருக்கு பிடிக்காத ரம் எது?
இதென்ன கேள்வி! ‘ஸ்பெக்ட்ரம்’ தான்!

சாப்பாட்டை பத்தி கவலைப்படாத பறவை எது தெரியுமா?
 அன்னப்பறவைதான்!

ஒருத்தன் நூறு வயசு வரைக்கும் சாகாம் இருக்கணும்னா என்ன செய்யணும்?
99வயசு வரைக்கும் சாகாம இருக்கணும்!

ஒரு எறும்பு கயிறு மேல நடந்து போனப்ப கயிறு திடீர்னு அறுந்து போச்சு ஏன்?
 ஏன்னா அது ‘கட்’டெறும்பு!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவுகுறித்த தங்கள் கருத்துக்களை பதிந்து செல்லலாமே! கீழுள்ள நிரலிகளில் வாக்களித்துச் செல்லலாமே!Comments

  1. பாம்புக் கடியைவிட கொடுமையா இருக்கே!!!!

    :)
    :)

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

என்னைக் கவர்ந்த நேரு! குழந்தைகள் தின ஸ்பெஷல்!

வெற்றி உன் பக்கம்! கவிதை!

உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்!