ஆமாம் நீங்க நலமா?

ஆமாம் நீங்க நலமா?

கறிவேப்பிலை கொழுந்தை பச்சையாக சாப்பிட்டு வந்தால் வயிற்றுக் கடுப்பு வயிற்றுப் பொருமல் ஆகியவை குணமாகும்.

 நெஞ்சுக்கரிப்பு குமட்டல் வாந்தி போன்ற தொந்தரவுகளுக்கு கறிவேப்பிலையுடன் நான்கு மிளகு சேர்த்து நெய்யில் வறுத்து பொடி செய்து சாப்பிட்டால் நிவாரணம் கிடைக்கும்.

கைகால்களில் மூட்டுக்களில் வலி உள்ளவர்கள் வெங்காயத்தையும் கடுகையும் அரைத்து மூட்டுக்களில் பற்றுப் போடலாம். இப்படிச் செய்தால் மூட்டு வீக்கம் மூட்டு வலி குறையும்.

புதினா இலையை காயவைத்து பொடி செய்து அத்துடன் சிறிதளவு உப்பும் சேர்த்து பல் துலக்கினால் பற்கள் ‘உஜாலா’வுக்கு மாறிவிடும்.

மாதுளம் பழம் மாதுளம்பழத்தோல்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் குடலில் வசிக்கும் நாடாப்பூச்சிகள் அழியும் வயிற்றுப்போக்கு குணமாகும்.
நரம்பு மண்டலத்தை சரிவர இயங்க செய்யவும் உடலில் ரத்த உற்பத்தியை அதிகரிக்கவும் பேரிச்சம் பழம் பெரிதும் உதவுகிறது.

தினமும் ஐந்து வேளை பழங்கள், அல்லது பழங்களுடன் காய்கறிகளையும் சாப்பிடுகிறவர்கள் புற்றுநோயை முற்றிலும் தவிர்த்து விடுகின்றனர்.

நான்கு வெற்றிலையுடன் மூன்று மிளகு சேர்த்து மென்று விழுங்கினால் ஜலதோஷம் நீங்கும்.

வயிறு சம்பந்தமான நோய்களுக்கு இஞ்சி நல்ல மருந்தாகும் எனவே இஞ்சியை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவுகுறித்த தங்கள் கருத்துக்களை பதிந்து செல்லலாமே! கீழுள்ள நிரலிகளில் வாக்களித்துச் செல்லலாமே!

Comments

Popular posts from this blog

என்னைக் கவர்ந்த நேரு! குழந்தைகள் தின ஸ்பெஷல்!

வெற்றி உன் பக்கம்! கவிதை!

உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்!