நான் காம்ப்ளான் போடுவேனே மம்மி! ஜோக்ஸ்





வீட்டில் பரணை ஒழிக்க சொன்னார்கள் போய் ஒழிக்கும் போது கிடைத்த பழைய விகடன்,குமுதம் இதழ்களில் நான் ரசித்த சில ஜோக்குகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். எத்தனை நாளைக்குத்தான் புதுசையே காப்பி அடிக்கிறது இதோ கொஞ்சம் பழசு ஆனா இனிக்கும் மனசு

 
“எதுக்காக அந்த வீட்டுல ராத்திரியில போய்த் திருடின?”

“என்ன கேள்வி இது எசமான்.. அவங்க பகல்ல தூங்குனா நான் ஏன் ராத்திரி வரப் போகிறேன்!”
              கி ரவிக்குமார்.
நன்றி விகடன் 15-6-11

“பாங்க்ல மாடு வாங்க லோன் வாங்கினிங்கிளே ஏன் கட்டலை?”

“கயிறு வாங்க லோன் கொடுக்கலையே!”
         வி சாரதிடேச்சு

நன்றி விகடன் 16-5-99

“ஆனாலும் நம்ம லதாவுக்கு பணத்திமிர் அதிகம்”

“ஏன்...?”
“எல்லோரும் புடவைக்கு கஞ்சிதான் போடுவாங்க..ஆனா அவமட்டும் காம்ப்ளான் போடுவா..!”
           வி சாரதிடேச்சு
நன்றி விகடன் 4-7-99

“தலைவர் ரொம்ப அடி மட்டத்துல இருந்து வந்தவர்னு நெனைக்கிறேன்..”
‘எப்படிசொல்ற?”

“பின்னே? தேர்தல்ல தனக்கு டிக்கெட் கொடுக்கலைன்னு தெரிஞ்சவுடனே ஏதாவது பிளாக்ல கிடைக்குமான்னு பார்க்க சொல்றாரே!
             க.ராஜசேகர்.

“கண்திருஷ்டியாலத்தான் நம்ம கட்சிக்கு இப்படியெல்லாம் கஷ்டகாலம் வருதுன்னு தலைவரோட ஜோசியர் சொன்னாராம்..”
“அதுக்காக இப்படியா கொடியில திருஷ்டி பொம்மை போடுறது?!
             கோவி.கோவன்

நன்றி விகடன் 30-5-99
“கல்யாணமான சரியா போயிடுமுன்னு சொல்றீங்களேஅப்படி பொண்ணுக்கு என்ன குறை?’’

“ஒண்ணுமில்லை பொண்ணு கர்ப்பமா இருக்கா!”

!!!!?
          வி சாரதி டேச்சு
நன்றி குமுதம் 29-10-98
 
“மாடு வாங்க லோன் கேட்கறீங்களே எப்படி கட்டுவீங்க?”
 “கயிறு போட்டு தான் கட்டுவேன்!”
            தேவி கணேஷ்
நன்றி குமுதம்   5-11-98

“நம்ம தலைவருக்குச் சுத்தமா அறிவே கிடையாது”

“எப்படி சொல்றே?”

“மழைக்காலக் கூட்டத்தொடர் சீக்கிரமே ஆரம்பமாகபோகுதுன்னு சொன்னாஎந்த சேனல்ல னு கேக்கறாரே!”
                   இரா. வசந்த ராசன்

நன்றி விகடன் 20-7-11

 
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த உங்கள் கருத்துக்களை பதிந்து செல்லலாமே!.கீழுள்ள நிரலிகளில் வாக்களித்து செல்லலாமே!

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2