நடிகைக்கு திறந்த மனசு! ஜோக்ஸ்

இலைமறை காய்மறையா நிறைய நிலம் வாங்கி போட்டாரே உங்க தலைவர் இப்போ எங்க இருக்காரு?
 ம்ம்.. தலைமறைவா இருக்காரு!

அந்த பையனுக்கு கல்யாண யோகம் வந்திருச்சுன்னு எப்படி சொல்றீங்க?
 நல்லா சமைக்கறானே!

 
ஆனாலும் நம்ம கோகிலாவுக்கு இந்த பந்தா அதிகமாத் தெரியலை!
ஏன் என்னாச்சு!
பிச்சைக்காரணுக்கு செக் கிழிச்சு கொடுக்கறா!

நம்ம தலைவர் பால்பிடிக்கலை பால் பிடிக்கலைன்னு சொல்லிகிட்டிருக்காரே எந்த பால்? 
அட நீ வேற அவர் சொல்லறது லோக்பாலை!

அந்த டாக்டர் ஏன் கோபமா இருக்கார்?
நியுரோ ஸ்பெஷலிஸ்ட்டுன்னு போர்டுல போடச்சொன்னதுக்கு ஜீரோ ஸ்பெஷலிஸ்ட்டுன்னு போட்டுட்டாங்களாம்.

ஆனாலும் நம்ம தலைவர் ரொம்ப அப்பாவியா இருக்கார்?
எப்படி சொல்றே?
முன் ஜாமீன் கிடைக்கலன்னு சொன்னதுக்கு பின் ஜாமினாவது வாங்கிட்டு வரக்கூடாதான்னு கேக்கறாரு!

 என்னசார் உங்க பையன் புத்தகத்த கிழிச்சிகிட்டு இருக்கான்?
அவங்க பாதியை கிழிச்சிட்டாங்க! மீதியை இவன் கிழிச்சிகிட்டு இருக்கான்!.

அந்த ஜோசியருக்கு இப்ப நேரம் சரியில்லைன்னு எப்படி சொல்றே?
அவரோட கிளியை பூனை கவ்விகிட்டு போயிடுச்சே!

  அந்த நடிகைக்கு திறந்த மனசுன்னு எப்படி சொல்றே?
அவங்க போட்டிருக்கிற டிரஸ்ஸை வச்சித்தான்!

அந்த டாக்டர் ஹோமியோபதியா? அலோபதியா?
ம்ம்..வெறும் பாடாவதி!

அந்த கல்யாண மண்டபத்துல என்ன கலாட்டா?
லைட்ட அணைக்க சொன்னா யாரோ பொண்ணை லைட்டா அணைச்சிட்டாங்களாம்.

முத்தம் கொடுத்ததுக்கா உன் வீட்டுக்காரி கோச்சிகிட்டு போயிட்டா?
முத்தம் கொடுத்தது வேலைக்காரிக்காச்சே!

அன்பே சுண்டல்காரன் உன்கிட்ட என்னமோ சொல்லிட்டு போறானே என்ன அது?
சுண்டலுக்குக் கூட பாக்கி வக்கிற இந்த ஆள எப்படி லவ் பண்றேன்னு கேட்டுட்டு போறான்

என்னங்க நம்ம காதல் வீட்டுக்கு தெரிஞ்சிடுச்சு!
அப்புறம்..?
உன் டேஸ்ட் ரொம்ப மட்டமா இருக்குன்னு ஒரே வருத்தப்படறாங்க!

பிச்சைக்காரங்கள்ளாம் சேர்ந்து எங்க போறாங்க?
தங்கத்தில முதலீடு பண்ண போறாங்களாம்!

ஏன் நகை கடையில் கொள்ளை அடிச்சே?
இப்ப தங்கம் அங்க மட்டும் தானே எஜமான் இருக்குது!

அந்த டாக்டர் போலின்னு எப்படி சொல்றே?
காதுல எறும்பு புகுந்துடுச்சுன்னு சொன்னா மறுகாதுல கல்கண்ட காட்டறாரே!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த தங்கள் கருத்தினை பதிந்து செல்லலாமே! கீழுள்ள நிரலிகளில் வாக்களித்து செல்லலாமே!

Comments

Popular posts from this blog

என்னைக் கவர்ந்த நேரு! குழந்தைகள் தின ஸ்பெஷல்!

வெற்றி உன் பக்கம்! கவிதை!

உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்!