நான் வந்துட்டேன் வந்துட்டேன் பராக்! பராக்!
நான் வந்துட்டேன் வந்துட்டேன் பராக்! பராக்!
தம்பி வீட்டு சீமந்த கல்யாணத்திற்கு விழுப்புரம் சென்று அப்படியே மாமியார் வீட்டுக்கும் .. உடனே கற்பனையை பறக்க விடாதீர்கள் அந்த மாமியார் இல்லை?? சொந்த மாமியார் வீட்டிற்கு சென்று நேற்று இரவுதான் திரும்பினேன்.
அந்த மொக்கையைத்தான் இன்று உங்களிடம் போடுவதாக உத்தேசம். என்னுடைய மொக்கையை பொறுத்துக்க் கொள்ளவும் ஒரு இருபத்தாறு பேர் உள்ளனர். அதென்ன இருபத்தாறு என்கிறீர்களா? எல்லாம் என்னை தொடர்பவர்கள்தான்(followers)
இந்த நெடுந்தொலைவு பயணமெல்லாம் எனக்கு ஆகவே ஆகாது மிஞ்சிப் போனால் ஒரு நூறு கிலொ மீட்டர் பயணம் வரை தாக்குபிடிப்பேன். இப்போது என்னடாவெண்றால் போக நானூறு வர நானூறு என எண்ணுறு கிலோ மீட்டர்கள் இரண்டு நாட்கள் பேருந்தில் சுற்றியதில் சேரில் உட்கார்ந்திருக்கும் போது கூட ஏதோ பஸ்ஸில் அமர்ந்திருப்பது போல ஓர் உணர்வு.
போகும் போது விழுப்புரம் செல்ல பாரதி டிரான்ஸ்போர்டில் ஏறினேன்.கவர்மெண்ட் பஸ் நாலு மணி நேரம் போவும் நம்ம வண்டி மூணு மணி நேரத்துல போயிடும் இங்க விட்டா செங்கல் பட்டு மதுராந்தகம் விழுப்புரம் தான் ஏறுங்க என்று கூப்பிட்டு ஏற்றினார்கள். வீடியோ கோச் கார்த்தியின் பையா போய்க் கொண்டு இருந்தது.
பஸ் கிளம்பின பின் தான் தெரிந்தது இதில் ஏறியது எவ்வளவு தவறு என்று புளி மூட்டை கணக்காக ஒரு ஸ்டாப்பிங்க் விடாமள் நிறுத்தி ஏற்றி சென்றார்கள். ஒருவழியாய் மதியம் 1.20க்கு கிளம்பிய பேருந்து விழுப்புரத்தில் மாலை 5 மணிக்கு போய் சேர்ந்தது.
விழுப்புரத்தில் சீமந்த பங்சனில் கலந்து கொண்டு விட்டு மறுநாள் மதியம் 2மணிக்கு விழுப்புரத்திலிருந்து திருச்சிக்கு பயணமானேன்.5.30 மணிக்கெல்லாம் திருச்சி சென்று விட்டேன் அன்று ஆடிப்பெருக்கு தினம் திருச்சி எங்கும் ஒரே மக்கள் வெள்ளம்.
திருச்சியிலிருந்து கரூருக்குச் செல்ல ஒரு தனியார் பேருந்து வி.கே.ஏ வில் ஏறினோம். அதுவும் வீடியோ கோச் பாடல்கள் ஒளிபரப்பினார்கள். ஒரு முறை பட்டும் திருந்தாத எனக்கு மீண்டும் தலைவலி இரண்டு மணி நேரத்தில் செல்லக்கூடிய பேருந்து அரைமணி தாமதமாக சென்று சேர்ந்தது. வழியெங்கும் ஏறிய மக்கள் கூட்டம் வீடியோவை பார்க்க விடாமல் செய்தது. அந்த பேருந்தில் அரசு பேருந்துகளில் கொடுப்பது போல மிசின் மூலம் டிக்கெட் கொடுத்து என்னை ஆச்சர்யப்படுத்தினார்கள். வழியில் ஏறிய இளைஞர் கூட்டமொன்று டிக்கட் எடுக்காமல் அடுத்த ஸ்டாப்பில் இறங்கிவிட கண்டக்டர் புலம்பிக் கொண்டிருந்தார். ஒருவழியாய் கரூரூக்கு 8.30க்கு சென்று அங்கிருந்து எனது மாமியார் வீட்டுக்கு திருமுக்கூடலூருக்கு 9.30க்கு சென்றபோது ஊரே அடங்கி இருந்தது.
மறுநாள் காலை 8.30க்கு அங்கிருந்து புறப்பட்டு கரூர் வந்தடைந்தேன். 9.30க்கு சென்னை செல்லும் பேருந்து கிளம்பியது நானும் ஏறிவிட்டேன். துறையூர் வழியாக வரும் அப்பேருந்தில் சென்னைக்கு 10 மணி நேர பயணம். விக்கிரவாண்டியில் ஓட்டல் உதயம் மூடப்பட்டிருந்தது. விரைவில் ஓட்டல் டாக்டர் அம்மா திறக்க பட உள்ளதாக ஒரு அறிவிப்பு பலகை தொங்கியது. பொன்முடிக்கு பதில் இப்போது யாரோ ஒர் அம்மா விசுவாசி துவக்கி கொள்ளை அடிக்க போகிறார் போலும் என்று நினைத்துக் கொண்டேன்.
வேறு ஒரு ஓட்டலின் முன் நின்ற பேருந்தில் இருந்து இறங்கி ஒட்டல் முன்னிருந்த கடையில் பாதாம் மில்க் பாட்டில் வாங்கினேன் பதினாறு ரூபாய் கேட்டான் கடைக்காரன் ஐந்து ரூபாய் அதிகம் ஒருபிரிடானியாமில்க் பிஸ்கட் பாக்கெட் வாங்கினேன் அதுவும் ஐந்து ரூபாய் அதிகம். இவர்கள் திருந்தவே மாட்டார்கள் என்று நினைத்துக் கொண்டேன்.
அந்த ஓட்டலின் முன் ஒருவர் என்னை கூர்ந்து பார்த்தார். என்னுடன் பேருந்தில் வந்தவர்தான்.நீங்க கரூரா. ஆர்.டி. ஒ ஆபிஸில் வேலை செய்கிறிர்களா? என்று கேட்டார். நான் மறுத்து இல்லை இல்லை நான் சென்னை பக்கத்தில் பொன்னேரியில் இருக்கிறேன் என்றேன். உங்களை மாதிரியே ஒருத்தர் கரூர் ஆர்.டி,ஓ ஆபிஸி இருக்கிறார் என்றார் அவர். அப்போது முந்தின நாள் கரூர் செல்லும் பேருந்தில் ஒருவரை பார்த்து நான் நீங்க பொன்னேரியா இல்ல பொன்னேரியில் டிரான்ஸ்போர்டில் வேலைசெஞ்சிருக்கீங்களா? என்று கேட்டபோது அவர் மறுத்து நான் குளித்தலை. இப்போ கரூர்ல இருக்கேன். பொன்னேரி பக்கம் வந்ததுகூட இல்லை என்று மறுத்தது ஞாபகம் வந்தது.உலகில் ஒரே மாதிரி ஏழு பேர் இருப்பார்களோ என்ற சந்தேகமும் வந்தது.
ஒரு வழியாய் சென்னையும் வந்து சேர்ந்தேன் உங்களையும் மொக்கை போட்டாகிவிட்டது.இனி விடாது கறுப்பு!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு பிடித்து இருந்தால் கீழுள்ள நிரலிகளில் வாக்களித்து செல்லலாமே தங்கள் கருத்துக்களை பதிந்து செல்லலாமே!
Comments
Post a Comment