விஜய் டிவி புகழ் மதுரை முத்து படுகாயம்!


திருச்சி: விஜய் டிவி மூலம் பிரபலமான பிரபல நகைச்சுவை பேச்சாளர் மதுரை முத்து சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்து திருச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விஜய் டிவியில் அறிமுகமாகி சக்கை போடு போட்ட நிகழ்ச்சி கலக்கப் போவது யாரு. இந்த நிகழ்ச்சியில் நகைச்சுவைத் திறமை வாய்ந்த திறமையாளர்களை வெளியுலகுக்கு அடையாளம் காட்டியது விஜய் டிவி. இந்த நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி தமிழர்கள் மத்தியில் பெரும் பிரபலமானவர் மதுரையைச் சேர்ந்த முத்து.

'
ஸ்டேண்ட் அப்' காமெடியில் பின்னும் இவர் மிகச் சிறந்த நகைச்சுவை பேச்சாளர். இவரது பேச்சுக்கு பெரும் ரசிகர் கூட்டமே உள்ளது. பின்னர் சன் டிவி, கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியை ஹைஜாக் செய்து, அசத்தப் போவது யாரு என்ற பெயரில் நடத்தியபோது அதிலும் மதுரை முத்து இடம் பெற்று ஸ்டார் பேச்சாளராக செயல்பட்டு வந்தார்.

விஜய் டிவி, பின்னர் சன் டிவி மூலம் கிடைத்த வெளிச்சப் புகழால் இவர் பல்வேறு மேடைநிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். உலகம் முழுவதும் சுற்றி வருகிறார்.

இந்த நிலையில், திருச்சியில், நடைபெறும் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க காரில் பயணித்தார் முத்து. அவருடன் அவரைப் போலவே கலக்கப் போவது யாரு மூலம் பிரபலமான நாகேஷ் செல்லக்கண்ணு உள்ளிட்டோரும் சென்றனர்.

கார் விராலிமலை அருகே வந்தபோது சாலை விபத்தில் சிக்கியது. திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மின் கம்பம் மீது மோதியது. இதில் முத்து உள்ளிட்ட காரில் இருந்த நான்கு பேரும் காயமடைந்தனர்.

உடனடியாக அவர்களை திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு போய் சேர்த்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 நன்றி தட்ஸ் தமிழ்

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த தங்கள் கருத்தினை பதிந்து செல்லலாமே! கீழுள்ள நிரலிகளில் வாக்களித்துச் செல்லலாமே!

Comments

Popular posts from this blog

என்னைக் கவர்ந்த நேரு! குழந்தைகள் தின ஸ்பெஷல்!

வெற்றி உன் பக்கம்! கவிதை!

உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்!