வடா பாவ்! சச்சினின் ஃபேவரிட்!

புனே: இங்கிலாந்தில் போய் இறங்கி இதுவரை இந்திய அணிக்கு உதவியாக சச்சின் பெரிய அளவில் ஸ்கோர் செய்யாத நிலையில் மகாராஷ்டிர உணவு வகையான வடா பாவ் குறித்து உணர்ச்சிகரமாக பேட்டி கொடுத்துள்ளார்.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி வெற்றிச் செய்தியைத் தவிர மற்ற செய்திகளில்தான் அதிகம் அடிபட்டு வருகிறது. முன்னணி வீரர்கள் சந்தித்து வரும் காயங்கள்தான் முக்கியச் செய்தியாக உள்ளது. இந்த நிலையில் சச்சின் டெண்டுல்கரோ மகாராஷ்டிர உணவு வகையான வடா பாவ் குறித்து நாக்கில் எச்சில் ஊற பேட்டி கொடுத்துள்ளார்.

பர்கர் பாணியில் மகாராஷ்டிராவில் உண்ணப்பட்டு வருவதுதான் இந்த வடா பாவ். இது வேறு ஒன்றும் இல்லை, பன்னுக்குள் போண்டாவை வைத்து சாப்பிடுவது. இதை பர்கர் போல மாற்றி வடா பாவ் என்று பெயரிட்டுள்ளனர்.

இந்த சைவ உணவு மகாராஷ்டிராவில் மிகவும் பிரபலமானது. இதற்கு சச்சின் டெண்டுல்கர் அடிமையாம். தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் சச்சின் இந்த வடா பாவ் குறித்து சிலாகித்து ஒரு பேட்டி அளித்துள்ளார்.

தனது மாநிலத்தைச் சேர்ந்தவரான சுனில் கவாஸ்கருடன் சேர்ந்து மராத்தி டிவி ஒன்றுக்கு சச்சின் அளித்த பேட்டியில், எனக்கும் எனது மகன் அர்ஜூனுக்கும் வடா பாவ் என்றால் உயிர். அதிலும் சிவாஜி பார்க் ஜிம்கானாவில் வடா பாவ் மிகவும் சிறப்பாக இருக்கும். அங்குதான் ரெகுலராக சாப்பிடுவோம். அதை அடித்துக் கொள்ள எந்த டிஷ்ஷும் இல்லை எனது தாழ்மையான கருத்து. சட்னி தழுவிய நிலையில் உள்ள வடா பாவ் மிகவும் அருமையான ஒரு ஸ்னாக்.

வடா பாவை சாப்பிட்டால் நீண்ட நேரத்திற்கு அந்த சுவை நாக்கிலிருந்து மறைவதில்லை என்றார் சச்சின்.

சச்சினின் நண்பரான வினய் யடேகர் கூறுகையில், வடா பாவ்தான் சச்சினின் பலவீனம். யாராவது வடா பாவ் தருவதாக கூறினால் அவர்கள் சொல்வதை அப்படியே கேட்பார். அவர் தனது 28வது சதத்தைப் போட்டபோது வினோத் காம்ப்ளி ஒரு பெரிய விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். அப்போது 28 வடா பாவ்களை சச்சினுக்கு அளித்து குஷிப்படுத்தி விட்டார் என்றார்.

வடா பாவ் இருக்கட்டும், இந்திய அணியை வெற்றி பெற வைப்பது குறித்தும் சச்சின் முயலட்டும்.தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த தங்கள் கருத்தினை பதிந்து செல்லலாமே! கீழுள்ள நிரலிகளில் வாக்களித்துச் செல்லலாமே!

Comments

Popular posts from this blog

என்னைக் கவர்ந்த நேரு! குழந்தைகள் தின ஸ்பெஷல்!

வெற்றி உன் பக்கம்! கவிதை!

உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்!