தி.மு.க பொதுக்குழுவில் ஸ்டாலின் கை ஓங்கியது! தி.மு.க பொதுக்குழுவில் ஸ்டாலின் கை ஓங்கியது!


கோவையில் பரம ரகசியமாக கூட்டி முடிக்கப்பட்ட, தி.மு.., பொதுக்குழு கூட்டத்தில், பத்துக்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்கள், புதிய தலைவரை அடையாளம் காட்ட வேண்டும் என, வலியுறுத்தி பட்டவர்த்தனமாக, "ஸ்டாலின்' கரத்தை வலுப்படுத்தி பேசினர். இதனால், இரண்டாம் நாள் கூட்டத்தில் இருந்து வெளியேறிய அழகிரி, தன் எதிர்ப்பை, தலைமைக்கு நாசுக்காக காட்டியுள்ளார்.

சட்டசபை தேர்தல் தோல்வியால் துவண்டு போனவர்களுக்கு புத்துணர்வு ஊட்டுவதற்காக, கோவையில், தி.மு.., பொதுக்குழு கூட்டம் நடந்தது. ஒட்டு மொத்த தி.மு.., தொண்டர்களும் எதிர்பார்த்தபடி, எவ்வித அதிரடி நடவடிக்கையும், தீர்மானமாக கொண்டு வராததால், உப்புச்சப்பில்லாமல் பொதுக்குழு கூட்டம் முடிவடைந்தது.கட்சியின் மூத்த தலைவர்களும், இரண்டாம் கட்ட தலைவர்களும், பொதுக்குழு உறுப்பினர்களும் அவரவர் ஆதங்கத்தை, தி.மு.., பொதுக்குழு கூட்டத்தில், கொட்டித் தீர்த்துள்ளனர்.

பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும், அடுத்து, தி.மு.., தலைமை பதவி யாருக்கு? என்ற அறிவிப்பை பெரிதும் எதிர்பார்த்தனர். மேலும், கட்சியை வலுப்படுத்தும் விதமாக, பாராளுமன்ற தொகுதி செயலாளர் பதவியை புதியதாக கொண்டு வருவது பற்றியும் எதிர்பார்ப்புடன் பங்கேற்றனர். இவ்விரு பிரச்னைகளும் கூட்டத்தில் பெரிய அளவில் விவாதிக்கப்பட்ட போதிலும், தி.மு.., தலைவர் கருணாநிதி, பிரச்னையை விஸ்வரூபம் எடுக்க விடாமல், "கடிவாளம்' போட்டு தடுத்து நிறுத்தினார்.

கூட்டத்தில் பங்கேற்ற அழகிரி, ஆட்சி மாறி உள்ள நிலையில், நில அபகரிப்பு உள்பட பல்வேறு பொய் வழக்குகள் பதிவு செய்து, தி.மு..,வுக்கு ஊழல் கட்சி என்று முத்திரை குத்தும் முயற்சியில் ஆளுங்கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். தி.மு.., மீது வீண் பழி சுமத்தும் ஆளுங்கட்சியின் சூழ்சியை முறியடிக்க வேண்டும். தி.மு..,வினர் கட்டுக்கோப்பான ஒற்றுமையுடன் செயலாற்றி, ஊழல் உள்ளிட்ட பொய் குற்றச்சாட்டுகளில் இருந்து மீண்டு வர வேண்டும், என தன் கருத்தை பதிவு செய்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்ட செயலாளர் அன்பரசன், ""தி.மு..,வின் அடுத்த தலைவரை அடையாளம் காட்ட வேண்டும்,'' என, அதிரடியாக, "ஸ்டாலின் ஆதரவு கோஷம்' எழுப்பியுள்ளார். அடுத்தடுத்து பேசிய பொன்முடி, ..வேலு உள்பட பத்து மாவட்ட செயலாளர்கள், "தி.மு..,வின் அடுத்த தலைவராக ஸ்டாலின் வர வேண்டும். அதற்கான அனைத்து தகுதிகளும் அவருக்கு மட்டுமே இருக்கிறது' என்று பட்டவர்த்தனமாக, அன்பரசனின் ஆதரவு கோஷத்துக்கு வலு சேர்த்துள்ளனர்.

துரைமுருகன் நேரடியாக,"தி.மு.., தலைவர் கருணாநிதியையும், ஸ்டாலினையும் ஒப்பிட்டு பேசியுள்ளார். கடின உழைப்பு, செயல், ஊக்கம், சுறுசுறுப்பு என சகலவிதத்திலும் தலைவர் கருணாநிதிக்கு நிகரான தலைவராக விளங்க கூடிய தகுதி ஸ்டாலிக்கு உள்ளது என, வெளிப்படையாக பேசினாராம்.அடுத்தடுத்து பேசிய மாவட்ட செயலாளர்கள், ஸ்டாலினை முன்னிலை படுத்தி பேசியதை கவனித்த கருணாநிதி, பிரச்னை விஸ்வரூபம் எடுப்பது போல் உள்ளதை, அருகில் அமர்ந்து இருந்த தி.மு.., பொதுச் செயலாளர் அன்பழகனின் காதை கடித்துள்ளார்.

உடனே அன்பழகன், நாற்காலியில் இருந்து எழுந்து, துரைமுருகனிடம் "மைக்'கை வாங்கி, ""தி.மு.., தலைவராக கருணாநிதி இருந்து வரும் சூழ்நிலையில், அடுத்த தலைவர் யார் என்பது குறித்த பேச்சுக்கே இடமில்லை. தி.மு..,வில் அடுத்த தலைவர் பதவிக்கு, செயலாளரான எனக்கும், பொருளாளரான ஸ்டாலினுக்கும் மட்டுமே தகுதி உள்ளது. கட்சி ரீதியிலான அனுபவமாகட்டும், கட்சிக்கு தொண்டாற்றியதாகட்டும், கட்சியில் வகித்த முக்கிய பொறுப்புகளிளாகட்டும், கட்சிக்கான உழைப்பாகட்டும், கட்சிக்கான அர்பணிப்பாகட்டும் அனைத்திலும், எங்கள் இருவரின் பங்களிப்பும் மிகுதியானது.

தி.மு..,வில் அடுத்த தலைவர் என்ற பிரச்னை வரும் போது, நானும், ஸ்டாலினும் பேசி முடிவெடுத்து கொள்கிறோம். தற்போது, தி.மு..,வில் அடுத்த தலைவரை தேர்வு செய்யக்கூடிய சூழ்நிலை ஏதுவும் இல்லை. எனவே, இதுபற்றி பொதுக்குழுவில் விவாதிக்க வேண்டிய அவசியமில்லை. இதுபற்றி இனி யாரும் பேச வேண்டாம்,'' என, ஸ்டாலின் ஆதரவு கோஷத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
நன்றி தினமலர்.
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த தங்கள் கருத்தினை பதிந்து செல்லலாமே! கீழுள்ள நிரலிகளில் வாக்களித்துச் செல்லலாமே!

Comments

Popular posts from this blog

என்னைக் கவர்ந்த நேரு! குழந்தைகள் தின ஸ்பெஷல்!

சிரிக்க வைத்த சிரிப்புக்கள்! பகுதி 6

வெற்றி உன் பக்கம்! கவிதை!