நீ நீயாகவே இரு! கவிதைகள்!


 
நீ நீயாகவே இரு!

அன்பே!
உன்னை மலரென்று கூறி
வாடிப்போக
விடமாட்டேன்!
நிலவென்று கூறி
எட்டா உயரத்தில்
ஏற்றி விட மாட்டேன்!
மயிலென்று கூறி
உன் குரலை
தாழ்த்தி விடமாட்டேன்!
குயிலென்று கூறி
உன் அழகை
குறைத்துவிடமாட்டேன்!
தேவதை என்று கூறி
உன்னை
தெய்வமாக்கிட மாட்டேன்!
என் அன்பே!
நீ நீயாகவே இரு!
நிஜம் நிச்சயம்
இனிக்கும்!
 நம் வாழ்க்கை
சிறக்கும்!

உன்னை நேசித்தால்!

அன்பே !
அறிவை நேசித்தேன்!
அறிஞனானேன்!
இயற்கையை
நேசித்தேன்!
கவிஞனானேன்!
கடவுளை நேசித்தேன்!
பக்தனானேன்!
நட்பை
நேசித்தேன்!
நண்பனானேன்!
இசையை ரசித்தேன்!
ரசிகனானேன்!
நாட்டை
நேசித்தேன்!
தேசபக்தனானேன்!
ஆனால் அன்பே!
உன்னை
நேசித்தேன்!
பைத்தியமானேன்!

  

தங்கள் வருகைக்கு நன்றி பதிவு குறித்த கருத்துக்களை பதிந்து செல்லலாமே! கீழுள்ள நிரலிகளில் வாக்களித்துச் செல்லலாமே!

Comments

Post a Comment

Popular posts from this blog

என்னைக் கவர்ந்த நேரு! குழந்தைகள் தின ஸ்பெஷல்!

வெற்றி உன் பக்கம்! கவிதை!

உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்!