எந்தக் கடலில் மிதக்கலாம்? பொதுஅறிவு!


இதையும் தெரிஞ்சிக்கோங்க!

*கண்ணாடி இழை போன்ற ஒருவித உலோக இழையில் நெருக்கி நெய்யப்பட்டது புல்லட் புருப். இதன் கனம் குறைவு.அருகிலிருந்து சுட்டாலும் கூட குண்டு துளைக்காது.

*பவளத்தீவுகள் பவளப்பூச்சி எனும் நுண்ணுயிரிகளில் உருவானத்தீவுகள் ஆகும் இவ்வுயிரிகள் கூட்டம் கூட்டமாகவே குடியிருக்கும் இவை இறந்ததும் இறந்த நுண்ணுயிரிகள் மீது புற்றுக்கள் போல் பெருங்கொத்துக்களாக படரும். இவை கடல் மட்டத்திற்கு மேலெழும்போது தீவுகளாக மாறுகின்றன.

*நீச்சல் தெரியாமல் கடலில் மிதக்க முடியாது. ஏனேனில் கடல் நீரின் அடர்த்தி(எடை) நம் எடையைவிட குறைவு. ஆனால் சாக்கடலில் நீந்தத்தெரியாதவனும் மிதக்கலாம். ஏனேனில் அக்கடலில் சாதாரண கடல் நீரைவிட ஏழுமடங்கு அதிகமான உப்பு உள்ளது.

*சில விலங்குகளின் கண்களில் ரேடியம் உள்ளது. அதன் மீது ஒளிபடும் போது அவை மின்னும் எனவேதான் பூனை நாய் போன்ற மிருகங்களின் கண்கள் இரவில் மின்னுகின்றன.

*கிராஸ் செக். இதை தமிழில் கீறிய காசோலை என்பார்கள். இதை நேரடியாக மாற்றமுடியாது. பணம் வாங்க விரும்புவோரின் வங்கி கணக்கு மூலமாகவே மாற்ற முடியும்.

*மேகம் சூழ்ந்த இரவு குளிர்ச்சியாக இருப்பதில்லை. பூமியிலிருந்து வரும் வெப்பக்கதிர்களை மேகங்கள் ஏற்காமல் தவிர்ப்பதால் பூமி வெப்பமாகவே இருக்கிறது.

*பாலிஸ்டிக் மிசைல் என்பது என்ன தெரியுமா? கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளுக்கே இப்பெயர். ஓரிடத்திலிருந்து 5000 மைல்களுக்கு அப்பால் உள்ள இலக்குகளையும் தாக்க வல்லவை. தானெ இயங்கும் இந்த ஏவுகனைகள் தரையிலிருந்தும் கடல் மட்டத்திலிருந்தும் இயங்கக் கூடியவை.

·        வானவில் கிழக்கு அல்லது மேற்கு பக்கமாகவே தோன்றும். ஏனேனில் சூரியனின் ஒளியையே வானவில் பிரதி பலிக்கிறது. எனவே சூரியனின் எதிர் திசைகளில் மட்டுமே வானவில்லை காணமுடியும்.
·        நான்காவது எஸ்டேட் என்பது என்ன தெரியுமா? செய்தித்தாள்கள்தான் அவ்வாறு அழைக்கப்படுகிண்றன. மற்ற மூன்று எஸ்டேட்கள் அரசன், சர்ச், சட்டமன்றம்.
·        பாலில் புரதச்சத்துக்கள்,சர்க்கரை,வைட்டமின்கள்,கொழுப்பு முதலிய அனைத்தும் இருப்பதால் முழு உணவாக கருதப்படுகிறது.
·        ஒரு நெருப்புக் கோழியின் கண் அதன் மூளையைவிட பெரிதானது.
·        அமாவாசையன்று பூமியும் சந்திரணும் ஒரே திசையில் இருப்பதால் சூரியனின் புவி ஈர்ப்பு சக்தியால் அதிகம் இழுக்கப்படுகிறது. எனவே பூமி அதிர்ச்சி ஏற்படுகிறது.
·        நெருக்கடி காலங்களில் தேச சேவைக்கு உதவும் படைப்பிரிவு டெரிடோரியல் படை. 18லிருந்து35வயதுக்கு உட்பட்டோர் இதில் சேரலாம். உள்நாட்டு பாதுகாப்பு,கடற்கரைபாதுகாப்பு, போக்குவரத்து சீரமைப்பு முதலியவற்றில் இப்படை ஈடுபடும்.
·        ஹைப்போ என்பது என்ன? இது ஒரு வெள்ளி உலோக கூட்டுப் பொருள். புகைப்படச்சுருளில் படங்களை பதிவு செய்ய பயன்படுகிறது.
·        சந்திரகிரகணம் அதிக நேரம் நீடிப்பது ஏன்? சந்திர கிரகணத்தின் போது பூமி சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையில் வருகிறது. பூமி சந்திரனைவிடப் பெரியது. எனவே பூமியின் நிழலில் இருந்து சந்திரன் விடுபட நேரமாகிறது. எனவே கிரகண நேரம் நீடிக்கிறது.
·        125 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தாவரங்கள் மண்ணில் புடைந்து மக்கி போகாமல் ஹைட்ரோ கார்பன்களாக மாறியதால் எண்ணெய் ஊற்றுக்கள் தோன்றியுள்ளன.
 தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த தங்கள் கருத்துகளை பதிந்து செல்லலாமே! கீழுள்ள நிரலிகளில் வாக்களித்துச் செல்லலாமே!.

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2