இலங்கை எம்.பிக்கள் நாடாளுமன்றம் வருகை! அதிமுக எதிர்ப்பு!


டெல்லி: இன்று காலை தொடங்கிய நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரைப் பார்வையிட இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் தலைமையில் அந்த நாட்டு எம்.பிக்கள் வருகை தந்தனர். இதற்கு அதிமுக கடும் கண்டனம் தெரிவித்தது.

இன்று காலை மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்கியது. அப்போது பார்வையாளர் மாடத்தில் இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் மற்றும் எம்.பிக்கள் ஆகியோர் அடங்கிய குழு வந்தது. அவர்களை ஒவ்வொருவரின் பெயரையும் தனித் தனியாக சொல்லி சபாநாயகர் மீரா குமார் வரவேற்றார். இதையடுத்து அதிமுக உறுப்பினர்கள்எழுந்து நின்று கடும் ஆட்சேபனை தெரிவித்தனர்.

தம்பித்துரை கூறுகையில்,போர்க்குற்றச்சாட்டுக்கு ஆளான நாட்டின் சபாநாயகர் மற்றும் எம்.பிக்களை இந்தியா அழைத்ததற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். அவருக்கு ஆதரவாக மதிமுக, இடதுசாரி எம்.பிக்களும் எழுந்து குரல் கொடுத்தனர். அவர்களை அமைதிப்படுத்த முயன்றார் மீரா குமார். ஆனால் அவர்கள் அமரவில்லை. இதனால் கோபமடைந்த மீரா குமார், விருந்தினர்களை வரவேற்றுத்தான் நமது நாட்டுக்குப் பழக்கம் என்று காட்டமாக கூறினார். இதையடுத்து அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் அமர்ந்தனர்.

இந்த அமளியை அமைதியாக வேடிக்கை பார்த்தபடி இலங்கை குழுவினரும் அமர்ந்து அவை நடவடிக்கைகளை கண்டு களித்தனர்.
  நன்றி தட்ஸ் தமிழ்!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த தங்கள் கருத்தினை பதிந்து செல்லலாமே! கீழுள்ள நிரலிகளில் வாக்களித்துச் செல்லலாமே!

Comments

Popular posts from this blog

என்னைக் கவர்ந்த நேரு! குழந்தைகள் தின ஸ்பெஷல்!

வெற்றி உன் பக்கம்! கவிதை!

உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்!