பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 2
 
     பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 2       உங்கள் பிரிய “பிசாசு”     சென்ற பகுதியில் : ராகவன் பொன்னேரியில் இருக்கும் சமயம் அவனது நண்பன்   வினோத் ஊருக்கு வருவதாக கூறுகிறான். வினோத் வெளிநாட்டில் வசிப்பவன் அவனது திடீர் வருகை ராகவனுக்கு ஆச்சர்யம் தருகிறது. அதே சமயத்தில் பஞ்செட்டியில் கோயில் குளக்கரை அருகே வசிக்கும் முகேஷ் தன் நண்பன் ரவியுடன் டீவி பார்த்துக் கொண்டிருக்கும் சமயம் ஆவிகளை பற்றி பேச்சு கிளம்புகிறது. ரவி ஆவி, பேய் எதுவும் இல்லை என்கிறான் முகேஷ் இருக்கிறது என்று விவாதிக்க மின்வெட்டில் கரண்ட் கட் ஆகிறது. திடீரென ரவி குரல் மாறி விகாரமாக பேச முகேஷ் பயப்படுகிறான். இனி.         எ.. என்னது உசுரு உன். உன்னோடதா? ஒண்னும் புரியலை?     ஏண்டா மடையா எத்தினி பேயி படம் பார்த்திருப்பே? இப்படி ட்யூப் லைட்டா இருக்கியே? ரவி உடம்புல நான் புகுந்துட்டேன்! டொட்டடொய்ங்க்!     என்ன.. து! நீ ரவி உடம்புல புகுந்திட்டியா? யாரு யாருடா நீ!     அது! அது என்ன எத்தினி பேரு சேர்ந்து அடிச்சி கொன்னு போட்டாங்க தெரியுமா? அவங்களை நான் பழி வாங்க வேண்டாம்!      என்னது உன்னை அடிச்சி...
 
 
 
 
 
 
