ஆதரவற்ற பிணங்களின் "இறுதி யாத்திரை': காடு வரை தொடரும் கனிவு

வீடு வரை உறவு... வீதி வரை மனைவி... காடு வரை பிள்ளை என்றார், கண்ணதாசன். பிள்ளை இல்லாமல் இறப்போர் என்னவாகின்றனர்? வறுமையின் கோரப்பிடியில், நோயின் உக்கிரத்தில், உறவுகள் உதறித் தள்ளியதில் ஒதுங்கிக் கிடக்கும் ஆதரவற்ற பிணங்கள் அர” மருத்துவமனை பிணக்கிடங்கில் கிடந்தன.

கிழக்கு ராஜா அண்ணாமலைபுரம் ரோட்டரி கிளப்பினர், சென்னை அரசு மருத்துவமனையில் உள்ள ஆதரவற்ற பிணங்களைப் பெற்று, நல்லடக்கம் செய்து வருகின்றனர். இந்த அமைப்பினர் சமீபத்தில், 40 பிணங்களை அடக்கம் செய்திருக்கின்றனர். ""ஒரு நாள், கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு சென்றிருந்தோம். வட மாநிலத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர், அவர்களுடைய தந்தையை அங்கு அனுமதித்திருந்தனர். நாங்கள் அங்கு இருந்த போது, அவர்களுடைய தந்தையின் உயிர் பிரிந்திருந்தது. தந்தையின் மரணத்திற்காக கண்ணீர் விட முடிந்த அவர்களால், அவருடைய பிணத்தைக் கொண்டு செல்ல பணம் இல்லை. மருத்துவரின் ஆலோசனையின்படி, பிணத்தைக் கொண்டு செல்ல பணமில்லை என, எழுதிக் கொடுத்துச் சென்றனர். அந்த சம்பவம், எங்கள் அடிமனதில் பெரும் காயமாக வந்து விழுந்தது. நாங்கள் ரோட்டரி கிளப்பில் பொறுப்புக்கு வந்த பிறகு, நம்மால் முடிந்த அளவிற்கு, ஆதரவற்ற பிணங்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவெடுத்த போது தான் உதித்தது, "இறுதி யாத்திரை' திட்டம்'' என்று விளக்கினார், ரோட்டரி கிளப் செயலர் ஆரிய பாபு.

"இறுதி யாத்திரை' என்ற திட்டத்தின் கீழ், சென்னையில் வந்து குவிகிற ஆதரவற்ற பிணங்களை, அரசின் ஒப்புதலோடு சென்னையில் நல்லடக்கம் செய்கிறார்கள். ஆதரவற்ற பிணங்களில் பலவற்றிற்கு, மத அடையாளங்கள் தெரியாததால், கிறித்துவ, முகமதிய, இந்து மதத்தைச் சேர்ந்த மதபோதகர்களை அழைத்து, அந்த மதங்களுக்கு உண்டான சடங்கு முறைகளை, முறைப்படி செய்து, பின்னர் நல்லடக்கம் செய்கின்றனர். அவர்கள் உறவுகளோடு இருந்தால் என்ன மாதிரியான முறையில் அடக்கம் செய்யப்படுவார்களோ, அது மாதிரி எந்த ஒரு குறையும் இல்லாமல் அடக்கம் செய்ய வேண்டும் என்பது தங்களுடைய எண்ணம் என்கின்றனர், நிர்வாகிகள்.

"இறுதி யாத்திரை' திட்டம் குறித்து பேசிய ரோட்டரி தலைவர் விஸ்வநாதன், ""ஆரம்பத்தில், வெள்ளை சட்டை போட்டுக் கொண்டு ஏன் வெட்டியான் வேலை பார்க்கிறீர்கள் என்று, இன்று வரை எங்கள் மீது பெரிய அளவில் முக சுளிப்பு இருக்கிறது. இருந்தாலும், நாங்கள் செய்கிற வேலை எங்கள் மனதிற்கு திருப்தியாக இருக்கிறது. அதனால், தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறோம். இதில் எத்தனை தடை வந்தாலும், நாங்கள் நிறுத்தப் போவதில்லை. ஆதரவற்ற பிணங்களை புதைக்கிற போது, எங்களால் அதன் அருகில் ஐந்து நிமிடம் கூட நிற்க முடியவில்லை. ஆனால் அங்கிருந்த வெட்டியான், முகம் சுளிக்காமல் கடைசி வரை தன் பணியை சிறப்பாகச் செய்கிறார். இப்படி குறை சொல்பவர்களுக்கு முன், ஆயிரம் மடங்கு உயர்ந்தவர்கள் வெட்டியான்கள்'' என்றார். ஒருவரின் சேவை மரணம் வரைக்கும் தொடரும் என்பது பெரியவர்கள் பழமொழி. இங்கு மரணத்தில் இருந்து தான் சேவை தொடர்கிறது. மரணங்கள், எப்போதும் அடுத்த மனிதர்கள் மீது கனிவையும், அன்பையும் வரவழைப்பவை. எங்கிருந்தோ வந்து, ஒன்றாய் புதைந்த ஆதரவற்ற பிணங்களைப் போல், ஆதரவற்ற பிணங்களுக்காக இறுதி அஞ்சலி செலுத்தும் மனங்களும் ஒன்றிணையட்டும்.

நன்றி  தினமலர்

தங்கள் வருகைக்கு நன்றி பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே! வாக்களித்து பிரபலபடுத்தலாமே!

Comments

  1. என்னத்த வாக்களிச்சு என்னத்த பண்ண போறோம்

    ReplyDelete
  2. ஹலோ சார் ஏன் இப்படி புலம்பி தள்ளறீங்க?

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2