என் இனிய பொன்நிலாவே! பகுதி 4


என் இனிய பொன்நிலாவே!
                                    பகுதி 4

                                       ‘ப்ரியம்வதா’

முன்கதை சுருக்கம்} மதுமிதா இக்கால நவநாகரீக இளைஞி. ஒரு இண்டர்வியுவிற்கு செல்லும்போது அபிஷேக் என்ற இளைஞன் அவள் மீது மோதுகிறான். அவனே அவளது முதலாளி என்பது பின்னர் தெரிய வருகிறது. மதுமிதாவை வேலைக்கு அப்பாயிண்ட்மெண்ட் பண்ணும் அவன்,அவள் பின்னால் சுற்றுகிறான்.

    அலோ மிஸ்டர் இதென்ன கேள்வி? என்றாள் மது.
எது? நானென்ன அப்படி தப்பாக கேட்டுவிட்டேன்? நீங்க மியுசிக் ஷாப்பிற்கு வருவீங்களான்னா? நாங்கல்லாம் வரக்கூடாதா? இதென்ன அந்த மாதிரி தப்பான இடமா? என்று பொரிந்தாள் மதுமிதா.
    இட்ஸ் ஒகே! ஏங்க நான் கேட்டது தப்புதான்! இசையை ரசிக்கிற எல்லோரும் மியுசிக் ஷாப்பிற்கு வருவாங்கதான்!
  அப்போ எனக்கு மியுசிக் சென்ஸ் இல்லேன்னு சொல்றீங்களா?
 ஏங்க இப்படி எல்லாத்தையும் நெகடிவா திங்க் பண்றீங்க?
யாரு! யாரு நெகடிவ்வா திங்க் பண்றது? நானா?
பின்ன நானா?
அலோ! இது உங்களுக்கு தேவையில்லாத வேலை நான் எப்படி திங்க் பண்ணா உங்களுக்கு என்ன? உங்க வேலையை பார்த்திகிட்டு போகவேண்டியதுதானே?
ஏங்க நானும் ஒரு ஷாப்பிங் பண்ண வந்தேன். வந்த இடத்துல ஏதோ நமக்கு தெரிஞ்ச பொண்ணாச்சேன்னு பேச்சுக்கு அப்படி கேட்டா நீங்க நிஜமாலுமே பெரிய வாயாடிதாங்க நமக்கு இதெல்லாம் சரிபட்டு வராதுப்பா!
  அலோ! மிஸ்டர் எது சரிபட்டு வராது? உங்க வரம்பை மீறி பேசிகிட்டு இருக்கீங்க! கவனம்!
  யாரு வரம்பு மீறி பேசறாங்க நீதான் முதலாளியாச்சேன்னு கொஞ்சம் கூட மரியாதை இல்லாம நாலுபேர் முன்னாடி இப்ப மானத்தை வாங்கற?
  என்னது முதலாளியா? நான் இன்னும் ஜாய்ன் பண்ணவே இல்லே அதுக்குள்ளே இந்த அதிகாரமா?
ஐயோ! சாமி ஆளைவிடு! எல்லோரும் நம்மையே பார்க்கிறாங்க நம்ம சண்டையை அப்புறம் வச்சிக்கவுமா?
  அப்போதுதான் அந்த கடையியின் பலரது கண்கள் அவர்களையே கவனிப்பதை மது உணர்ந்து நாக்கை கடித்துக் கொண்டாள். அதோடு சாரி! நான் கவனிக்கலை நீங்களாவது சொல்லி இருக்கலாமில்லையா? என்றாள்.
  எங்கே பதில் சொல்ல விட்டால்தானே! பதிலுக்கு பதில் பேசிக்கொண்டிருந்தால் எப்படி சொல்லுவதாம்?
அவனை ஒரு முறை முறைத்தாள் மதுமிதா.

அப்படி முறைக்காதே மதுமிதா! பத்ரகாளி போலிருக்கிறாய்! எல்லோரும் பயந்து விடப் போகிறார்கள் என்று அவன் எல்லோரும்மில் ஒரு அழுத்தம் கொடுக்க மது கலகலவென வாய்விட்டு சிரித்தாள்.
  அம்மாடி அம்மணியை சிரிக்க வைப்பது எளிதான காரியமல்ல போலும் என்றான் அபிஷேக். மதுவின் புன்னகை தொடர ஏன் மது என்னை பார்த்து அவ்வளவு கோபம் என்றான் அபிஷேக்.
  அதற்கு மது பதிலளிக்கும் முன் அம்மா நீங்க கேட்ட ஜெய்ஹோ தீர்ந்து போச்சு நாளைக்கு தரட்டுமா? என்று வந்து நின்றான் கடைச் சிப்பந்தி.
    ஏமாற்றதுடன் சரி அப்ப நாளைக்கு கண்டிப்பா கிடைக்குமா என்று சந்தேகத்துடன் கேட்டாள் மது.
  கண்டிப்பா கிடைக்கும் மேடம்! என்றான் சிப்பந்தி.
 அங்கிருந்து கிளம்பியவளை அபிஷேக்கின் குரல் தடுத்தது. ஜெய்ஹோவை இன்னிக்கே கேட்டாகணுமா?
 இல்லே! எப் எம்.ல கேட்டேன் திரும்பவும் கேக்கணும்போல இருந்திச்சு அதான் வாங்கலாம்னு வந்தேன். என்று சொல்லிவிட்டு இதென்ன இவன் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறேனே என்று நினைத்துக் கொண்டாள் மது.
  மது நீ இப்பவே அந்த பாட்டை கேட்கலாம் என்னோட வந்தா?
வாட்?
தப்பா எடுத்துக்கறதே உனக்கு வழக்கமா போயிடுச்சு! நீ இப்ப என் கூட காரில் வந்தால் ஸ்டீரியோவில் ஜெய்ஹோவை கேட்டு ரசிக்கலாம்னு சொல்ல வந்தேன்.
  தோளை குலுக்கியவாரே அபிஷேக் சொல்ல எத்தனை நாளா இந்த இலவச சேவையை எத்தனை பேருக்கு செஞ்சிகிட்டிருக்கீங்க மிஸ்டர் அபிஷேக் என்று இளக்காரமாக கேட்டாள் மதுமிதா!
  நான் விரும்பினால்,  ஒக்கே நான் விரும்பினால் என்ன இல்லாவிட்டால் என்ன என் காரில் என்னோடு வர எத்தனையோ பேர் காத்துகிடக்கிறார்கள் ஆனால்..
  சொல்லிவிட்டு சற்று நிறுத்திய அபிஷேக் இந்த இளவரசனுக்கு ஏற்ற இளவரசி இதுவரைகிடைக்கவில்லை. இப்போது கிடைத்துவிட்டாள் ஆனாலும் அவனுக்கு அந்த இளவரசியின் சம்மதம் கிடைக்குமா என்று தெரியவில்லை! என்றான் அபிஷேக்.
  என்ன உளறல்!
உளறல் இல்லை மது ! நான் உன்னை விரும்புகிறேன்! ஐ லவ் யூ! கமான் டெல் மீ யு லவ் மீ? என்று சட்டென கேட்டுவிட்டான் அபிஷேக்.
 அலோ ! மிஸ்டர் ஏதோ போனால் போகட்டும் என்று பார்த்தால் ரொம்பத்தான் பேசுகிறீர்களே! ஈவ் டீஸா செய்கிறீர்கள் மாமியார் வீட்டுக்கு போக ஆசையாக இருக்கிறதா? என்று முறைத்தாள் மது.
அழைத்துச் சென்றால் கட்டாயம் வருகிறேன் என்று அவள் பின்னால் தொடர்ந்தான் அபிஷேக்.
   மிஸ்டர் இது என்ன ரோதனை! ஏதோ விளையாட்டு என்று பார்த்தால் தொந்தரவு செய்கிறீர்களே! மரியாதையாக போய்விடுங்கள் இல்லைஎன்றால் நீங்கள் உண்மையாகவே மாமியார் வீட்டுக்கு போகவேண்டியிருக்கும் என்றாள் மதுமிதா.
   அப்போது நீ என்னுடன் காரில் வரமாட்டாயா? என்றான் அபிஷேக்.
சாரி  சார்! என்னை டிஸ்டர்ப் பண்ணாம போயிட்டு வர்ரீங்களா? என்று விடுவிடுவென கடையை விட்டு அகன்று பஸ் ஸ்டாப்பிற்கு வந்தாள் மது.

வந்ததுமே பஸ் வர ஏறி அமர்ந்து கொண்டாள். ஏம்மா! டிக்கெட் என்று கண்டக்டர் கேட்க பர்ஸை தேடினாள் மதுமிதா. பர்சை கடையில் தொலைத்து விட்டிருந்தாள்.காணாமல் முழிக்க
    ஏம்மா படிச்ச பொண்ணா இருக்கே இப்படி பண்றியே ம்ம்! எறங்கித்தொலை! என்று விசிலடித்து நிறுத்தி இறக்கிவிட்டார் கண்டக்டர்.
 விதியை நொந்தபடி கீழே இறங்கினாள் மது. அங்கே அவளது பர்ஸுடன் நின்று கொண்டிருந்தான் அபிஷேக்.
        நிலவு வளரும்(4)

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே! வாக்களித்து பிரபல படுத்தலாமே!

Comments

  1. சாரி பாஸ் கடந்த சில பதிவுகளுக்கு வரமுடியாமல் போய்விட்டது..........மீண்டும் வந்துவிட்டேன்...கதை அருமையாக போகின்றது வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. K.s.s.Rajh said...

    சாரி பாஸ் கடந்த சில பதிவுகளுக்கு வரமுடியாமல் போய்விட்டது..........மீண்டும் வந்துவிட்டேன்...கதை அருமையாக போகின்றது வாழ்த்துக்கள்
    அதானாலென்ன நண்பா! எல்லோராலும் எப்போதும் வரமுடியாது என்பதை உணர்ந்தவன் நான்! தங்களின் மேலான அன்பிற்கு நன்றி!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!