பிறரை நம்பி வாழ்பவரிடம் இருப்பது எது? பொன்மொழிகள்!
ஆன்றோர்
பொன்மொழிகள்!
உள்ளதை சொன்னால்
பொல்லாதவன்: சொல்லாமல் இருந்தால் அறிவில்லாதவன்.
-வால்டேர்
மனிதன் சுதந்திரமாக
பிறக்கிறான் எங்கும் விலங்கு பூட்டப்பட்டு காணப்படுகிறான்
-ரூசோ
சரித்திரத்தை
உண்டாக்கும் மனிதர்களுக்கு அதை எழுத நேரம் கிடைப்பது இல்லை!
-மெட்டர்னிக்
முதலில் நீங்கள்
நல்லவனாய் இருங்கள்: கெடுதல்கள் பறந்துபோய்விடும்: உலகம் முழுவதும் மாறிவிடும்
-விவேகானந்தர்.
வெற்றி
பெறுபவர்களின் முக்கிய பண்புகளில் தன்னம்பிக்கையும் ஒன்று.
கார்ல் மார்க்ஸ்
தீமைகள் உங்களை
அணுகாதிருக்க உங்களது எண்ணங்களில் தீமைகள் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்.
-சாக்ரடீஸ்
உங்களால்
நம்பிக்கையுடன் கனவு காணமுடியும் என்றால் கனவில் கண்டதை நிஜத்திலும் செயல் வடிவில்
செய்து முடிக்க முடியும்.
-ஜாண்டுவே
எதையும்
செய்யாதிருப்பதை விட ஏதாவது ஒன்றை நாள்தோறும் செய்து கொண்டிருப்பது மேல்.
வில்லியம் ஜேம்ஸ்
வெற்றியை
காண்பதற்கு நம்பிக்கையும் முயற்சியுமே சிறந்த வழிகள் வேறு குறுக்குவழிகள் இல்லை!
எட்மண்ட்பர்க்
வெற்றியை விட
முக்கியமானது நல்ல பண்பு. வெற்றி மீது உள்ள தாகத்தால் அதை இழந்துவிடக்கூடாது.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.
சின்னஞ்சிறு
செலவானாலும் கவனமாக இரு. அடித்தளத்தில் உள்ள சிறிய ஓட்டை கூட கப்பலையே கவிழ்த்து
விடும்.
ப்ராங்க்ளின்.
ஆணவம் கொண்டோருக்கு
ஆபத்து எப்போது வருமோ அது ஆண்டவனுக்கே தெரியாது.
வால்டேர்.
பிறரை நம்பி
வாழ்பவனிடம் வறுமை இருந்து கொண்டே இருக்கும்.
வில்லியம் டெம்பிள்.
இந்த நிமிடத்தை
முறையாக பயன்படுத்தும்போது இன்றைய நாளை முறையாக பயன்படுத்திக்கொள்கிறோம்.
வால்டேர்.
உழைப்பு, மூன்று
பெருந்தீமைகளை நம்மிடம் இருந்து நீக்குகிறது. அது, தொந்தரவு, தீயஒழுக்கம்,
தரித்திரம்.
வால்டேர்.
தங்கள் வருகைக்கு
நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
arumai..!
ReplyDeleteஅனைத்தும் அருமை...
ReplyDelete