தளிர் ஹைக்கூ கவிதைகள்! 22


தளிர் ஹைக்கூ கவிதைகள்!

 வெந்தது
 உணவாகவில்லை!
 செங்கல்!

 மறைந்த நிலவு
 பூ தூவின நட்சத்திரங்கள்!
அமாவாசை!
 
சீட்டி அடித்தும்
ரசித்தனர் பெண்கள்!
மரத்தில் குருவி!

பறிக்கப்படாத
பூக்கள்!
முதிர்கன்னி!

நிஜத்தை தொலைத்து
நிழலில் நிம்மதி காண்கிறாள்
நடிகை!


வெள்ளித் திரையின்
தங்க சரிகைகள்
நடிகைகள்!

விரிசல்
உலர்ந்து போனது
ஈரம்!

திரை விரித்தது வானம்
இருண்டது பூமி!
அமாவாசை!

மூன்றே முடிச்சுக்கள்
பிணைக்கிறது உள்ளங்களை!
திருமணம்!

அசைந்தாலும் 
நகரவில்லை!
நீரில் நிழல்!

மை பூசியதும்
பொட்டு இட்டுக்கொண்டது வானம்!
நிலா!

அழகான பூ
மிதிபட்டது!
மிதியடி!

வானில் பிறந்தாலும்
மண்ணோடு கலக்கிறது
நீர்!

அதட்டி மிரட்டியதும்
அடங்கி போகிறது மழை!
இடி!


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்! நன்றி!

Comments

  1. அனைத்தும் அருமை...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. அனைத்தும் அருமை அண்ணா என்னை வெகு சிறப்பாக கவர்ந்தது

    வெந்தது
    உணவாகவில்லை!
    செங்கல்!

    ReplyDelete
  3. அருமையான கவிதைகள்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!