புகைப்பட ஹைக்கூ 26
புகைப்பட ஹைக்கூ 26
துலாபாரம் அல்ல
குடும்ப
பாரம்!
பாசம் மிகுதியானால்
தெரிவதில்லை
பாரம்!
கல்லை சுமந்தால் கூலி
பிள்ளை சுமந்தால்
தெரியாது வலி!
துலாக் கோலில்
துவங்கியது மழலையின்
பவனி
பாரம்
இல்லை
பாசம்!
குடை ராட்டினமானது
குடியானவன்
துலாக் கோல்!
ஏக்கவிழிகளில்
தெரிகிறது இந்தியாவின்
ஏழ்மை!
வலி தெரியாமல்
இருக்க வழி
துலாக்கோலில் குழந்தை!
தந்தைப் பாசம்
எடை போட்டது
துலாக் கோல்!
குடும்ப உழைப்பு
சுரண்டப்பட்டது
சூளையில்!
விடை தேடும்
கண்களில் விரிந்து நிற்கிறது
வறுமை!
வலிகள் தெரிவதில்லை!
வறுமை
துரத்தி வருகையில்!
செங்கல் சுமக்கையில்
இறக்கிவைக்கப்படுகிறது
செல்லப் பிள்ளையின் ஏக்கம்!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த
கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
/// பாரம்
ReplyDeleteஇல்லை
பாசம்...! ///
அருமையான ஹைக்கூகள்...
paaram thanthathu kavithai...!
ReplyDeletenantru!
nantri!
ஆயிரம் கதை சொல்லும் படம்...
ReplyDeleteஅதற்கேற்ப உங்கள் கவிதையும் மிக அழகு....
செங்கல் சுமக்கையில்
ReplyDeleteஇறக்கிவைக்கப்படுகிறது
செல்லப் பிள்ளையின் ஏக்கம்!
எல்லாம் அருமை அண்ணா இருந்தும் என்னை கவர்ந்தது