தல போல வருமா? 42வது பிறந்த நாள் காணும் அஜித்

மே-1 ம் தேதி உழைப்பாளர் தினமான இன்று, தமிழ் சினிமாவின் ஹேண்டசம் ஹீரோ என்று சொல்லப்படும் நடிகர் அஜீத் குமாரின் பிறந்தநாளும் கூட. ஐதராபாத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்து, மெக்கானிக்காக வளர்ந்து, எவ்வித சினிமா பின்புலமும் இன்றி சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் அஜீத். அமராவதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி, ஆசை நாயகனாக உருவெடுத்து, காதல் மன்னனாக உலா வந்து, தீனாவில் அதிரடி நாயகனாக மாறி, தலயாக பெயர் பெற்று, வரலாறு படைத்து வில்லத்தனமும்(வில்லன்) செய்து, மங்காத்தாவும் விளையாடி இப்போது தமிழ் சினிமாவின் தலயாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இன்று நடிகர் அஜீத் தனது 42வது பிறந்தநா‌ளை கொண்டாடுகிறார். ஏற்கனவே தனது ரசிகர் மன்றத்தை கலைத்தவர் அஜீத். இருந்தபோதும் அவரது பிறந்தநாளை தமிழகம் முழுவதும் விமரிசையாக கொண்டாட அவரது ரசிகர்கள் ஏற்பாடு செய்தனர். இதுப்பற்றி கேள்விப்பட்ட அஜீத், தனது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு தடை விதித்தார். தனது பிறந்த நாளை ரசிகர்கள் கொண்டாட வேண்டாம் என்றும் கட்-அவுட் பேனர்கள் வைக்கக்கூடாது என்றும் தெரிவித்தார். வீணாக தனது பிறந்த நாளுக்கு விரயம் செய்யும் பணத்தை பெற்றோருக்காக செலவிடுங்கள் என்றும் கேட்டுக் கொண்டார். அஜீத்தை கோரிக்கையை ஏற்று அவரது ரசிகர்களும் ஆடம்பர கொண்டாட்டங்களை ரத்து செய்தனர். இதற்கு அஜீத்தும் நன்றி தெரிவித்தார்.

தற்போது நடிகர் அஜீத், விஷ்ணுவர்தன் இயக்கும் புதிய படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிக்கான படப்பிடிப்பில் பங்கேற்று நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு ராஜஸ்தானில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்புக்கு தனது மனைவி ஷாலினி, மகள் அனோஷ்காவுடன் சென்ற அஜீத், அங்கு தனது பிறந்தநாளை கேக் வெட்டி படப்பிடிப்பு தளத்தில் எளிமையாக கொண்டாடினார். அஜீத்துக்கு படப்பிடிப்பு குழுவினர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

புதிய பட டீசர் வெளியீடு : தனது பிறந்தநாளை ரசிகர்கள் கொண்டாட வேண்டாம் என்று நடிகர் அஜீத் உத்தரவு போட்டதால் ரசிகர்கள் சற்று சோர்ந்து போயினர். இருந்தபோது, அவர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் விஷ்ணுவர்தன் இயக்கத்தில், அஜீத் நடித்துள்ள புதிய படத்தின் டீசரை வெளியிட்டுள்ளனர். தற்போது யூ-டியூப்பில் வெளியாகி இருக்கும் இந்த டீசரை ஏராளமான ரசிகர்கள் பார்த்து ரசித்து வருகின்றனர். ஆனாலும் டீசரிலும் படத்தின் டைட்டீல் வெளியிடப்படவில்லை. மாறாக அந்த டீசரில் இந்த புராஜக்ட்டின் பெயர் என்ன என்று கேட்க, அதற்கு அஜீத் டைட்டீல் இன்னும் வைக்கவில்லை என்று பதிலளிக்கிறார். இருந்தபோதும் இன்று படத்தின் டைட்டீல் வெளியாகும் என்று கூறப்படுகிறது. படத்தின் டைட்டீலில் இவ்வளவு சஸ்பென்ஸ் ஏனோ...? தெரியவில்லை.

இருந்தபோதும் அஜீத்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!                                                                                                        


விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் நடித்து வந்த அஜீத், அப்படத்தை முடித்து விட்டு, இப்போது, "சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் இறங்கி விட்டார். தற்போது, ஆந்திராவில் முதல்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. இப்படத்துக்கான முதல் நாள் படப்பிடிப்பு துவங்கப்பட்ட போது, டைரக்டர் சிவா, அஜீத்திடம் "முதல் ஷாட்டில் சென்டிமென்ட்டாக நீங்கள் நடித்தால் சரியாக இருக்கும் என்றாராம்.ஆனால், அஜீத்தோ, "என்னை வைத்து, அப்புறம் கூட எடுத்துக் கொள்ளலாம். முதலில் விதார்த் போன்ற, வளர்ந்து வரும் ஸ்டார்களை வைத்து முதல் ஷாட்டை எடுங்கள் என்றாராம். அதைக் கேட்ட விதார்த் மனம் நெகிழ்ந்து போனாராம். ஓடிச்சென்று அஜீத்தை கட்டிக் கொண்டு, "உங்க மனசு யாருக்கும் வராது என்றாராம்.                                                                                                    

நன்றி: தினமலர்

Comments

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2