அம்மா!


அம்மா!


பத்து மாதம் சுமந்தவளே!
பெத்து என்னை வளர்த்தவளே!
உன் சுமையோ ஏராளம் இருக்க
என் சுமையும் ஏற்றவளே!

பாத்து பாத்து வளர்த்தவளே! பாலோடு
பாசத்தையும் சேர்த்து ஊட்டி
நேசத்தை காட்டியவளே!
கால் வயிறு கஞ்சிக்கு கஷ்டப்பட்ட போதும் என்
முழு வயிறு நிறைய ஊட்டியவளே!


தலைவாரி பூச்சூட்டி மகிழ்ந்தவளே!
தாமதமாய் வீடுவரின் தவித்தவளே!
என் தோல்விகளில் தோள் கொடுத்து
உன் மடியில் அணைத்தவளே

ஊர் கண்படும் என்று
ஒரு நாள் தவறாமல்
கண்ணேறு கழித்து  கையில் தாங்கியவளே!
என் சுடு சொற்கள் உன்னை சுட்ட போதும்
உன் வடுவை நீ விட்டதில்லை!
ஒவ்வொரு நாளும் நீ எனக்கு
ஊட்டிவிட்டாய் உணவோடு நல்லுணர்வை!
 உன் வழிகாட்டுதலில் தடம் மாறாமல்
திடமோடு நடைபயின்றேன்!
உன் விரல் பிடித்து நடக்கையில்
ஓர் பாதுகாப்பை தந்தாய்!
உன் விழிப் பார்வையினில்
என் கள்ளம் கலைந்தாய்!
என் சுகத்திற்கென உன் நலம் தவிர்த்தாய்!
என் உயிரினில் கலந்திட்டு
உயர்வினில் நீ மகிழ்ந்தாய்!
அன்னையர் தினத்தில் அம்மா உனை வணங்குகிறேன்!
அன்போடு
உன்னை போற்றுகின்றேன்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

 1. /// என் தோல்விகளில் தோள் கொடுத்து ///

  சிறப்பு கவிதை... பாராட்டுக்கள்...

  அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. அன்னையர் தின கவிதை அருமை. வாழ்த்துகள்.

  ReplyDelete
 3. அன்னையர் தின கவிதை அருமை, வாழ்த்துகள்.

  ReplyDelete
 4. அன்னையைப் போற்றும் நற் சிந்தனை அருமை !..
  அன்னையரைப் போற்றுவோம் வாழ்த்துவோம் மனதில்
  இன்பம் பொங்க .

  ReplyDelete
 5. அம்மா என்றும் நம்மோடு கூடவே இருந்து வாழ செய்வோம், அருமையான அம்மா....வாழ்த்துக்கள்..!

  ReplyDelete
 6. அன்னையர் தின வாழத்துக்கள்

  ReplyDelete
 7. அன்னையர் தின நல்வாழ்த்துக்கள் அண்ணா ...

  கவிதை மிகவும் அருமையாக உள்ளது அண்ணா

  ReplyDelete
 8. அன்னையர் தினத்தன்று அம்மாவைப் பற்றி நெகிழ வைக்கும் கவிதை எழுதிஇருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்!

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2