சிரிக்கவைத்த சிரிப்புக்கள்! பகுதி 4


சிரிக்கவைத்த சிரிப்புக்கள்! பகுதி 4

        
                     
1.   பிரஸ் மீட்ல தலைவர் மானத்தை வாங்கிட்டாரா? எப்படி?
குற்றப்பத்திரிக்கையில் இருந்து நிருபர் வந்திருக்காரா?னு கேட்டுட்டார்!
                              பர்வீன் யூனூஸ்
2.   இந்த ஒரு வருடத்தில் அமைச்சராக இருந்து என்ன சாதித்து விட்டாய் என்று கேட்கிறார்கள் எதிர்கட்சிக் காரர்கள். நான் கேட்கிறேன் ஒரு வருடம் அமைச்சராக தொடர்ந்து இருப்பதே பெரிய சாதனை அல்லவா?
                                கே. ஆனந்தன்.
3.   தலைவர் மேடையில நின்னு திடீர்னு வாயைப் பொத்திக்கிறாரே ஏன்?
2016ல் ஆட்சியை பிடிப்போம்னு பேசறப்போ அவராலேயே சிரிப்பை அடக்க முடியலையாம்!
                                               பர்வீன் யூனூஸ்.
4.   நகை கடையில திருடினவன் மாமூல் கொடுத்திட்டானா?
என் தங்கம் என் உரிமைன்னு தெனாவட்டா பேசிட்டுத் திரியறான்!
                              அம்பை தேவா.
5.   இப்ப யாராவது காசு இல்லாம சாப்பிட வந்தா தேவலை.
ஏன் முதலாளி அப்படி சொல்றீங்க?
தொடர் பவர்கட் காரணமா மாவு ஆட்ட ஆள் வேண்டியிருக்கே!
                            இரா. பாஸ்கரன்.
6.   தலைவரே மின் வெட்டு அதிகமா இருக்கே என்ன செய்ய போறீங்க?
இலவச மெழுகுவர்த்தி தரப் போறதா அறிவிச்சிருவோம்!
                                பி. பாலாஜிகணேஷ்.
7.   நடிப்பு வராத நடிகையை ஏன் புக் பண்ணீங்க?
மடிப்புக்காகத்தான்!
                    அ. ரியாஸ்.
8. தலைவர் எல்லாக் கட்சிக்கும் ஒரே பொது வில்லன்னு சொல்றாரே யாரை?
 வேற யாரு மின்சாரத்தைத்தான் அப்படி சொல்றாரு.
                           பி. பாலாஜி கணேஷ்.
8.   எங்க வீட்டுல 24 மணி நேரமும் பவர் கிடையாது.
என்ன அதை சிரிச்சுனே சொல்றே?
வீட்டுல 24 மணி நேரமும் பவர் கிடையாதுன்னு சொன்னது என் கணவருக்கு பவர் கிடையாதுன்றதை!
                               வி. சாரதிடேச்சு.
9.   சென்ற இரண்டு வருடங்களில் இரவில் மின் தடை ஏற்படுத்தி 30 சதவிகிதம் சேமித்துள்ளோம்.
அதனால்தான் குழந்தைகள் பிறப்பு வீதம் 35 சதவிகிதம் கூடியுள்ளது.
                              ஜெயசூர்யா.
10. என் மனைவியை பார்த்தா எனக்கு பயமா இருக்குது! கை கால் எல்லாம் நடுங்குது டாக்டர்!
வெரிகுட் அப்படித்தான் இருக்கணும் யூ ஆர் வெரி நார்மல்!
                                       கி. ரவிகுமார்.
11. எதிரி ரொம்ப பலவீனமானவன்னு எப்படித் தெரிஞ்சது மன்னா?
அவன் என்னை அடிச்சது கொஞ்சம் கூட வலிக்கலையே!
                                      பெ. பாண்டியன்.
12. தலைவர் ரொம்ப மோசம்!
ஏன் அப்படிச் சொல்றே?
தொகுதி பக்கம் ஏன் வர்றதில்லைன்னு கேட்டா அங்க போக வர பஸ் வசதி கிடையாதுங்கிறாரே!
                                 அ. ரியாஸ்.
13. எங்கள் தலைவரை கடத்தல் வழக்கில் கைது செய்துவிடலாம் என்று நினைப்பவர்களுக்கு ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.. அவர் காலத்தைத்தான் வெட்டியாக கடத்துகிறாரே தவிர வேறு எதையும் கடத்தவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
                                         இரா. வசந்தராசன்.
13. பணிப்பெண்கள் இரண்டு பேர் வேலையை விட்டு நின்றுவிட்டார்கள் மன்னா!
14.  காரணம்?
ஆதினத்தில் நம்மைவிட அதிக ஊதியம் வழங்குகிறார்களாம்!
                                              அ. ரியாஸ்.
15. தலைவரை எப்படி கண்ட்ரோல் பண்றதுன்னே தெரியலை?
  ஏன் என்ன ஆச்சு?
  டாக்டர் பட்டம் வாங்கின கையோட  மெடிக்கல் ஷாப் ஸ்கேன் செண்டருக்கு எல்லாம் போய் கமிஷன் கேட்கிறார்!
                                  கிணத்துக்கடவு ரவி,

16  தலைவர் என்ன சொல்லி கட்சிக்கு புதுசா ஆள் சேர்க்கிறார்?
 நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி!  
                                கிணத்துகடவு ரவி.
17.அதான் ஷூட்டிங் முழுசா முடிஞ்சிடுச்சே அப்புறம் ஏன் டைரக்டர் பத்தாயிரம் பேர் வேணுங்கிறார்?
   படம் பார்க்கத்தான்!
                                 அ. ரியாஸ்.
18. குறுகிய காலத்தில் நீ செஞ்ச குற்றங்கள் எண்ணிக்கை ரொம்ப அதிகம்..!
   பாராட்டறீங்களா குத்திக் காட்டறீங்களா எசமான்?
                                      என். ஷாகிதா.
19. அபார்ஷன் பண்ண உங்க கணவர் அனுமதிக்கணுமே!
    அவர் வெளிநாடு போய் மூணு வருஷமாகுது எப்படி கேட்க முடியும்?
                               பாலாஜி கணேஷ்.
20.அவரு போலி டாக்டருன்னு எப்படி சொல்றே?
  கால் வலி டாக்டர்னு போய் நின்னா கால்வலி அரைவலின்னு சொல்லிகிட்டு வராதீங்க முழுவலின்னா மட்டும் வாங்கன்னு சொல்றாரே!
                            சோலை சுகுணா.

நன்றி: ஆனந்த விகடன், குமுதம்.

தங்கள்வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!




  


Comments

  1. 0.அவரு போலி டாக்டருன்னு எப்படி சொல்றே?
    கால் வலி டாக்டர்னு போய் நின்னா கால்வலி அரைவலின்னு சொல்லிகிட்டு வராதீங்க முழுவலின்னா மட்டும் வாங்கன்னு சொல்றாரே!

    :) வாழ்த்துக்கள் நல்ல நகைச்சுவைத் துணுக்குகள் மிக்க
    நன்றி சகோதரரே பகிர்வுக்கு .

    ReplyDelete
  2. காசிருந்தா காக்க கூட அழகாயிடும் சூப்பர் அண்ணா

    ReplyDelete
  3. நல்ல நகைச்சுவை துணுக்குகள்.

    ReplyDelete
  4. பகிர்வுக்கு நன்றி நண்பா.அதுவும் காலத்தைக்கடத்தும் தலைவர் ஜோக் சிரிப்பும் சிந்தனையும் மிக்கது!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2