ஐபிஎல் அரங்கேற்றம்!


ஆறு வருடங்களாய் ஆடுகிறார்கள்
ஐபிஎல் கிரிக்கெட்டு!
அதை அப்பாவிகள் பார்த்து ரசிக்கிறார்கள்
மெனக்கெட்டு!
கோடிகளில் வீரர்கள் புரள்கிறார்கள்
கோடி மக்கள் அதை ரசிக்கிறார்கள்!

வீதியில் ஆடும் பிள்ளைகள் கூட
விட்டுக் கொடுக்கமாட்டார்கள் தரம்கெட்டு!
விலைக்கு ஆடும் இவர்களோ
விலை போகிறார்கள் மானம் கெட்டு!

ஹாக்கி நமது தேசிய விளையாட்டு
அதற்கோ இல்லை மார்க்கெட்டு!
அயல் நாட்டினன் ஓடினான் விளையாட்டினை
விட்டுவிட்டு! அதை பிடித்துக் கொண்டோம்
தறிகெட்டு!

ஏலத்தில் விடுகிறார்கள் வீரர்களை!
அவர்கள் சோரம் போனதில் தப்பிலை!
விலை போகும் வீரர்கள்  கொடுக்கிறார்கள்
விலையை! வீணில் அதற்கேன் ஆர்ப்பாட்டம்!
ஐபிஎல் ஒர் சூதாட்டம்!
அதில் அடிக்கடி நடக்குது
அரங்கேற்றம்!
நாடகம் காணும் நமக்கெல்லாம்
கிடைக்குது ஏமாற்றம்!
பிசிசிஐ பண்ணுது ஓர் அரசியல்
அதில் ஊழல்புகுவதில் வியப்பிலை!
விளையாட்டு எப்போது வியாபாரம் ஆயிற்றொ
அப்பொழுதே அது இழந்தது
விக்கெட்டு!
வீரர்களுக்கு தேவை ஊக்கம் இங்கே
கொட்டப்படுவதொ பணத்தின் தாக்கம்!
இந்தியாவில் எப்போதும் கிரிக்கெட் தாகம்!
அதனால் விளைவது பிக்சிங் மோகம்!

 கிரிக்கெட்டிற்கு வீட்டில் தடை போடு!
 சரிப்படும் உன் வாழ்க்கை நேர்க்கோடு!
இனியேனும் கிரிக்கெட்டை விட்டுவிட்டு
இலட்சியத்தை அடைய உறுதிப்படு!

தங்கள் வருகைக்கு நன்றி பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Comments

  1. அருமையாக முடித்துள்ளீர்கள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. கிரிக்கெட்டை விடு
    இலட்சியத்தைத் தொடரு
    அருமை அய்யா.
    இனியாவது ரசிகர்கள்
    விழிப்புணர்வு பெற வேண்டும்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2