சிரிக்க வைத்த சிரிப்புக்கள்! பகுதி 5
சிரிக்க வைத்த சிரிப்புக்கள்! பகுதி 5
1.நம்ம தலைவரு ரொம்ப புத்திசாலின்னு
எப்படி சொல்றே?
அவர் கட்சிக்கு ஆளும்கட்சின்னு பெயர் வெச்சிருக்காரே!
எம். மேகநாதன்.
2. சட்டம் ஒழுங்கு கெட்டுப்
போச்சுன்னு சொன்னதுக்கு தலைவர் என்ன சொல்றார்?
நல்லா மோந்து பார்த்துட்டு சொல்ல சொல்லுங்கன்னு
சொல்றார்.
எம். செல்லையா.
3.இதை ரொம்ப நல்ல பாம்புன்னு
எப்படி அடிச்சி சொல்ற?
சட்டையை உரிச்ச பிறகும்
பனியன் தெரியுது பார்!
பி.
கருப்பையா.
4.மாப்பிள்ளைக்கு ஏற்கனவே
கல்யாணமாகி ஒரு பையன் இருக்கற விஷயத்தை நீங்க ஏன் சொல்லலை?
மாப்பிள்ளை பையன் அழகா
இருப்பான்னு முதல்லயே சொன்னேனே கவனிக்கலையா?
அ.
பேச்சியப்பன்.
5.வேலூர் ஜெயில்ல இருக்கற
தலைவர் பழமொழியை மாத்தி சொல்றாரா? எப்படி?
புழலின் அருமை வேலூரில் தெரியுதுங்கிறாரு!
ராம் ஆதிநாராயணன்.
6.கல்யாண வீடுகளில் கொடுக்கப்படும்
சீர்வரிசைக்கு வரிவிதித்து இருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்னு தலைவர் பேசியிருக்காரே!
சமச்சீர் கல்வியை தலைவர் தப்பா புரிஞ்சிகிட்டு இருக்காருன்னு
நினைக்கிறேன்!
எஸ். எஸ். பூங்கதிர்.
7.என்ன சார் வீட்டு வாடகை
ரொம்ப அதிகமா சொல்றீங்க?
பின்னே அம்மி, ஆட்டுக்கல் எல்லாம் வாங்கிப் போட்டிருக்கேன்
தம்பி!
ம.பாலகிருஷ்ணன்.
8.தலைவர் எதுக்கு கம்யூனிஸ்ட்
கட்சிக்கு தாவிட்டாரு?
வேற வழி.. ஜோசியர் சிவப்பு துண்டு போடச்சொன்னாராம்!
ஆனந்த சீனிவாசன்.
9.சின்ன வயசுல இருந்தே
என் பையனுக்கு புளிப்பு மாங்காய் கொடுத்துவரேன்!
எதுக்கு?
அவன் ஒரு அரசியல்வாதி ஆகி
வாய் கூசாம பொய் பேசனுமே!
சி.பி செந்தில்குமார்.
10இந்த டாக்டர் மட்டும்
ஆபரேஷனுக்கு கம்மியா பீஸ் வாங்கிறாரே!
மயக்க மருந்துக்கு பதிலா, மயக்க பிஸ்கெட்தானே உபயோகிக்கிறார்!
பர்வீன்யூனூஸ்.
11. நீங்க இந்திய குடிமகனா?
மற்ற மாநிலங்களுக்கு போய் குடியிருக்கற அளவுக்கு
வசதி இல்லீங்க... அதனாலே இங்கேயே தமிழ்நாட்டு குடிமகனா இருக்கேன்.
சீத்தா தம்பி.
12.என்னது மாப்பிள்ளை சீடை
காண்பிக்கிறாரா?
பின்னே எத்தனை காலந்தான் மாப்பிள்ளை முறுக்கை காண்பிக்கிறார்னு
சொல்றதாம்!
ரிஷிவந்தியா.
13.தாலுகா ஆபிஸ்ல பட்டா
வாங்குற இடத்துல என்ன தகறாரு?
தலைவர் ஆரிய ‘பட்டா’ வேணும்னு கேட்டாராம்!
பெ. பாண்டியன்.
14.என்ன அமைச்சரே! இந்த
புலவர் வாழ்த்தி பாடியதில் ஒரு வரி கூட புரியவில்லையே!
அவர் புலவர் இல்லை மன்னா! அர்ச்சகர்!
சி. சாமிநாதன்.
15 உன் கணவர் ஏன் அலுத்துக்கிறார்?
முகூர்த்த நாள் இல்லாத சமயத்தில் பையன் செருப்பு
வாங்கித்தரச் சொல்லி கேக்கறான்.
பர்வீன் யூனூஸ்.
16.என்னப்பா சர்வர் எல்லா
ஓட்டல் குப்பைத்தொட்டியிலும் நாய்கள்தான் நிற்கும் இங்க கழுதை நிற்குதே!
அது பேப்பர் ரோஸ்ட்டுக்கு நிற்குது சார்!
பெ. பொன்ராஜாபாண்டி.
17. அந்த ரவுடி தொழிலுக்கு
புதுசுன்னு எப்படி சொல்றீங்க?
என் எதிரியைக்
காட்டி அவரை தூக்கணும்னு சொன்னேன். முடியாதுங்க... அவரு ரொம்ப குண்டா இருக்காருன்னு
சொல்றானே!
அனார்கலி.
18.என்னப்பா இது அப்ளிகேசன்
பார்ம்ல சாமி போட்டோவை ஒட்டி வச்சிருக்கே!
அது நான் தான் சார்! ஸ்கூல்
டிராமாவுல பரமசிவன் வேஷம் போட்டப்ப எடுத்த படம்!
கி. திவ்ய
ஜோதி.
19.நீதான் டெய்லராச்சே..
அப்புறம் எதுக்கு கார்ப்பெண்டர் வேலை கத்துக்கணும்னு ஆசைப்படறே?
வெயில் காலம் வந்தாலே சன்னல் வச்ச ஜாக்கெட்தான் வேணும்னு
நிறைய ஆர்டர் வந்துடுதே!
விஜயநிர்மலன்.
20 டாக்டர் அந்த லேடிக்கு
நம்ம கிளினிக் வாசல்லேயே குழந்தை பிறந்துடுச்சி!
அப்படின்னா மறக்காம டோர் டெலிவரி சார்ஜ் சேர்த்துப்
போடுங்க!
பி.. கவிதா
நன்றி: தினமலர்- வாரமலர்.
தங்கள் வருகைக்கு நன்றி!
பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
அனைத்தும் அருமை.
ReplyDeleteஹா ஹா ஹா வாய்விட்டு சிரித்தேன்...
ReplyDeleteசிரிக்க வைத்தன அத்தனையும். நல்ல தொகுப்பு
ReplyDeleteஅனைத்தும் கலக்கல்...
ReplyDeleteஅருமை அய்யா அருமை
ReplyDelete