உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 16
உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 16
சென்ற வாரம் இரட்டைக் கிளவியும் ஒருபொருட் பன்மொழியும்
பார்த்தோம். நிறைய பேர் நிறைவான விமர்சனங்களை தந்துள்ளீர்கள்.இந்த பகுதியில் இலக்கிய
சுவையில் காளமேகப் புலவரின் சிலேடை பாட்டுக்களை படித்து ரசித்து இருப்பீர்கள்.
ஒரு செய்யுள் எழுதுகிறோம் என்றால் அதில் எழுத்து, அசை, சீர், தளை அடி, தொடை என அதன்
உறுப்புகள் அமையப்பெற்று இருக்க வேண்டும். அமையப்பெற்று இருக்கும்.
எழுத்து என்பது முதலெழுத்துக்களையும்
சார்பெழுத்துக்களையும் குறிக்கும். அதாவது உயிரெழுத்துக்கள், உயிர்மெய் எழுத்துக்களை
குறிக்கும்.
எழுத்தால் ஆனது அசை, இது
நேரசை, நிறையசை என்று இருவகைப் படும்.
அசையால் ஆனது சீர் எனப்படும்.
இது ஓரசைச் சீர், ஈரசைச் சீர் , மூவசைச் சீர், நான்கசைச் சீர் என நாலுவகைப்படு.பத்தாம்
வகுப்பில் அலகிட்டு வாய்ப்பாடு படித்து இருப்பீர்கள், நேர் நேர் தேமா என்று அதுவே சீர்வாய்ப்பாடு.
சீரைக் கொண்டு வருவது தளை
அதாவது அசை பிரித்து என்ன சீர் என்று கண்டுபிடித்த பின் மாச்சீர் முன் நேர் அசைவருதல்,
நிறையசை வருதல் அதே போல விளச் சீர் முன் நேரசைவருதல் நிறையசை வருதல் இவைகளை கொண்டு
மொத்தம் ஏழுதளைகள் உள்ளன.
நேரொன்றாசிரியத்தளை, நிறையொன்றாசிரியத்தளை,
இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை, கலித்தளை, ஒன்றியவஞ்சித்தளை, ஒன்றாத வஞ்சித்தளை
என்பன அவை.
அதற்கடுத்து வருவது அடி,
இது இருசீரடி குறளடி என்றும், முச்சீரடி, சிந்தடி என்றும், நாற்சீரடி, அளவடி அல்லது
நேரடி என்றும், ஐஞ்சீரடி நெடிலடி என்றும், ஆறுசீர்முதல் எத்தனை சீர்கள் வந்தாலும் கழிநெடிலடி
என்றும் அழைக்கப்படும்.
இதற்கு அடுத்து வருவது
தொடை எனப்படும். இது இயைபுத்தொடை, முரண் தொடை என இரண்டு வகைப்படும்.
இதெல்லாம் முடிந்த பிறகு
வருவது அணி, அணி என்றால் அழகு, செய்யுளில் உள்ள சொல்லழகையும் பொருளழகையும் வெளிப்படுத்துவது
அணி ஆகும். பல அணிகள் உள்ளன. அதில் நாம் அடிக்கடி பார்க்கும் சிலேடை அணியினை இப்போது
பார்ப்போம். இலக்கிய சுவையையும் ருசித்த மாதிரி இருக்கும்.
ஒரு சொல்லோ சொற்றொடரோ இருபொருள்பட
வருதல் இரட்டுற மொழிதல் அணி எனப்படும். இதை சிலேடை அணி என்றும் சொல்லுவர். ஒரு சொல்
பிளவு படாமல் நின்று இரண்டு பொருளைத்தருமால் அது செம்மொழி சிலேடை எனப்படும் உதாரணமாக
கோ என்றால் பசுவையும் குறிக்கும் அரசனையும் குறிக்கும். இது செம்மொழி சிலேடை.
அதே போலசொல்லோ சொற்றொடரோ
பலவகையாக பிரிக்கப்பட்டு பல பொருள்களை தருமானால் அதுபிரிமொழிச் சிலேடை எனப்படும்
வஞ்சியேன் என்றவன் தன்
ஊருரைத்தான் யானுமவன்
வஞ்சியான் என்பதனால் வாய்நேர்ந்தேன்
-வஞ்சியான்
வஞ்சியேன் வஞ்சியேன் என்றுரைத்தும்
வஞ்சித்தான்
வஞ்சியாய் வஞ்சியார் கோ.
இப்பாடலில் வஞ்சியேன் என்ற
சொல் வஞ்சிமாநகரை சேர்ந்தவன் என்ற பொருளையும் வஞ்சிக்கமாட்டேன் என்ற பொருளையும் தருகிறது.
வஞ்சியான் என்ற சொல்லும் வஞ்சிக்கமாட்டான் என்ற பொருளையும் வஞ்சி மாநகரை சேர்ந்தவன்
என்ற பொருளையும் தருகிறது இவ்வாறு ஒரே சொல் பிரிபடாமலேயே பல பொருளை தருவதால் இது செம்மொழி
சிலேடையாகும்.
வஞ்சிக்க மாட்டேன் என்று சொன்னவன் வஞ்சி எனது ஊர்
என்றான். அவனும் என் ஊர் என்பதால் நம்பி உண்மை உரைத்தேன். வஞ்சிக்க மாட்டேன் வஞ்சிக்க
மாட்டேன் என்று சொல்லி பெண்களைப் போல வஞ்சித்துவிட்டான் வஞ்சி மாநகர அரசன் என்பது பாடலின்
பொருள்.
பிரிமொழி சிலேடையை பார்ப்போமா?
ஆவலுடன் பாவலரும் ஆறு கால்
வண்டினமும்
காவலரைச் சூழும் கலையசையே!
இப்பாடலில் உள்ள காவலர்
என்ற சொல் பிரிபடாமல் நின்று மன்னரையும் கா+அலர்
என்று பிரிந்து சோலையின் கண் உள்ள மலரையும் குறிக்கிறது. எனவே இது பிரிமொழி சிலேடை
ஆகும்.
இந்த பாடல் வரிகளின் பொருளுணர முடிகிறதா? பின்னூட்டத்தில்
உங்கள் கருத்துக்களை நிரப்பி எனக்கு ஊக்கம் தந்திடுங்கள்! மீண்டும் அடுத்த பகுதியில்
சந்திப்போம்! நன்றி!
தங்கள் வருகைக்கு நன்றி!
பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
நல்ல தகவல் தந்த சுரேஷுக்கு நன்றி
ReplyDelete
ReplyDeleteஎப்போதோ படித்து மறந்து போன முக்கியமானவற்றை
மீண்டும் அறியத் தந்ததிற்கு மிக்க நன்றி .
நல்ல விளக்கம்... மேலும் தொடருங்கள்... வாழ்த்துக்கள்...
ReplyDeleteதொடர்ந்து படிக்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை மன்னிக்கவும்
ReplyDeleteஅன்புச் சகோதரன்
ம.தி.சுதா
அருமையாக உள்ளது. அசை பிரித்தலில் app இருக்கிறதா?
ReplyDeleteஅருமையாக உள்ளது. அசை பிரித்தலில் app இருக்கிறதா?
ReplyDeleteஅருமையாக உள்ளது. அசை பிரித்தலில் app இருக்கிறதா?
ReplyDelete