தலைவர் ஜோக்ஸ்!


 ஊழலை ஒழிப்போம்னு கோஷம் போட்டவங்களை பார்த்து தலைவர் என்ன சொல்றார்?
என்னை எவனாலும் ஒழிக்க முடியாதுங்கறார்!
                                   சிக்ஸ்முகம்.

கட்சி எதிர்காலத்துல எப்படி இருக்கும்னு கேட்ட தலைவர் ஏன் அவ்வளவு டென்ஷன் ஆயிட்டாரு?
 எதிர்காலத்துல கட்சி எப்படி இருக்கும்?னு பதில் வந்துச்சாம்!
                                       சி. சாமிநாதன்.

ஏன்யா! நில அபகரிப்புக்கு கூடவா ஸ்கூல், காலேஜ் எல்லாம் லீவ் விடுவாங்க?
தலைவரே அதே பீதியில இருக்காதீங்க.. அது நில அபகரிப்பு இல்லை! நில அதிர்வு!
                                       எம். தஞ்சை தரன்.
ஐபி எல் மேட்சை நம்ம முதல்வரே எடுத்து நடத்துவாங்கன்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவே இல்லை!
தலைவரே அது 20-20 இல்லை விஷன்2023!
                                           கி.ரவிக்குமார்.
படிப்படியாக குறைக்கப்பட்டு பின் முற்றிலும் நீக்கப்படும்னு தலைவர் எதை சொல்றார்?
அக்னி நட்சத்திர அனலை!
                                   அ.ரியாஸ்
தலைவர் அரசியல்ல இருந்து விலகிட்டாரே ஏன்?
கண்டிப்பா வாக்கிங் போகனும்னு குடும்ப டாக்டர் சொல்லிட்டாரே!
                                    அம்பைதேவா.
தலைவருக்கு மப்பு அதிகமாயிடுச்சுன்னு நினைக்கிறேன்!
எப்படி சொல்றே?
டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்களிடம் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகத்தீர்வு காணவேண்டும்னு பேசி இருக்காரே!
                                           க.சரவணக்குமார்.
தலைவர் ஏன் விளம்பர போர்டு எழுதறவர் மேல கோபமா இருக்காரு?
அதுவா தலைவரால் கட்சி தோற்றுவிக்கப்பட்டதுன்னு போர்டு எழுதச் சொன்னா தலைவரால் கட்சி தோற்று விக்கப்பட்டதுனு போர்டு எழுதி வெச்சி இருக்காரு!
                                                 ச்சாமு
மன்மோகன் சிங் சுயசரிதை எழுதினா என்ன பேர் வைப்பார் தெரியுமா?
எனக்குத்தெரியாது!
சபாஷ்! கரெக்டா சொல்லிட்டே!
                                 தஞ்சை தாமு.

தலைவருக்கு தற்பெருமை அதிகம்னு எப்படி சொல்றே?
நீங்க முறைகேடா சொத்து சேர்த்தீங்களான்னு வருமானவரித்துறைக்காரங்க கேட்டதுக்கு  இது நானா சேர்த்த சொத்து இல்லே! தானா சேர்ந்த சொத்துனு பதில் சொல்றாரே!
                                           எஸ். கோபாலன்.

இப்ப என்னத்துக்கு பொதுக்குழுவில இருந்து கிளம்பி தலைவர் கண் டெஸ்ட் பண்ணிக்க போறார்?
எலெக்சன்ல கண்டெஸ்ட் பண்ணுங்கன்னு சொன்னதை அந்த லட்சணத்துல புரிஞ்சிகிட்டு இருக்கார்!
                                  பர்வீன் யுனூஸ்
தலைவர் சொன்ன பதிலை கேட்டு ஜட்ஜ் டென்ஷன் ஆயிட்டாரா.. ஏன்?
ஆத்துல ஏன் மணல் அள்ளுனீங்கன்னு கேட்டா போலீஸ் கண்ணுல தூவறதுக்குன்னு சொன்னாராம்!
                         பர்வீன் யூனுஸ்.
முப்பது வருஷத்துக்கு எதிரிங்க தலைவர்கிட்ட நெருங்கவே முடியாது!
அப்புறம்?
அப்புறம் விடுதலை ஆயிருவாரு!
                                 கி. சாமிநாதன்.

எலைட் பார் தலைவரின் சிந்தனையை தூண்டிருச்சா?
உற்சாக மிகுதியில் தமிழகம் முன்னேற்ற போதையில் செல்கிறதுன்னு கூவுறாரே!
                               வி. விஷ்ணுகுமார்.

தலைவருக்கு ஐபிஎல் பித்து புடிச்சிருச்சு!
எப்படி சொல்றே?
அதிரடியாக செயல்படுவதில் தென்னாட்டு கிறிஸ்கெய்லே!எதிரிகளை வீழ்த்துவதில்தமிழ்நாட்டு டேல் ஸ்டெய்னே வருக வருக.. ன்னு பேனர் வைக்க சொல்றாரு!
                          வத்தியிராயிருப்பு தெ.சு. கவுதமன்.
நல்லாட்சி அமையணும்னு வேண்டிக்கிவோம்!
ஏன் தலைவரே.. நம்ம ஆட்சி அமைய கூடாதா?
                               வீ. விஷ்ணு குமார்.

தலைவரை இப்படி புலம்ப வைச்சிட்டாங்களே!
எப்படி?
அரும்பாடுபட்டு கட்சியை வளர்த்தேன்.. எல்லாம் புழலுக்கு இரைத்த நீராய் போச்சேன்னு!
                                  கிணத்துக் கடவு ரவி
திருப்பித்தா! திருப்பித்தா டெபாசிட்டை திருப்பித்தா!
தலைவரே! வெறும் மூணு ஓட்டு வாங்கிட்டு இப்படி கோஷம் போட்டா டெபாசிட்டை திருப்பித்தரமாட்டாங்க.. வாங்க வீட்டுக்கு போகலாம்!
                                       க,சரவணகுமார்.
மண்டை ஒடைஞ்சு ரத்தம் வர்றதுக்கு தலைவர் சொல்ற காரணம் நம்பும் படியா இல்லையே!
 என்ன சொன்னார்?
வெயில் மண்டையை பிளந்துடுச்சுன்னு சொல்றார்!
                              சோலை சுகுணா.
தலைவர் முழு பூசணிக்காயை சோத்துல மறைக்கிறாரே!
என்ன சொன்னார்?
நிழலுக்கு கூட புழல் பக்கம் ஒதுங்கியது இல்லைங்கிறாரே!
                                   வீ.விஷ்ணுகுமார்.
தெருக்கோடியில் இருந்து வந்தவன் நான் கடைக்கோடி தொண்டனாக் இருந்தவன் நான்..
தலைவர் என்ன சொல்ல வர்றார்?
சொத்துக் கணக்கை சூசகமா சொல்றார் போல!

                                 பர்வீன் யூனூஸ்.

நன்றி: ஆனந்த விகடன்.

தங்கள்வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப் படுத்துங்கள்! நன்றி!


Comments


  1. தெருக்கோடி, கடைக்கோடி - ஜூப்பருங்கோ!தலைவர் சூப்பர் தலைவர்!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2