டி.எம்.எஸ் மறைவு! அஞ்சலி!
தமிழ் திரையிசையில் தனக்கென ஒரு தன்னிகர் இல்லாத இடத்தை பிடித்து அரை நூற்றாண்டு காலம் திரையிசையின் ஜாம்பவானாகத் திகழ்ந்த பிரபல பின்னனி பாடகர் டி.எம்.எஸ். இவரது குரல்வளம் இனிமை அருமை, சிவாஜி, எம்.ஜி.ஆர். ஜெமினி என பல நடிகர்களுக்கு ஏற்றவாறு தன் குரலை வேறுபடுத்தி பாடி அந்த நடிகர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தார் என்றால் மிகையாகாது. 91வயது நிரம்பிய பாடகர் டி.எம்.எஸ் சில நாட்களுக்கு முன் வீட்டில் வழுக்கி விழுந்ததில் அடிபட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பிய அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. தொடர்ந்து மூச்சுத் திணறல் அவரது உயிரை பறித்துவிட்டது. காலன் அவரது உயிரை பறித்தாலும் அவரது கானங்கள் என்றும் நம்மிடையே நிறைந்திருக்கும். அவரது காதல் ரசம் பாடும் டூயட்களும் தத்துவம் பாடும் பாடல்களும் பக்தி பாடல்களும் என்றும் அழியா இசைக் காவியங்கள். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதல்களை தெரிவித்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவோம்!
அஞ்சலி!
ReplyDeleteஅவரது ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்...
ReplyDeleteமனம் கனக்கும் பகிர்வு :( தேனிசை தென்றலுடன் கலந்து விட்டது !!
ReplyDeleteஅன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனருள் கிட்டட்டும் .
அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்...
ReplyDeleteதமிழ் சினிமாவின் மிகச்சிறந்த பாடகர் டி.எம்.எஸ் அவர் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்
ReplyDelete