புகைப்பட ஹைக்கூ 28


புகைப்பட ஹைக்கூ 28

மழை மேகம் அல்ல
மலை
மேகம்!

 மலைநடுவே பாலம்!
 கட்டியது
மேகம்!

வெண்பஞ்சுகள்
மிதந்தன!
வெள்ளை மேகம்!

காற்றில் தவழ்ந்தன
இயற்கையின் எழில்கள்!
வெண் மேகங்கள்!

வெள்ளை பெண்ணுக்கு
வறவேற்பில்லை!
மேகம்!

உருவங்கள் ஊர்ந்தன
வானில்!
மேகக்கூட்டம்!

மலையில் மோதியதும்
உடைந்தது பஞ்சுபொதி!
வெண் மேகம்!

காற்றில் கலைந்தன
வாணப்பெண்ணின் ஆடை!
மேகம்!

தூரிகை இன்றி
ஓவியம் தீட்டின
வானில் மேகங்கள்!

காற்றடித்ததும்
கலைந்து ஓடின
மேகங்கள்!

ஆவி ஆனதால்
வெள்ளுடை தரித்தது
மேகம்!

குளிரவில்லை குளிர்ச்சி
தந்தது
மேகம்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

 1. ஹைக்கூ அருமை...

  ரசித்தேன்... தொடர வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. மேகம் நன்றாகவே கற்பனைக்கு தீனி போட்டிருக்கிறது... ரசித்தேன்!

  ReplyDelete
 3. அழகிய கற்பனை வாழ்த்துக்கள் சகோதரா !

  ReplyDelete
 4. அருமையான கவிதைகள்... மழையை எதிர்பார்த்திருக்கும் இந்த தருணத்தில்..

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2