மரம் வெட்டிகளுக்கு ஓர் கேள்வி?


மரம் வெட்டிகளுக்கு ஓர் கேள்வி?


மரம் வெட்டி என்று சொன்னதுமே உடனே ஐயாவின் அடிதாங்கிகள் கோபித்துக் கொண்டு வந்து குதிக்க வேண்டாம். நீங்கள் மரம் வெட்டிதானே கட்சி வளர்த்தீர்கள். முதலில் உங்கள் கட்சி என்ற ஒன்றே காணாமல் போயிருக்க வேண்டிய ஒன்று. என்ன செய்வது காலத்தின் கட்டாயம்! நீங்களும் கட்சி வளர்த்து?! எம். எல்.ஏவாகவும் எம். பி யாகவும் மத்திய மந்திரியாகவும் பதவி வகித்து நாட்டின் சீர்கேட்டை வளர்த்து விட்டீர்கள். எல்லாம் காலத்தின் கோலம்!
    ஆரம்பத்தில்  எனக்கு பிடிக்காத ஒன்று ஜாதி அரசியல்! இதை முளையிலேயே கிள்ளி எறிந்திருக்கவேண்டும். ஆனால் தமிழ் நாட்டின் சாபமோ என்ன தெரியவில்லை! இன்று மூலைக்கொரு ஜாதிக் கட்சிகள். இதில் உங்கள் கட்சிதான் பெரியது என்று மார்தட்டிக் கொள்கிறீர்கள். நாங்கள்தான் வீர பரம்பரை! நெருப்பில் இருந்து உதித்தோம் என்றெல்லாம் வீரம் பேசிக் கொள்கிறீர்கள் சரி! இருந்துவிட்டு போங்கள்! நாங்கள் வேண்டுமானால் தாய் வயிற்றில் பிறந்த அறிவிலிகளாகவும் கோழைகளாகவும் இருந்துவிட்டு போகிறோம்.
        நீங்கள் மாநாடு நடத்துங்கள்! விழா நடத்துங்கள்! என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்! ஆனால் அப்பாவி மக்களை எதற்கு வதைக்கிறீர்கள்! எங்கள் இனப் பெண்களை தலித்துக்கள் கடத்தி சென்று கல்யாணம் செய்து விடுகிறார்கள் என்று கொக்கரிக்கீறீர்களே! வீர சோழர்களே! காதல் என்பது எல்லா ஜாதியிலும் இன்று மலிந்து கிடக்கிறது. இன்னும் சொல்லப் போனால் சங்க இலக்கியங்களிலே கூட காதல் வருகிறது. அது ஒரு இரசாயண அனுபவம். நீங்கள் செய்தால் சரி மற்றவர்கள் செய்தால் தவறா?


   உங்கள் இளைஞர்கள் யாரும் காதலிக்க வில்லையா? வேற்று சாதி பெண்களை கடத்தி வருவதில்லையா? தமிழ் என்கிறீர்கள் தமிழ் பண்பாடு என்கிறீர்கள்! ஆனால் இதில் மட்டும் முரண் பட்டு நிற்கிறீர்கள்! தமிழர்களோடு ஒன்றி நிற்பது காதல்! சரி உங்களுக்கு காதல் பிடிக்க வில்லை! தலித்துகள் உங்கள் பெண்களை கெடுத்து விடுகிறார்கள் என்றால் உங்கள் பெண்களை அவர்களோடு பழகவிடாதீர்கள். உங்கள் பரம்பரையை எடுத்து கூறி முறையாக வளருங்கள்! அதை விட்டு எடுத்தேன் கவிழ்த்தேன் என்று ஒரு குறிப்பிட்ட இனத்தை ஜாதியை பழிவாங்கும் செயல்களில் ஈடுபடுவது என்ன நியாயம்.
 மகாபலிபுர கடற்கரை கோயில் உங்களை என்ன செய்தது? அதன் மீது ஏறி உங்கள் கொடி நாட்ட வேண்டுமா? குடியை தவிர்க்க சொல்லும் உங்கள் கட்சியிலேயே எத்தனை குடிகாரர்கள்? அவர்கள் கும்மாளம் போடுவது உங்கள் கண்களில் படவில்லையா? மரக்காணம் கலவரம் தூண்டி விட்டு அப்பாவி மக்கள் பாதிக்கும் வண்ணம் குடிசைகளுக்கு தீ வைத்து விட்டு இழப்பீட்டீற்காக தீ வைத்துக் கொண்டார்கள் என்று கூலாக சொல்லும் உங்களுக்கு மனசாட்சி என்று ஒன்று இருக்கிறதா?
    இதெல்லாம் போகட்டும்.ஐந்தாண்டுக்கு ஒருமுறை கட்சி மாறி கூட்டு வைக்கும் நீங்கள் இனி திராவிட கட்சிகளோடு கூட்டு இல்லை என்று சொல்கிறீர்கள். சொல்லப்போனால் உங்களை வளர்த்தே இந்த இரண்டு திராவிட கட்சிகள்தான். எம். ஜி. ஆர் மட்டும் உயிரோடு இருந்திருந்தால் இன்று உங்கள் கட்சி காணாமல் போயிருக்கும் இதை அன்றைய வரலாற்றை புரட்டி பார்த்தால் அறிந்து கொள்ளலாம். நீங்கள் தவறு செய்தீர்கள் அப்புறம் முடிந்தால் கைது செய் என்று அறை கூவல் விடுத்தீர்கள்! இப்படி அறைகூவல் விட்டு அழைத்தால் கோழைக்கு கூட வீரம் முளைக்கும்.
   இந்த அரசோ உங்கள் மீது குற்றம் சுமத்த காத்திருக்கும் அரசு! இதுதான் சாக்கு என்று கைது செய்து விட்டது. இனி ஜாமினில் வருவதோ இல்லை உள்ளே இருப்பதோ உங்கள் முடிவு! அதற்காக திரும்பவும் பொதுச் சொத்துக்களை சேதப்படுத்த வேண்டுமா? சுமார் இருபது பேருந்துகள் எரிக்கப்பட்டுள்ளன. இது யார் வீட்டு பணம்? உங்கள் வீட்டுப்பணமா? எங்கோ கூலிவேலை செய்யும் அப்பாவி தமிழரின் பணமும் அந்த பஸ்ஸில் பங்கு வகிக்கிறது? ஏன் அந்த பஸ்ஸை கொளுத்தினார்களே உங்கள் அடிப்பொடிகள் அவர்களது பணமும் அந்த பஸ்ஸில் பங்கு வகிக்கிறது! இதெல்லாம் மரம் வெட்டிகளான உங்களுக்கோ உங்கள் தொண்டர்களுக்கோ தெரியாமல் போனதில் நியாயம் இல்லை!
   உங்களுக்கு தெரிந்தது எல்லாம் வன்முறை! உங்கள் வீரத்தை காட்ட வேண்டும்! நீர் அப்படி என்ன பெரிய சாதனை படைத்து விட்டீர்! அங்கே எல்லையை காக்க சென்று எதிரிகளால் மறைமுகமாக தாக்கப்பட்டு உயிரை விட்ட ஒரு முகம் தெரியாத இந்தியன் செய்த சாதனை கூட உங்களால் செய்ய முடியுமா? பாகிஸ்தானியரால் வஞ்சிக்கப்பட்ட அப்பாவி சரப்ஜித் சிங்கின் பெற்றோரும் குடும்பமும் இப்படி என் மகன் இறந்துவிட்டான் என்று பொங்கி எழுந்து பொதுச்சொத்துக்கு சேதம் விளைவிக்கவில்லை! ஆனால் நீங்களும் உங்கள் கட்சியினரான மரம் வெட்டிகளும் மரங்களை வெட்டுகிறீர்கள் பஸ்களை கொளுத்துகிறீர்கள்! ஒரு மரம் உருவாக எத்தனை நாளாகும்? நொடியில் வெட்டி வீழ்த்தினால் உங்களுக்கு என்ன பயன்? இனியாவது இந்த உருப்படாத வேலைகளை விட்டு விடுங்கள்!

  கடந்த மூன்று நாட்களாக ஆறுமணிக்கு மேல் புறநகரில் பேருந்துகள் இயக்கப்படுவது இல்லை! எல்லாம் உங்கள் அடிபிடிகள் கைங்கர்யம்! பஸ் கண்ணாடிகளை உடைத்தல் தீ வைத்தல் மரம் வெட்டுதல் என்ற  வன்முறைகளை செய்வதால் உங்களை கண்டிப்பாக வன்னியர் என்று அழைக்கலாம்தான். தனிப்பட்ட முறையில் உங்கள் ஜாதியை திட்ட எனக்கு விருப்பம் இல்லை! ஆனால் நீங்கள் செய்யும் இந்த அராஜகம் என்னை பேச வைக்கிறது.
    அரசுக்கு ஒரு ஆலோசனை! இது மாதிரி பொதுச் சொத்துக்களை நாசப்படுத்தும் கட்சிகளுக்கு ஓர் எச்சரிக்கையாகவும் இது அமையும். சேதமான பொதுச்சொத்துக்களுக்கு இழப்பீடாக அந்த கட்சி பணத்தை வசூல் செய்ய வேண்டும். அதுவரை அந்த கட்சி தலைவர்களை விடுதலை செய்யாமல் வைத்திருக்க வேண்டும். அப்படி செய்தால் தான் இனி இந்த கொடுமைகள் அகலும். ஆனால் கட்சிகள் ஆட்சி செய்யும் இந்த மாநிலத்தில் இதை துணிந்து அமல் படுத்துவார்களா என்பது சந்தேகம்தான்.
    மரம் வெட்டி கட்சி நடத்துபவர்களே! இனியாவது இந்த போக்கினை கைவிடுங்கள்! மக்கள் நலப் பணிகளில் கவனம் செலுத்துங்கள்! இல்லையேல் மக்கள் உங்களை கைவிடுவார்கள்! இது போன தேர்தலிலேயே தெரிந்து இருக்கும். இனியாவது உஷாராக இருங்கள்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. மக்கள் எலக்சன்ல நல்ல தீர்ப்பு கொடுக்கட்டும் ...!

    ReplyDelete
  2. இவர்களால் பாதிக்கபடுவது அப்பாவியான ஏமாந்த பொது மக்கள் தான்

    ReplyDelete
  3. ஒரு இனத்தை தவறாக வழி நடத்துகிறோம் என்பதை அவர் உணரவே இல்லை.

    ReplyDelete
  4. போக்கத்த பயலுக....லூஸ்ல விடுங்கய்யா...இவங்களை மக்கள் மறந்தாச்சு என்பதுதான் உண்மை...!

    ReplyDelete
  5. I am not interested in politics but you are insulting all the farmers by telling "மரம் வெட்டி". if u have problem with politics means u can directly mention the person whom u want to curse not the farmers.

    ReplyDelete
  6. பொதுச்சொத்துக்களுக்கு இழப்பீடாக அந்த கட்சி பணத்தை வசூல் செய்ய வேண்டும்.

    ReplyDelete
  7. உங்கள் தலைவர் சிறையில் வாடினால் நீங்கள் உண்ணாவிரதம் இருங்கள். வேண்டுமென்றால் உங்களை கூட தீயிட்டுக் கொள்ளுங்கள். அப்பாவி மக்கள் பயணம் செய்யும் வாகனங்கள் மீது பெட்ரோல் பாம் வீசுகிறிர்களே அட அறிவுகெட்ட முண்டங்களே திருவண்ணாமலையிலும் மரக்காணத்திலும் உங்களால் இரண்டு ஓட்டுனர்கள் உயிரைவிட்டு விட்டார்களாடா மடையர்களே. இனிமேலாவது திருந்துங்கடா.

    ReplyDelete
  8. சரியான சவ்கடி .இவங்கள செறுபல அடிக்கணும்

    ReplyDelete
  9. நல்ல நெத்தியடி பதிவு, ஆனால் மரம்வேட்டிகளுக்கு மண்டையில் ஏறாது.

    ReplyDelete
  10. வயிறு எரியுதா? கால் பண்ணுங்க 108 க்கு

    ReplyDelete
  11. வயிறு எரியுதா? கால் பண்ணுங்க 108 க்கு

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2