சிரிக்க வைத்த சிரிப்புக்கள்! பகுதி 3


சிரிக்க வைத்த சிரிப்புக்கள்! பகுதி 3



1.   நம்ம டைரக்டர் ரொம்ப ரியலிசம் பாக்கிறாரு!
எப்படிச் சொல்றே?
ஹாஸ்பிடல் சீன் எடுக்கும் போது செட் ப்ராப்பர்டியா எலி பாம்பு, நாயெல்லாம் வேணுங்கிறாரே!
                     பர்வீன் யூனூஸ்
2.   உங்க அப்பாவின் கன்னம் ஏன் வீங்கி இருக்கு?
அம்மாவின் கை பேசி!
                         அம்பை தேவா.
3.   டாக்டர் ஏன் மார்ச்சுவரியிலே உட்காந்திருக்கார்?
வேற எந்த ரூம்லயும் ஏசி வேலை செய்யலையாம்!
                           அ.ரியாஸ்
4.   நம்ம தலைவரை பார்க்க டாக்டரும் வக்கீலும் வராங்க!
எதுக்காம்?
டாக்டர் தலைவரோட சிறுநீரகக் கல் பிரச்சனைக்காகவும் வக்கீல் கிரானைட் கல் பிரச்சனைக்காகவும் வர்றாங்க!
                       மதுரை முருகேசன்.
5.   இனிமே தேர்தல்ல டெபாசிட் போனா தலைவர் சும்மா விடமாட்டாராம்?
என்ன செய்வாராம்?
எங்க கட்சி ஓட்டுக்களை அபகரிச்சிகிட்டதா எதிர்கட்சி மேல வழக்கு போடுவேங்கிறார்!
                           அம்பை தேவா.
6.   தன்னுடைய கொடும்பாவிக்கே சட்டை தைக்க அளவு கொடுத்த அப்பாவிதான் எங்கள் தலைவர் என்பதை எதிர்கட்சிகளுக்குத் தெரியப்படுத்திக் கொள்கிறேன்!
                                     மதுரை முருகேசன்.
7.   அமைச்சரே அந்த ரிங் டோனை எனக்கு ப்ளு டூத்தில் அனுப்பும்!
மன்னா! ஒலிப்பது ஆராய்ச்சி மணி!
                             வீ. விஷ்ணு குமார்
8.   நாடாளுமன்றத்தேர்தலில் எங்கள் கட்சிக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்தால் ஒவ்வொருவருக்கும் ஆண்ட்ரியா போன் இலவசமாக வழங்கப்படும்!
தலைவரே அது ஆண்ட்ராய்டு போன்!
  
                         ஜி.ஆர். விஜய்.
9.   ஸ்கிரிப்ட்ல ஒரு டவுட் இருக்கு?
என்ன?
யாரோடது?
                        அம்பை தேவா.
10. மன்னா! வரலாறு காணாத வெற்றி!
புலவரே! என்ன உளறுகிறீர்!
ஆம் மன்னா! உங்கள் வெற்றியை வரலாற்றில் எங்கும் காண முடியாதே!
                         கோவை நா.கி. பிரசாத்.
11. சார்.. சலாம் சார்! டிரங்க் அண்ட் டிரைவ் சார்.. வண்டியோட பிடிச்சிட்டு வந்துட்டேன்!
அது சரி ஏட்டய்யா! அதுக்கு ஏன் போஸ்ட் ஆபிஸுக்கு வந்திருக்கீங்க?
                                 கி. ரவிக்குமார்.
12. இந்த ஆபரேஷன்ல நீங்க எப்படியாவது பிழைச்சிரணும்!
என் மேல உங்களுக்கு அவ்வளவு கருணையா டாக்டர்?
இல்லைன்னா, என்னை பழையபடி கம்பவுண்டராவே மாத்திருவாங்களே!
                                   கி.ரவிக்குமார்.
13. தலைவருக்கு ஏன் தான் டாக்டர் பட்டம் கொடுத்தாங்களோ?
ஏன்?
எந்த வேலையை சொன்னாலும் இந்த ஆபரேஷனை சீக்கிரம் முடிங்கனு சொல்றார்!
                                  சற்குணம்.
14. திறந்து வைக்க கூட்டிட்டு போனவங்களை தலைவர் கண்டபடியா திட்டிட்டு வர்றாரே ஏன்?
பீர் பாட்டிலை குடுத்து திறக்கச் சொன்னாங்களாம்!
                                   சி. சாமினாதன்.
15. இந்த ஊழலில் உங்கள் பங்கு என்ன?
இன்னும் பிரிக்கவில்லை யுவர் ஆனர்!
                          கிணத்துக்கடவு ரவி.
16. கல்லிலே கலை வண்ணம் கண்டேன்..!
தலைவரே நிலைமை புரியாம கல்லை பற்றி எல்லாம் பாடி மாட்டிக்காதீங்க!
        
                     சாந்தி பாஸ்கர்.
17. கட்டின டெபாசிட்டை திரும்பித்தராம ஏமாத்திட்டாங்கன்னு புலம்பறார் தலைவர்!
ஃபைனான்ஸ் கம்பெனியா.. ஈமு கோழி கம்பெனியா?
தேர்தல் கமிஷனாம்!
                       பர்வீன் யூனூஸ்
18. தலைவர் ரொம்பத்தான் மாறிட்டார்!
எப்படி?
வெட்டுக்கத்தியா இருந்தவர் மகளிர் அணித்தலைவி வந்ததில் இருந்து அட்டகத்தியா மாறிட்டாரே!
                    பா. மனோ
19. ஓட்டை மைக் சிஸ்டத்தை கொடுத்து ஏமாத்தி இருக்கியே நீ உருப்படுவியா? ஊசி போன சுண்டலை விக்கிறீயே உன்னை என்ன செய்யலாம்?
தலைவர் பாவம் என்ன பண்ணுவார்? எல்லா கட்சிகளோடவும் கூட்டணி வெச்சிருக்கிறதாலே யாரையும் திட்ட முடியலை அதான் இப்படி!!
                                 பர்வீன் யூனூஸ்.
20. மாப்பிள்ளை மொடாக் குடியரோ?
எப்படி கண்டுபிடிச்சீங்க?
பொண்ணுக்கு ஊறுகாய் செய்யத்தெரியுமான்னு கேட்கிறாரே!
                          விகடபாரதி.
நன்றி: ஆனந்தவிகடன்.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

                           

Comments

  1. ஹா.. ஹா..

    தொகுப்பிற்கு நன்றி...

    ReplyDelete
  2. காலையில் சிரிப்புடன் தொடங்கி இருக்கிறேன். நல்ல தொகுப்பு.

    ReplyDelete
  3. ரசித்தேன் சிரித்தேன்

    ReplyDelete
  4. ஹா ஹா ஹா ஹா ஹா ரசித்தேன் ரசித்தேன்...!

    ReplyDelete
  5. வாய் விட்டுச் சிரிச்சா நோய் விட்டுப் போகும்!

    ReplyDelete
  6. வரலாறு காணாத வெற்றியும், வெட்டுக் கத்தி அட்டகத்தியானதும் அருமை!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2