புகைப்பட ஹைக்கூ 30
புகைப்பட ஹைக்கூ 30
பூவோடு சேர்ந்து
குளித்தது
பூ!
வாடினால்
வதங்கும் மனசு
பூ!
பூ வியாபாரம்
கூடவே குழந்தைக்கு
உபசாரம்!
கொளுத்தும் வெயிலிலும்
குளிர்விக்கிறது அன்னையின்
அன்பு!
வெயிலுக்கு
கவசமானது
தண்ணீர் குளியல்!
வாட்டும் வெயிலில்
வாடாமல் சிரித்தது
குழந்தை!
வாசமுடன்
பாசமும் சேர்ந்தது
பூக்காரியின் குழந்தை!
குடும்பச் சுமையை
குறைத்து வைத்தது
குழந்தை!
பாச ஊற்றீல்
மூழ்கியது
குழந்தை!
உருக்கும் வெயிலில்
பெருக்கெடுத்தது தாயின்
பாசம்!
பூக்கடையில் ஒரு
விலையில்லா
பூ!
குழந்தை குளிப்பது
நீரில்மட்டுமல்ல
தாய்ப்பாசத்திலும்!
வாசம் மணத்தது மல்லியில்!
பாசம் மணத்தது
பிள்ளையில்!
வாடாமல் இருக்க
ஈரமானது
பூ!
ஈரமான மனம்
ஈரமானது
பூ!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்!
நன்றி!
மனம் மகிழ்ச்சியில் பூத்தது... வாழ்த்துக்கள்...
ReplyDeleteSuper .....
ReplyDeletesuper...
ReplyDeleteஅழகுக் கவிதை... வாழ்த்துகள்.
ReplyDeleteபூப்போல அழகான மணம் வீசும் கவிதை
ReplyDeleteஅழகிய கவிதை வாழ்த்துக்கள்
ReplyDeleteகுழந்தை குளிப்பது
ReplyDeleteநீரில்மட்டுமல்ல
தாய்ப்பாசத்திலும்!//உண்மை தான் நண்பரே