மாநெல்லூரில் ஒரு மஞ்சிப் பொழுது!


மாநெல்லூரில் ஒரு மஞ்சிப் பொழுது!


மாநெல்லூர் ஆந்திர எல்லையோரம் சத்தியவேடு அருகே உள்ள ஒரு பெரிய கிராமம். இங்கேதான் எனது தாத்தா சிவஸ்ரீ சுப்ரமண்ய குருக்கள் சுமார் எழுபது ஆண்டுகாலம் வாழ்ந்தார். எங்களது பூர்வீகம் ஆரணி அருகே உள்ள அகரம் கிராமம். அங்கிருந்து தனது பதினெட்டு அல்லது இருபது வயதில் திருமணமானவுடன் எங்கள் பாட்டியுடன் மாநெல்லூருக்கு குடிபுகுந்தார் எங்கள் தாத்தா.
    இந்த ஊரில் இருந்தால் உன் குடும்பம் தழைக்காது. இந்த மண் சாபம் பெற்ற பூமி! நீ வேறு எங்காவது சென்று பிழைத்துக் கொள் என்று அப்போது தாத்தாவிற்கு அவர்களது பெரியோர்கள் யாரோ சொல்லி இருக்கிறார்கள். அதனால் தந்தையின் எதிர்ப்பையும் மீறி எங்கள் தாத்தா மாநெல்லூர் சென்றார். அங்கு சந்தப் பேட்டை பிள்ளையார் கோயில் பூஜை. சொற்ப வருமானம். கோயில் மடப்பள்ளியிலேயே வசிப்பிடம் என்று சில மாதங்கள் கழிந்த பின் மாநெல்லூர் சாமூண்டீஸ்வரி அம்மன் கோயில் பூஜையை ஒத்துக் கொண்டுள்ளார்.
   அவர்கள் தங்க வீடும் தந்துள்ளார்கள். அங்கு தங்கி வரிசையாக  ஒன்பது பிள்ளைகள் பெற்று இரண்டு இறந்து போக மற்றவர்களை வளர்த்து ஆளாக்கி திருமணம் செய்து வைத்து என கிட்டத்தட்ட தனது 90வது வயதில் இறக்கும் வரை மாநெல்லூரை விட வில்லை எங்கள் தாத்தா.
   அவர் 2008ல் இறந்தபின் நாங்கள் அந்த ஊருக்கு செல்லவில்லை! தாத்தா இருக்கும் போது கூட எப்போதோ வருடம் ஒன்றிரண்டு முறை செல்வோம். இறப்பதற்கு ஒரு மாதம் முன் வரை மாநெல்லூரில் ஐந்து கோயில்களுக்கு பூஜை செய்து கொண்டு பஞ்சாங்கம் பார்த்துக் கொண்டு ஊர் புரோகிதமும் செய்து கொண்டிருந்தார் எங்கள் தாத்தா.

      பிள்ளைகளை திருமணம் ஆனதும் வேறு எங்காவது போய் பிழைத்துக் கொள் என்று அனுப்பி வைத்து விட்டார். என் அப்பாவும் சித்தப்பாக்கள் மூவரும் வெவ்வேறு இடங்களில் செட்டில் ஆகி விட்டனர். பெண்களுக்கும் திருமணம் முடிந்து வெளியூர்களில் செட்டில் ஆகிவிட்டனர். இறுதிக் காலத்தில் மனைவியோடு வேறு கருத்து வேறுபாடு. ஒரே ஊரில் வெவ்வேறு இடத்தில் வசித்தனர். தனிமை அவரை மிகவும் வாட்டியிருக்க கூடும். உடல் உபாதைகள் வேறு. முதலில் எரிந்து விழுவார். கொஞ்ச நேரம் நாம் அமைதியாக இருப்பின் அவரும் அமைதியாகி பாசமாக பேசத்துவங்குவார். அவரிடம் எல்லோருக்கும் ஒரு பயம் இருந்தது. அதனால் நெருங்கி பழக வில்லை! எங்கள் கடைசி அத்தை மட்டும் ரொம்ப நெருக்கமாக இருப்பார். இறுதிக் காலத்திலும் அவர்தான் உடன் இருந்தார்.
    சரி விசயத்திற்கு வருவோம்! எங்கள் தாத்தா இறந்த பின் அந்த ஊர் பூஜைகளை நாங்கள் விட்டுவிட்டோம். சுமார் எழுபது ஆண்டுகாலம் எங்கள் தாத்தா பூஜை செய்த சாமூண்டீஸ்வரி ஆலயத்திற்கு கும்பாபிஷேகம் நடந்தது என்று கேள்விப் பட்டோம். வேலூரில் இருந்து வந்த எங்கள் அத்தை மாநெல்லூர் சென்று வருவோம். அம்மனை தரிசித்து வருவோம் என்றார்.
   கடந்த 9ம் தேதி ஒரு வேனில் மாலை 5 மணிக்கு புறப்பட்டு மாநெல்லூர் அடைந்தோம். சாமுண்டீஸ்வரி ஆலயத்தில் அன்று கத்திரி பூஜையாம். மக்கள் திரளாக கூடியிருந்தனர். எங்களை கண்டதும் பாசத்துடன் வறவேற்றனர். கூல்டிரிங்ஸ் காபி என கொடுத்து உபசரித்தனர். எங்கள் தாத்தா வசித்த வீட்டில் இப்போது வேறு ஒரு குடும்பம் வாடகைக்கு தங்கியிருந்தது. என் அப்பா ஆவலுடன் அந்த வீட்டிற்கு சென்று பார்த்து வந்தார்.
  பின்னர்  மீண்டும் சாமூண்டீஸ்வரி ஆலயம் வந்தோம். ஆலயம் புணரமைப்பு செய்யப்பட்டு இருந்தது. மஞ்சள் காப்பில் அம்மன் அருளாட்சி புரிந்தாள். வழிபாடு செய்து இரவு வீடு திரும்பினோம். அங்கு வசிப்பவர்கள் தெலுங்கு மொழி பேசுபவர்கள். என் தந்தை, அத்தை தெலுங்கு பேசுவார்கள் ஆனால் எங்களுக்கு எல்லாம் தெலுங்கு தெரியாது. அவர்கள் தெலுங்கில் உரையாடியபோது திருதிருவென முழித்துக் கொண்டிருந்தோம்.
  எங்கள் அத்தை எங்களை அறிமுகம் செய்யும் போது  என்னை இது ம அண்ண கொடுக்கு! இது அண்ண கோடாளூ! என்று என் மனைவியையும் அறிமுகம் செய்தார். ஏய் நீ கோடாலியாண்டி! என்று என் மனைவியை கிண்டல் செய்து மகிழ்ந்தோம்!
  எங்கள் தாத்தா வாழ்ந்த வீட்டையும்  கோயிலையும் கொஞ்சம் புகைப்படங்கள் எடுத்தேன்! பின்னர் அங்கிருந்து திரும்பினோம். அன்றைய மாலைப் பொழுது இனிமையாக கழிந்தது. அதைத்தான் மாநெல்லூரில் ஒரு மஞ்சிப் பொழுது! என்று எனக்கு தெரிந்த தெலுங்கில் எழுதினேன்! பாக உன்னாரா?! செப்புங்க கமெண்ட் பாக்சில்!

தங்கள் வருகைக்கு நன்றி!  பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!



Comments

  1. ஹா ஹா ஹா உங்கள் மனைவியை இப்படியா கிண்டல் செய்வது... நல்ல பதிவு... ஆனால் கடைசி வரை என்ன சாபம் ஏன் சாபம் என்று சொல்லாமல் விட்டுடீங்களே

    ReplyDelete
    Replies
    1. அது என்ன சாபம் என்று எனக்கே தெரியாது பாஸ்! அங்கிருந்தால் குழந்தைகள் பிறக்காது என்று சொன்னதால் தாத்தா மாநெல்லூர் சென்றதாக கூறுவார்கள்! வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

      Delete
  2. కూడా ... అభినందనలు ...! ஹிஹி...

    ReplyDelete
    Replies
    1. தெலுங்கில எல்லாம் கமெண்ட் போட்டு கலக்கறீங்க! சூப்பர்! எனக்குத்தான் படிக்க தெரியாது!

      Delete
  3. பாக உந்தி!
    அம்மனைப் பார்த்து வந்த நேரம்,நீங்கள் எதிர்பார்க்கும் ஒரு நல்ல செய்தி உங்களை வந்தடையும்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி! நல்ல செய்தி?! சஸ்பென்ஸை கிளப்பிட்டீங்களே!

      Delete
  4. ரொம்ப நல்லாத் தான் இருக்கு உங்க பதிவு....

    ReplyDelete
    Replies
    1. நீண்ட நாளுக்கு பிறகு தொடர் வருகைக்கு நன்றி!

      Delete
  5. சுரேஷ் பதிவு மஞ்சிகா உந்தி........

    ReplyDelete
  6. அம்மனைப் வணங்கியதால் நல்லதே நடக்கட்டும்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2