புகைப்பட ஹைக்கூ 27
புகைப்பட ஹைக்கூ 27
வேடிக்கை பார்த்த சூரியன்
விடலைகள்
குளியல்!
ஆற்று நீர் ஏமாற்றியதால்
ஊற்று நீரில்
உற்சாக குளியல்!
அருவி ஆனது
மோட்டார் கருவி
குளியல்!
வீணாகும் நீ ரும்
உபயோகமானது
வெட்டவெளி குளியல்!
உடைப்பெடுத்தது
நீர் மட்டுமல்ல
உற்சாகமும் கூட!
வெயிலுக்கு
விடை சொன்னது
குளியல்!
உடைந்த குழாயில்
ஒற்றுமைக்
குளியல்!
உடைந்தாலும்
ஒற்றுமை வளர்த்தது
குழாய்!
வயலுக்கு செல்கையில்
கொஞ்சம் விழலுக்கும்
குழாயில் குளியல்!
வாடை அகற்றும்
கோடைக் குளியல்!
உடைப்பெடுத்ததும்
பொங்கியது
மகிழ்ச்சி!
கேணிகள் மறைவு!
குளித்தனர்
குழாயில் நண்பர்கள்!
தங்கள்வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து உற்சாகப்படுத்துங்கள்! நன்றி!
அங்கு சென்று குளிக்கலாம் போல் உள்ளது...!
ReplyDeleteஅக்னிக்கு ஏத்த குளியல் ஹைக்கூ
ReplyDeleteஎனக்கும் உற்சாகம் பெருக்கெடுக்கிறது உங்கள கவிதக்குப்பின்.எனக்கு அதுபோல குளிக்க அதிஷ்டமில்லையே? ஆனந்தக்குளியல் அற்புதக் குளியல்
ReplyDeleteada ....
ReplyDeleterasanai..!
குளியல் ஹைக்கூ அருமை அண்ணா
ReplyDeleteஅடிக்கும் வெயிலுக்கு ஏற்ற சுகமான குளியல்!
ReplyDeleteசுருக்கமாகச் சொல்லி நிறைய ஏக்கத்தை கிளப்பிவிட்ட ஹைக்கூக்கள்!
வாழ்த்துக்கள்!