நம்பிக்கை, கருணை, அன்பின் வடிவங்கள்!


Worlds Ugliest Women is Actually Wonderful , Graceful and Beautiful , Indeed ! : ( Worth reading, Inspiring )

உனது அவலட்சணமான தோற்றம் உலகில் ஒரு அழகான உத்வேகத்தையும் , தன்னம்பிக்கையும் , விட்டுச் செல்லுமாயின் நீயே உலகின் ஆகச் சிறந்த பேரழகன்/ பேரழகி !


லிசி , ( Lizzie Velasquez, 23, The So called - Worlds Ugliest ( indeed, the Beautiful) Women ) பிறந்தபோதே உடலில் சுரக்கும் சுரப்பிகளின் குறைவு காரணமாக உடல் எடை குறைந்து இப்படி ஒரு வினோத உருவத்தைப் பெற்றார். பள்ளிக் காலத்திலேயே பயங்கர வசவுகளுக்கு உள்ளானார். மேலும் இந்த நோயினால் அவதிப் படுவோர் உலகில் இரண்டே பேர்.


யூ டியூபில் ஓடும் எட்டு நிமிட கானொளியில் ஒருவர் லிசியை , பேய் என்றும் ( Monster, , போய் செத்துவிடு என்றும் விமரிசித்திருக்கிறார். இது போல இன்னும் எத்தனையோ கொடுமைகள் நடந்திருக்கும் என்று நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள் ( கற்பனை அத்தனையும் கண்டிப்பா நடந்திருக்கும்) .


அது போகட்டும் ... இப்போது இவர் என்ன செய்து கொண்டிருக்கிறார். உலகத்தின் மிகக் கேவலமான வார்த்தைத் தாக்குதல்களுக்கு இரையாகிய லிசி, இன்று ஒரு தன்னம்பிக்கை பேச்சாளர் (A Motivational Speaker, had Given Over 200 Workshops on Embracing Uniqueness, Dealing with bullies and overcoming Obstacles). இருநூறுக்கும் மேலான கருத்தரங்கில் பேசியிருக்கிறார். இந்த மாதத்தின் தொடக்கத்தில் ஒரு புத்தகத்தை எழுதி வெளியிட்டிருக்கிறார். (Entitled : Be Beautiful, Be You அழகாய் இருங்கள்., நீங்களாய் இருங்கள் ).


ஏளனங்களை , எதிர்ப்புகளை, கிண்டல் கேலிகளை எப்படி சமாளிப்பது என்பதைத் தாங்கிய நம்பிக்கைக் கருவூலமாக ஒரு எழுத்தாளராக இருக்கிறார். மேலும் லிசி, டெய்லி மெயிலுக்கு அளித்த பேட்டியில் இப்படித் தெரிவித்திருக்கிறார் :
--
"
கடவுள் என்னை இப்படித்தான் படைத்திருக்கிறார். என்னை நான் எதன் பொருட்டும் மாற்றிக் கொள்ளப் போவதில்லை முடிந்த வரை இயல்பாய் வாழ முயற்சிக்கிறேன். என் மீது ஏவப்படும் எந்தத் தாக்குதல்களையும் , வசவுகளையும் பெரிது படுத்திக் கொள்வதில்லை , அவைகளை வெறும் வார்த்தைகளாகவே பார்க்கிறேன். எல்லாவற்றையும் கேட்டுச் சிரித்துக் கொள்வேன் .
--
நான் என்பது என் தோற்றத்தைப் பொறுத்ததல்ல என் செயல்களைப் பொறுத்ததே. மேலும் , நான் என்னைக் கிண்டலடிப்பவர்களின் அளவுக்குத் தரம் தாழ்ந்து கீழிறங்கி ஒருபோதும் செல்வதில்லை . என் பதிலடியை என் நம்பிக்கையின் மூலமும், வெற்றியின் மூலமும் மட்டும் காட்ட விரும்புவேன் ". என்றார் ....

#
என் இனிய மக்களே ... இன்னுமென்ன தன்னம்பிக்கை வார்த்தைகளை எதிர்பார்க்கிறீர்கள் ? நீங்கள் யாராக , எப்படி இருக்கிறீர்களோ , அது தான் உலகின் ஆகச் சிறந்த அழகு "

-
பிரபாகரன் சேரவஞ்சி
Thanks , Deccan Chronicle, Daily Mail , You Tube.


"கிளாடிஸ் ஸ்டெய்ன்ஸ் எனும் பெண்மனியின் தியாகம், பெருந்தன்மை, மன்னிக்கும் குணம்"

தொழு நோயாளிகளுக்கு சேவை செய்ய குடும்பத்துடன் ஒரிசாவில் பழங்குடியின மக்களிடையே தங்கி சேவை புரிந்து வந்தவர் பாதிரியார் ஸ்டேன்ஸ்.அவர் பாதிரியார் என்பதை விட சிறந்த சமூக சேவகர் என்பதே சரி.அவர் மதமாற்றம் செய்வதாக கூறி ஒரு கொடிய கும்பல் அவர் இருப்பிடத்தை நோக்கி வந்தது.

35
வயதான ரபீந்திர குமார் பால் எனும் தாரா சிங் தலைமையிலா குழு 1999ம் ஆண்டு சனவரி மாதம் 22ம் தேதி நள்ளிரவு பாதிரியாரும்,அவர் குழந்தைகளும் தூங்கிக்கொண்டிருந்த வாகனத்தை தீயிட்டுக் கொளுத்தியதில் 58 வயதான ஸ்டெய்ன்ஸ், அவர் மகன்கள் 10வயது பிலிப், 7 வயது திமோத்தி ஆகியோர் உடல் கருகி உயிரிழந்தனர். இத்தனை பெரிய துயரையும் தாங்கிக் கொண்டு, கணவனையும் இரு குழந்தைகளையும் கொன்றவர்களை தான் மன்னிப்பதாக அறிவித்தார் கிளாடிஸ். 'மன்னிப்பில் கசப்புணர்வுகள் இல்லை. கசப்புணர்வுகள் இல்லையெனில் அங்கு நம்பிக்கை இருக்கும்' என்று கூறி மன்னிப்பின் மகத்துவத்தை செயலில் காட்டியவர் கிளாடிஸ் ஸ்டெய்ன்ஸ். மன்னிப்பதாக இவர் வெளிப்படையாக அறிவித்திருந்த போதிலும், சட்டம் தன் பாதையில் சென்று ஒரிசா உயர்நீதிமன்றம் வழங்கியிருந்த தாரா சிங்கின் ஆயுள் தண்டனை தீர்ப்பை உச்ச நீதிமன்றம் மீண்டும் உறுதிச் செய்துள்ளது.

'
மன்னிப்பில் கசப்புணர்வுகள் இல்லை. கசப்புணர்வுகள் இல்லையெனில் அங்கு நம்பிக்கை இருக்கும்' என்று கூறி மன்னிப்பின் மகத்துவத்தை செயலில் காட்டியவர் கிளாடிஸ் ஸ்டெய்ன்ஸ்.


இந்த பெருந்தன்மை எங்கே,சம்பவம் நடந்து 7 ஆண்டுகள் கழித்தும் ரிசானாவின் மரணத்தை வேண்டி விரும்பி நின்ற சிறுபுத்தி எங்கே? அங்கே மனிதம் செத்து விட்டது.

அல்லா மீது ஆணையாக கூறுகிறேன், நான் தவறு செய்யவில்லை என்று கூறியும் 17 வயதில் சிறையில் அடைக்கப்பட்டு 7 ஆண்டுகளுக்குப் பிறகு தலையை வெட்டி சாய்க்கப்பட்ட ஒரு சகோதரி ரிசானா விஷயத்தில் கூற்ப்படும் ஒரு விஷயம், அந்த குழந்தையின் பெற்றோர் மன்னிக்கவில்லை எனபது.இந்த விஷயத்தில் சவுதி மன்னர் நினைத்திருந்தால் ராஜ மன்னிப்பு வழங்கியிருக்கலாம்.வழங்கியிருப்பார் ரிசானா அமெரிக்க,ஐரோப்பிய தேசத்தவராக இருந்திருந்தால்.

இந்த சம்பவத்தை நினைக்கும் போது கிளாடிஸ் ஸ்டெய்ன்ஸ் எனும் பெண்மனியின் தியாகம்,பெருந்தன்மை,மன்னிக்கும் குணம் கண் முன்னால் வருவதை தவிர்க்க முடியவில்லை.


பெங்களூருவில் ஒரு அன்னை தெரசா"

பெங்களூரு புறநகர் ரயில் நிலையம்

நிலையத்தின் படிக்கட்டை ஒட்டி நிரம்பிவழிந்த நிலையில் ஒரு குப்பைத்தொட்டி அதன் அருகே, சாப்பிட்டு பல நாளானதன் காரணமாக ஒட்டிய வயிறுடன், உயிரை கண்களில் பிடித்து வைத்துக் கொண்டு, ஒரு தொழு நோய் பாதித்த இளைஞன், தன் பக்கத்தில் வீசியெறியப்பட்ட, அழுகிய வாழைப்பழத்தை எடுத்து சாப்பிட நினைத்து, சிரமப்பட்டு உடம்பால் நகர்ந்து கொண்டு இருந்தான்.

இந்த காட்சியை பார்த்த ஆயிரக்கணக்கான பயணிகள் "உச்' கொட்டி பரிதாபட்டதோடு சரி, யாரும் பக்கத்தில் போகவில்லை, முதல் காரணம் அவசரம், முக்கிய காரணம் இளைஞனின் உடம்பை உருக்குலைந்து கொண்டிருந்த தொழுநோய் ஏற்படுத்திய அருவருப்பு.

இந்த நேரம் ரயிலில் இருந்து இறங்கிய முதுமையான தோற்றம் கொண்ட கிறிஸ்துவ சகோதரி ஒருவர், இளைஞனை பார்த்த மாத்திரத்தில் தன் வயதையும் பொருட்படுத்தாமல் ஒடோடிப் போய் "மைசன்' என்று தூக்கி தனது மடியில் கிடத்திக் கொண்டார், பிறகு பையில் இருந்த உணவை ஊட்டிவிட்டு, குடிக்க தண்ணீர் கொடுத்து, தலையைக் கோதியபடி "யாராப்ப நீ' என்று விசாரித்தார்.

கர்நாடக மாநிலம் மதுரகிரி என்ற ஊரைச் சேர்ந்த ரமேஷ் பாபுவிற்கு தொழு நோய் என்று தெரிந்த உடனே பெற்றோரே வீட்டைவிட்டு துரத்திவிட்டனர். இந்த துரத்தல் எல்லா பக்கமும் தொடர்ந்தது. தொழுநோயும் வளர்ந்தது.

ஒரு கட்டத்தில் நடமாட முடியாத நிலையில், இந்த ரயில் நிலையத்தின் மூலையில் தஞ்சம் அடைந்துள்ளதாக தனது கதையை கூறிய ரமேஷ்பாபு, பெற்ற தாய் கூட தொடத் தயங்கி, துரத்தி விட்ட தன்னை தூக்கி மடியில் கிடத்தி, உணவு ஊட்டிய கருணை தெய்வத்தின் கைகளை பிடித்துக் கொண்டு கதறி அழுதார். அந்த சகோதரியின் விரல்கள் பிடித்து தொழுதார்.

"
நான் வந்துட்டேன்ல, இனி அழக்கூடாது என்று கூறிய சகோதரி, உடனே போன் செய்தார். அடுத்த சில நிமிடங்களில் ஒரு வாகனம் வர, இருவரும் அதில் பயணப்பட்டனர்.

சில ஆண்டுகள் கழிந்தது

இப்போது ரமேஷ் பாபு பெங்களூரு மாநகராட்சியில் சுறு, சுறுப்பாக பணியாற்றும் உதவியாளர். "ரமேஷ்...ரமேஷ்'' என்று அலுவலகமே கூப்பிடுகிறது. கொஞ்சுகிறது. ஒரு காலத்தில் எனக்கு தொழுநோய் இருந்தது என்பதை இப்போது என்னாலயே நம்பமுடியவில்லை. தொழு நோய் முற்றிலும் குணமாகி ைனைவி குழந்தைகள், சொந்த வீடு என்று சந்தோஷமாக இருக்கிறேன் என்கிறார்.

இந்த அதிசயம் எப்படி நடந்தது .

பெங்களூரு பக்கத்தில் உள்ளது சுமன்ன ஹள்ளி; இங்கு அரசின் வேண்டுகோளுக்கிணங்க ஓரு தொழுநோய் இல்லம் ஒன்று, அங்குள்ள கிறிஸ்துவ தொண்டு நிறுவனத்தால் 77ம் ஆண்டு துவங்கப்பட்டது. தொழு நோய் இல்லம் தயராகிவிட்டது, தொழு நோயாளிகளும் வந்துவிட்டனர், ஆனால் அவர்களை பரிவுடன் பார்த்துக்கொள்ள ஒரு அன்புமயமான சகோதரி தேவைப்பட்டார். மாநிலம் முழுவதும் உள்ள சகோதரிகள் அனைவருக்கும் வேண்டுகோள் விடப்பட்டது.

அப்போது சிக்மகளூரில் அரசு பள்ளி ஆசிரியையாக வேலை பார்த்துக்கொண்டிருந்த சிஸ்டர் மேரியின் கைக்கும் இந்த வேண்டுகோள் கடிதம் கிடைத்தது. அடுத்த நிமிடமே தான் பார்த்த அரசு வேலையை தூக்கி எறிந்துவிட்டு, இந்த தொழுநோய் இல்லத்தின் பொறுப்பாளராக சேர்ந்துகொண்டார், இல்லையில்லை அர்ப்பணித்துக் கொண்டார் .

அன்று முதல் இன்று வரை கிட்டத்தட்ட 36 வருடங்களாக இந்த தொழுநோய் இல்லத்தில், கருணையே உருவான தாயாக புன்னகையுடன் வலம் வருகிறார் மேரி.

இல்லத்தில் உள்ள தொழுநோயாளிகளை சரியான மருந்து மாத்திரை கொடுத்து குணப்படுத்துவதும், குணமான அவர்களுக்கு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதும், வேலைக்கு தகுதியில்லாதவர்களுக்கு சிறு கடைகள் அமைத்து கொடுப்பதுமாக, அவர்களுக்கான வாழ்வாதாரத்தை ஏற்படுத்தி தருகிறார், பின்னர் அவர்களுக்கு திருமணம் செய்து வைத்து, குடும்பம் நடத்தவும் ஏற்பாடு செய்து விடுகிறார்.

இப்போது கிட்டத்தட்ட ஐநூறு பேர் பெங்களூரில் உள்ள அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலை பார்க்கின்றனர், அந்த 500 பேரில் ஒருவர்தான் கட்டுரையின் ஆரம்பத்தில் இடம் பெற்ற ரமேஷ் பாபு, 800 பேர்வரை முழுமையாக குணமாகி அரசு கொடுத்த வீடுகளில் வசித்து வருகின்றனர்.அத்தனை பேர் வீட்டு பூஜை அறைகளிலும் தவறாமல் மேரியின் படம் இடம் பெற்றிருக்கிறது.

இப்போது 75 வயதாகும் மேரிக்கு பல மாநில மற்றும் தேசிய விருதுகள் கிடைத்துள்ளது. உண்மையில் இதன் மூலம் விருதுகள் கவுரவம் தேடிக்கொண்டன.,அவரை பொறுத்தவரை "அம்மா, நான் இப்ப நல்ல இருக்கேம்மா'' என்று கைபிடித்து பேசும் முன்னாள் தொழுநோயாளியின் ஆனந்த கண்ணீர்தான் பெரிய விருது.

பெங்களூரில், வாழும் அன்னை தெரசாவாக வலம் வரும் சகோதரி மேரியை வாழ்த்த வயதும், தகுதியும் இல்லாததால் வணங்குவோம்.

-
எல்.முருகராஜ்                                                                                நன்றி: முகநூல்

Comments

  1. வாழ்க்கைக்கு உதாரணமாக இருக்கும் வாழ வேண்டிய வழி சொல்லும் அரிய பெண்கள் பற்றிய சிறப்பான பகிர்வு!

    ReplyDelete
  2. மெய் சிலிர்க்க வைக்கும் பதிவு !
    வாழ்த்துக்கள் !

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!